Home இந்தியா வேலை தேடி அலைய வேண்டாம்! வாய்ப்புகள் வீடு தேடி வர…!

வேலை தேடி அலைய வேண்டாம்! வாய்ப்புகள் வீடு தேடி வர…!

national-career-service
national career service

இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை.

வேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது.

நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி வரும்.

இன்றைய போட்டி நிறைந்த காலக்கட்டத்தில், அரசுத் துறைகளில் வேலை பெறுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு கனவாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.

இந்நிலையில், இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளன. இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆனால், எந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்பை நழுவவிட வேண்டியுள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை.

நேஷ்னல்கேரியர் சர்வீஸ்

✅ வேலை இல்லா இளைஞர்களுக்காக, மத்திய அரசு ‘நேஷ்னல் கேரியர் சர்வீஸ்” என்ற வேலைவாய்ப்பு சேவையை, அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் தொடங்க உள்ளது. இதன் மூலம், வேலைதேடும் இளைஞர்களின் தகுதிக்கேற்றவாறு தனியார் நிறுவனங்களில் வேலை ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக தபால் நிலையங்கள் தற்போது மாறிவருகின்றன.

✅ இந்திய தபால்துறையும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இந்த சேவை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவித்தல் முறை :

✅ பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை தபால் துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

✅ வேலை தேடுபவர்கள், தாங்களாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள முடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும்.

எவ்வாறு கிடைக்கிறது?

✅ தற்போது 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் வலைதளத்தில் பதிந்திருக்கிறார்கள்.

✅ தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்களின் விவரங்களை இணையதளத்தில் தபால்துறை பதிவு செய்துவிடும். அதில், அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களின் விவரங்கள் இருக்கும்.

✅ அந்தத் தகவல் தொகுப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள், நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள்.

✅ வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இருவருக்கும் இணைப்புப் பாலமாக தபால்துறை செயல்படுகிறது.

✅ தற்போது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ள ர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் மட்டும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கட்டணம் :

✅ தபால் நிலையத்தில் விவரங்களைப் பதிவு செய்வதற்கு – 15 ரூபாய்

✅ தகவல்களை புதுப்பித்து கொள்ளுவதற்கு – 5 ரூபாய்

✅ பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் நகல் எடுக்க – 10 ரூபாய்
வேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை.

வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களின் நலனில் நமது மாண்புமிகு. #நரேந்திர_மோடி ஜி தலைமையிலான மத்திய அரசு…

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version