தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தடகளப் பணியாளர் (Gangman) பணிக்கு 5000
காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழக மின்சார வாரியத்தில் உதவி
பணியாளர் அல்லது தடகளப் பணியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.

காலிப் பணியிட விவரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 5000
பணியிட பதவி பெயர் (Post Name)  :Gangman (Trainee)- தடகளப்பணியாளர் அல்லது உதவி பணியாளர்

கல்வித் தகுதி:தமிழ் வழியாக கல்வித் திறன் பெற்றிருக்க  வேண்டும். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள்  குறைந்தது 5-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

பணியிடங்கள்: கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னை

வயது வரம்பு: அதிக பட்சமாக 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம்: மாதம் ரூ. 15,000

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான இந்த  பணியிடத்திற்கு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000 கட்டணமும், இதர மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடத்திற்காக முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும்,

பிறகு நேர்முக தேர்வு நடத்தப்படும். அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22 ஏப்ரல் 2019.

மேலும் விவரங்கள் அறிய  www.tangedco.gov.in என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...