மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளலாம்: புதிய பாடத் திட்டம் குறித்து செங்கோட்டையன் பெருமிதம்!

கடந்த ஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் கால நிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது.

sengottaian

கோபிச்செட்டிப்பாளையம்: கோபியில் இலவச லேப்டாப் வழங்க வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சரை மாணவிகள் முற்றுகையிட்டனர்

கோபியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

மாணவர்கள் ஸ்மார்ட் கார்டை பேருந்து பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும்…

விரைவில் +1 மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும். ஏற்கெனவே பிளஸ் 2 முடித்தவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

புதிய பாடதிட்டமானது, மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுக்கும் விடை உள்ளது. கடந்த ஆண்டு 210 நாட்கள் பள்ளி நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் கால நிலை மாற்றத்தால் 192 நாட்கள் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது.

புதியதாக 2013 முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என.று அறிவிக்கப்பட்டாலும் 6 ஆண்டுக்கு பிறகு அவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பது கல்வியாளர்கள் கருத்து.

முன்பு இருந்த வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டாலும் அவர்கள் மறு தேர்வு எழுத வேண்டும். வேறு வழியில்லை. மாணவர்களுக்கு கழுத்துபட்டை, ஷூ வழங்கப்படும்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7500 பேர் அதிகமாக உள்ளனர். அவர்களை மற்ற இடங்களுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என தனியாக வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் சலுகை வழங்க முடியாது. காரணம் தேர்வை பொறுத்த வரை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை நீக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.

இருமொழி கொள்கை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் சலுகை வழங்க முடியாது. ஸ்மார்ட் கார்டை மாணவர்கள் பேருந்து பயணத்திற்கு பயன்படுத்துவது குறித்து, முதலமைச்சரிடம் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கு நன்கொடை வழங்கும் தன நபர்களுக்கு வரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அனைத்து வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக் கொண்டு வரப்படும்.

ஆரம்ப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற சங்கம் ஒத்துழைப்பதில்லை.

விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.