சென்னை:
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை சுமார் 10.50 லட்சம் பேர் எழுதினர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாஇஉம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
தேர்வு எழுதியவர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.
தாற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன் 1ஆம் தேதிமுதல் கிடைக்கும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.