இன்று கடைசி தேதி ! கர்நாடாகா வங்கியில் வேலை !

கடைசி தேதி: 20.07.2019t

கர்நாடகா வங்கியில் நிரப்பப்பட உள்ள புரபஷெனரி கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 20) கடைசி நாளாகும்.

பணி: Probationary Clerks

சம்பளம்: மாதம் ரூ.37,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2019

தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தில்லி, தர்வாத், ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் மைசூர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.karnatakabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2019t

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...