18/09/2020 12:43 PM

விதவிதமாய் விநாயகர் உருவங்கள்! நாணயங்களில்! வெளிநாட்டிலும் கூட!

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.

சற்றுமுன்...

மதுரையில் அதிர்ச்சி: அரிவாளால் வெட்டி வழிப்பறி! (சிசிடிவி காட்சி)

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம்

அயோத்திக்கு ராமேஸ்வரத்தில் இருந்து அனுப்பி வைக்கப் பட்ட பெரிய மணி, விக்ரகங்கள்!

நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் கொடியசைத்து ரதயாத்திரையை தொடங்கி வைத்தனர்.

கோசி ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

அயோத்தியில் திருப்பதி பெருமாள் கோயில் கட்ட… யோகியிடம் கோரிக்கை!

அயோத்தியில் ஸ்ரீவாரி ஆலயம் அமைக்க யோகி அரசாங்கத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
vinayakar coin1

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் காசுகளில் கணபதி கண்காட்சி முதன்முறையாக திருச்சியில் நடைபெற்றது.

கண்காட்சியில் சங்க காலத்திற்கும் நவீன காலத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் வெளிவந்த விநாயகர் உருவம் பொறித்த காசுகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விநாயகர் உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. இவை காசுகளின் தொன்மையையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும், பொருளாதாரத்தையும், சமயத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

விநாயகர் உருவத்தில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், நர்த்தன விநாயகர், ஐந்து கரம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு வாகனத்துடன் கூடிய விநாயகர், நாகபாரணம் அணிந்த விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், நின்ற நிலை விநாயகர் என காசுகளில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

மதுரை நாயக்கர், செஞ்சி நாயக்கர், வேணாடு சேரர், ரகுநாத நாயக்கர், செவ்வப்ப நாயக்கர், ஆற்காடு நவாப் உள்ளிட்ட ஆட்சிகாலத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன் பொறித்த காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளது.

vinayakar coin2

அதில் விநாயகர் உருவம் பொறித்த காசுகளை காட்சிப்படுத்தியது நாணயவியல் ஆர்வலர்களிடமும், பார்வையாளர்களிடமும் பரவசத்தை ஏற்படுத்தியது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் நாணயவியல் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர், பாண்டியன், ரமேஷ் உள்ளிட்டோர் கணபதி காசுகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.

vinayagar coin14

பணத்தாள் முன்பக்கம் விநாயகரும், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான தேவேந்திரா படமும், பின்பக்கத்தில் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயிலும் படமும் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பத்துப்பாட் மதிப்புள்ள நாணயத்தில் விநாயகர் இடம் பெற்றுள்ளது. ஒரு டாலர் துவாலு நாட்டின் நாணயம் ஆஸ்திரேலியா அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் உறையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

செயலர் குணசேகர், பொருளாளர் அஜிஸ், திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சார்லஸ், திருச்சிராப்பள்ளி தபால்தலை சேகரிப்பு கிளப் நிறுவனர் நாசர், ஹாபீஸ் அமைப்பின் நிறுவனர் மதன், கமலக்கண்ணன், சந்திரசேகரன், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

  • யோகா விஜய், திருச்சி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

திமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார்? நீளும் வார்த்தைப் போரின் பின்னணி!

அவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

ஒரு ஸ்மைல்… அழகாய் புடைவை கட்டி… கலக்கும் வாணி போஜன்!

இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »