கடந்த பாதை ! அருண் ஜேட்லி !

ஹைதரபாத் பயணத்தில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு தற்போது டெல்லி திரும்பிக்கொண்டிருக்கிறார்


file pic

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி. இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.

கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டில்லியில் 1952 டிச., 28ல் பிறந்தார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏ.பி.வி.பி.,) தலைவராக இருந்துள்ளார்.டில்லியில் பல்கலையில் படிக்கும் போது, மாணவர் தலைவராக இருந்துள்ளார். பி.காம்., மற்றும் சட்டம் முடித்தவர்.

மாணவர் பருவத்தில் கல்வியில் சிறந்து விளங்கினார். இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையால் மாணவரணி தலைவராக இருந்த ஜேட்லி கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் விடுதலையாகி பாஜகவில் பல்வேறு பதவிகளில் அலங்கரித்தார். ஊழலுக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாரயணன் போராட்டத்தில் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவராக விளங்கினார்.

ஜன சங்கத்தில் சேர்ந்த இவர், 1977 முதல் 1980 வரை டில்லி பகுதி ஏ.பி.வி.பி., தலைவராக செயல்பட்டார். கணக்கு தணிக்கையாளராக (சி.ஏ.,) விரும்பினார். ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியாததால், வழக்கறிஞர் துறையில் கவனம் செலுத்தினார். உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

1989ல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். 1990ல் டில்லி உயர்நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு: டில்லி கிரிக்கெட் சங்க தலைவர், பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் மற்றும் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சிலில் உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசு செயல்படுத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மோடியின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம்பெறவில்லை. இதுதொடர்பாக, தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

அருண் ஜெட்லி மத்திய அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இருந்தே அவரது உடல்நிலையில் சிக்கல் நீடித்தது. இதனால், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில்தான் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெட்லி.

file pic

அவரது உடல்நிலை பற்றி ஆகஸ்ட் 10-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் பா.ஜ.க-வை சேர்ந்த பல தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜெட்லியை நேரில் சந்திக்கச் சென்றனர். அப்போதே ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.

உடல்நிலை சீராக உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 10-ஆம் தேதி தெரிவித்திருந்தார் இந்நிலையில் கடந்த 15 நாள்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 12.07 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அருண் ஜெட்லி உயிரிழந்ததை அடுத்து ஹைதரபாத் பயணத்தில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு தற்போது டெல்லி திரும்பிக்கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடியும் விரைவில் இந்தியா திரும்புவார் என பா.ஜ.க வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.

அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தார்.-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...