பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல் ஆறுதல்!

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

kamal subasree house1

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து அதனால் சாலையில் தடுமாறி விழுந்து லாரி மோடி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்யின் குடும்பத்தாரை சந்தித்து, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் சாலையின் நடுவே கட்டப் பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பெயர்ந்து விழுந்ததால், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் சுபஸ்ரீ நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அவர் பின் வந்த தண்ணீர் லாரி, இளம்பெண் சுபஸ்ரீ மீது மோதியது.

kamal subasree house

இந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இது தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை இன்று இரவு குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ குடும்பத்தைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஆறுதல் கூறினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இல்லையேல் மக்களே அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மக்களுடன் மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும் என்றார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :