Home உள்ளூர் செய்திகள் கோவை 20 முதல் 60 ஆயிரம் வரை ஊதியம்! கடைசி தேதி பிப்ரவரி 1! விண்ணப்பித்து விட்டீர்களா?

20 முதல் 60 ஆயிரம் வரை ஊதியம்! கடைசி தேதி பிப்ரவரி 1! விண்ணப்பித்து விட்டீர்களா?

AVIN MILK
AVIN MILK

கோவை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.65 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கோவை மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : நிர்வாகி

பணியிடம் : கோவை மாவட்டம்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 01.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Coimbatore District Co-operative Milk Producers Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam, Coimbatore – 641010

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 01.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ .250
எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி வேட்பாளர்களுக்கு – ரூ .100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ லிங்க்கை கிளிக் செய்யவும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version