ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0

இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் 07.04.2019-லிருந்து 22.04.2019 வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணிகள்:

(மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு)
ஜூனியர் ஸ்டெனேகிராஃபர்
சட்ட உதவியாளர்
தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகள்

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 1,665 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2019

ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 28.04.2019

ஆப்ஃலைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 26.04.2019, மதியம் 01.00 மணி
விண்ணப்பத்தை ஆன்லைனில் முழுமையாக சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.04.2019

கணினி வழித்தேர்வு ஜூன் – ஜூலை 2019 இல் நடைபெறும்.

தேர்வுக்கானக் கட்டண விவரம்:

  1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் – 500 ரூபாய்

  2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) – 250 ரூபாய்

குறிப்பு:

முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வரை இருத்தல் வேண்டும். பணிகளை பொறுத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

ஊதியம்:

குறைந்த பட்சமாக ரூ. 19,900 முதல் அதிகபட்சமாக ரூ.47,600 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

கணினி வழித்தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித் தகுதி:

மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவில் உள்ள பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட வகையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கு, https://chennai.rly-rect-appn.in/rrbmic2019/ – என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
http://www.rrbcdg.gov.in/uploads/cen_03_2019_eng.pdf & http://www.rrbcdg.gov.in/uploads/CEN-03_2019_Notice.pdf – என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...