தமிழகத்தில் ஐ.டி.ஐ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு சலுகைகளால், ஐ.டி.ஐ., படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 87 அரசு ஐ.டி.ஐ.,களும், 476 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி மோட்டார் மெக்கானிக், பிட்டர், டர்னர் என்று மொத்தம் 63 தொழிற்படிப்புகள் உள்ளன.
ஐ.டி.ஐ.,படிப்புகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க, அரசு இலவச பஸ் பாஸ், லேப்டாப், மாத உதவித்தொகை ரூ.500, சீருடைகள், பயிற்சி புத்தகங்கள், வரை கருவிகள் என்று மொத்தம் 7 இலவசங்களை அறிவித்துள்ளது. மாணவிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது.
இந்த ஐ.டி.ஐ.,படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, இன்று கடைசி நாளாகும். எனவே, இப்படிப்புகளில் சேர்ந்து பலனடையுமாறு, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.