spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபொது தகவல்கள்குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

- Advertisement -

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி என 139 குரூப்-1 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

அரசு அதிகாரி பணியையே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழக இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மொத்த காலியிடங்கள்: 139 
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பதவி: Deputy Collector  – 27
பதவி: Deputy Superintendent of Police  – 56
பதவி: Assistant Commissioner (C.T.)  – 11
பதவி: Deputy Registrar of Co-operative Societies – 13
பதவி: District Registrar  – 07
பதவி: Assistant Director of Rural Development – 15
பதவி: District Employment Officer – 08
பதவி: District Officer (Fire and Rescue Services)  – 02
சம்பளம்: மாதம் ரூ.56100 – 1,77,500 

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 37 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி ஆணையர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பில் சலுகைகோருபவருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கட்டணம் விவரம்: முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவுக் கட்டண முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த தேவையில்லை. சில பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையம்: சென்னையில் மட்டும் தேர்வு நடத்தப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnspc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.02.2019 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019 அன்று நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு தேதி  பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe