November 27, 2021, 5:13 am
More

  கீழடியா? தசாவதாரத்தின் முதல் அவதாரம் நிகழ்ந்த… ‘வைகைச் சமவெளி’ நாகரீகமா?!

  2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்த தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை...!

  mathsya avathar - 1

  மதுரை என்று இன்று நாம் குறிப்பிடும் கூடல் நகர், புராண காலப் பெருமை மிக்கது. நம் புராணங்களின் படி பார்த்தால், கூடல் நகரே, மனித நாகரீகத்தின் முதல் தொட்டில் என்று சொல்லலாம்.

  நான்கு யுகங்கள். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்களைக் குறிப்பிடுகின்றன நம் புராணங்கள். இவற்றில் இந்த நான்கு யுகங்களும் முடியும் கால கட்டத்தில், ஒரு பிரளயம் எழுந்து, அனைத்தும் அழிந்து, பிறகு மீண்டும் உயிர்கள் ஒவ்வொன்றாகத் தழைக்கும் என்கின்றன இந்து மத புராணங்கள்.

  இப்படி நாகரீகத்தின் உச்சத்தில் திகழ்ந்த கூடல் நகரான மதுரையில் ஆட்சி செய்து வந்த அரசன் சத்தியவிரதன் என்பவன், ஒரு நாள் வைகை நதியின் துணை நதியான கிருதமால் நதியில் வழிபாடு செய்த போது, அவன் கையில் ஒரு சிறு மீன் வந்து விழுந்தது. அது பின்னர் மிகப் பெரிதாக வளர்ந்து, அந்த யுகத்தின் தொடக்கத்தை அவனுக்கு உணர்த்தி, உயிரினங்களில் ஒவ்வொன்றின் மாதிரிகளை எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டு, படகில் ஏறிச் செல்லுமாறு கூறியதாக புராணம் தெரிவிக்கிறது.

  இந்த கிருதமால் நதியை இப்போதும் மதுரைக்காரர்கள் அடையாளம் காட்டுவார்கள். மதுரை நகரின் கோச்சடை, அச்சம்பட்டு, டோக் நகர் என வைகைக் கரையோரம் வருகின்ற சிறு ஓடையாக உள்ளது அந்தக் கிருதமால் நதி. இதுவே, புராணங்களின் முதல் வித்தான தசாவதாரத்தின் முதல் அவதாரமான மத்ஸ்ய எனும் மீன் அவதாரம் நிகழ்ந்த நதி.

  kizhadi - 2

  இந்த நதியை ஒட்டியே பிற்காலத்திய தசாவதார நிகழ்வுகள் எழுந்தன. இப்படி முதல் அவதாரமான மீன் அவதாரம் நிகழ்ந்த மதுரை மனித நாகரீகத்தின் முதல் வித்து என்கின்றன நம் நாடு முழுமைக்கும் போற்றப் படக் கூடிய இந்து புராணங்கள். இந்த மதுரையும், கிருதமால் நதியும், அடுத்த வைகையுமே ஹிந்து மதத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம்.

  அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மண்ணில், அதற்கு எத்தனை வருடம் முன்பேயோ மூத்த குடியாக விளங்கியது நம் தமிழ்க் குடி. அதனால் தான், தமிழத் தாயைப் போற்றும் போது, இவள் என்று பிறந்தனள் என்றுணராத இயல்பினள் என்று பாடினார் பாரதி. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என தமிழ்க் குடியைச் சொன்னார்கள்.

  இந்தத் தமிழ்க் குடியில் வந்த அரசனே சத்தியவிரதனாய்த் திகழ்ந்தான். அவனே திருமாலை வழிபட்டு மீன் அவதாரம் நிகழவும் ஒரு கருவியாய் இருந்தான். இந்த மண்ணில்தான், தலைசிறந்த நாகரீகம் வாழ்ந்திருக்கிறது.

  இப்போது, இந்த வைகைக் கரை நாகரீகத்தின் பிற்காலத்திய படிமங்களான கீழடி அகழ்வாய்வில், ஏதோ சில பொருள்கள் கிடைத்தன, குறிப்பாக மண் பானை ஓடுகள் கிடைத்தன என்று சொல்லி, தங்கள் மனம் தீர்மானித்திருந்ததை நிறுவ ஒரு சிலர் பாடாய்ப் படுகிறார்கள்.

  இன்னமும் தொடக்க நிலையிலேயே இருக்கும் கீழடி அகழ்வாய்வின் தொடக்கத்திலேயே, அதன் நிறைவுப் பகுதி இப்படியானதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாற்போல் பலர் பேசிக் கொண்டிருப்பதால், நுனிப் புல் மேய்வதே தமிழனின் இயல்பு என்று வரலாறு நம்மை முத்திரைகுத்தி விடக் கூடாது என்பதற்காக, மேலும் மேலும் ஆய்வுகளை நடத்தி, நம் உண்மைத் தமிழர் நாகரீகமான தெய்வத் தமிழர் அம்சத்தை வருங்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். எனவே இந்தக் கீழடி குறித்த ஆய்வுகளை மேலும் நாம் தொடருவோம்.

  இது குறித்து நிலவு இயல் ஆய்வு அறிஞர்களின் தரவுகளைக் கொண்டு, புகழ் மச்சேந்திரன் என்பவர் கொடுத்துள்ள சில தகவல்களைப் பார்ப்போம்…

  #கீழடி_முழுமையான_ஆய்வுதேவை கீழடி நாகரிகம் என்ற பெயரில் அரைகுறை மோசடி அறிவிப்பு… முதலில் இது கீழடி நாகரீகம் அல்ல, வைகை சமவெளி நாகரீகம்…

  சிலைமான் என்ற ஊரிலிருந்து, கடலில் கலக்கும் இடம் வரை, வைகை தனது போக்கை பல திசைகளில் மாற்றிக் கொண்டுள்ளது. அதற்கேற்றார் போல பழந்தமிழர் நகரங்களும் அந்தந்த திசை / வைகையின் தொல் தடங்களில் இருந்து, பின் மண்ணுக்குள் புதையுண்டிருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

  எனவே, கீழடி, கீழடி என்று முக்கி முனகாமல், வைகைச் சமவெளி தமிழனின் நாகரீகத்தை முழுவதும் வெளிக்கொணர, மாரநாடு, மணலூர், மூதூர், கொந்தகை, பசியாபுரம், அக்ரகாரம், சக்குடி, சிலைமான் போன்ற பகுதிகளையும் முழுதாக, அறிவியற் பூர்வமாக, ஆய்வுக்குட்படுத்திய பின்னரே வைகை நாகரீக தொன்மையை, சிறப்பை உலகிற்கு தெரிவிக்க வேண்டும்.

  குறைந்த பட்சம் 10000 வருடம் பழமையான தமிழனின் தொன்மையை சொல்வதை விட்டு விட்டு, 2500 வருட கதை என கரடி விடுவதை தமிழக தொல்லியல் இலாகா தவிர்க்கலாம்.

  மாறநாடு போன்ற பகுதிகளில் ஆய்வின் போது நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன அடுத்து, சக்குடியில் ஒரு பெருமாள் கோயில், ஒரு சிவன் கோயில் இரண்டும் வெள்ளப்படிவுகளுக்கடியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. அந்த கோயில் தூண்கள் கள்ளழகர் கோயில் கற்ப கிரகத்தின் பின்னே உள்ள சிற்பங்கள் போலவே உள்ளன.கீழடியிலேயே சற்று புதையுண்ட நந்தி, அய்யன் சிலைகள் வெளி தெரிகின்றன.. மாறநாட்டில், சுமார் 1500 – 2000 ஆண்டு பழைய சமணர் சிலை, உடலெங்கும் விபூதி பட்டை பூசப்பட்டு பொது மக்களால் இன்றும் வழிபட்டு வரப்படுகிறது.

  இவங்கள்ளாம் யாரு ஏசப்பா வழித்தோன்றல்களா, அல்லது அண்ணல் நபிபிகளின் மூத்த முமின்களா, மலக்குகளா அல்லது திராவிட பெரியாரின் தந்தைகளா?

  கீழடியிலும் நூற்றுபத்து ஏக்கரில் ஐந்தாறு ஏக்கர் நிலத்தில் தான் குழி வெட்டி பார்த்திருக்கிறார்கள். “ஆய்வு” செய்யவில்லை…அதிலும் 23 மீட்டர் ஆழம் தோண்ட வேண்டிய இடத்தில் வெறும் ஓன்றரை மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியைள்ளனர்…

  நம்முடைய கோரிக்கைகள் இவை தான். பத்தாயிரம் ஆண்டு பழமையான வரலாறு இன்னும் அடியில் புதைந்திருக்க வெறும் 2500 வருட தமிழனின் பெருமை என பொய்யான பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும்..

  வைகை சமவெளி நாகரீகம் முழுவதும் உண்மையான முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தபடுத்தபட வேண்டும்.. அதற்கு தகுதியான ஆய்வாளர்களை கொண்டு அதிகாரிகளை கொண்டு முழுமையாக நிதி ஒதுக்கி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்..

  முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வந்த பிறகே முதல்வரை கொண்டோ அதற்க்கு இணையானவர்களை கொண்டோ தமிழனின் பழமையான பாரம்பரியத்தை அறிவிக்க வேண்டும்..

  முழு ஆய்வும் நிறைவடையாமல் கடவுள் வழிபாடு இல்லை,அது சம்மந்தமான பொருட்கள் கிடைக்க வில்லை என்ற போலியான பொய்யான தகவல்களை பரப்புவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்..இது சம்மந்தமாக தவறான வரலாற்று தகவல்களை பரப்பும் திரிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

  உண்மையான வரலாறு எந்த திரிபும் இல்லாமல் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும்… தமிழில் முத்தைத் தரு…னு அருணகிரிக்கு அடியெடுத்துத் தந்தான் முருகன். “கொங்குதேர் வாழ்க்கை” என தருமிக்கு பாட்டே எழுதித்தந்தான் சிவன்.

  ’உலகெலாமுணர்ந்து…’ சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்ததும் அந்த ஈசனே.. அபிராமி பட்டரின் குரலுக்கு குரலுக்கு முழு நிலவாக காட்சி தந்ததும் அம்பாளே. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடிய அரங்கில் குமரகுருபரருக்கு மீனாட்சி குழந்தையாக வந்து முத்துமாலை பரிசாக் கொடுத்தாள்.

  பக்தி இலக்கியம் என்கிற தனிப்பிரிவே உலகில் தமிழில் மட்டும்தான் உண்டு. ஆனா தமிழனுக்கு மதமே இல்லையாம்….

  தேனூரில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில், கருவேல மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் தூருக்கு அடியில் இருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்துவர, அதனை எடுத்து சிறுவர்கள் விளையாடத் தொடங்கினார்கள். உள்ளே விரல் அளவு கனம் கொண்ட கட்டிகள் இருப்பது தெரிந்ததும் விஷயம் பரவியது. அவை அத்தனையும் தங்கக்கட்டிகள். சுமார் முக்கால் கிலோ எடையுள்ள தங்க கட்டிகள்.

  தங்கக்கட்டிகள் புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல், பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக்
  கட்டியை நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில் பொறிக்கப்பட்டிருந்தது எழுத்துக்கள் தான்.

  ஏழு தங்கக்கட்டிகள் தமிழ் பிராமியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது ஏழிழும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் ‘கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள்துறை மதிப்பிட்டுள்ளது.

  இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட
  தங்கக்கட்டி, இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது. 
  (,படம் கீழே)

  dhenur gold - 3

  2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்த தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை…!

  தங்க கட்டி கோதை என்பது திட்டமிட்டு அமுக்கப்பட்டது.. அதே போல் கோவலன் பொட்டல் என்ற பகுதியில் முழு எலும்புக்கூடு கிடைத்துள்ளது. அந்த பகுதி சுடுகாடும் அல்ல…கோவலன் பொட்டல் என்பது சங்க கால சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய பகுதி…

  அந்த எலும்புக்கூடும் என்ன ஆயிற்று என்று தெரியலை…மேற்கண்ட பகுதிகளில் வேறு எந்த ஆய்வும் நடத்தப்படவும் இல்லை… இதெல்லாம் 100ல் ஒரு பங்கு மட்டுமே…மிக பெரிய அளவில் அங்கு பல பகுதிகளில் வெவ்வேறு ஊர்களில் புதையுண்டு உள்ளது. ஆனால் கீழடி கீழடி என அங்கு மட்டுமே நம்மை திசை திருப்புகின்றனர்….

  10000 ஆண்டு பாரம்பரியத்தை வெளிக்கொணராமல் வெறும் 2500 ஆண்டு பழமையானது தமிழ் நாகரிகம்.. அங்கு மத வழிபாடு இல்லை என்று மட்டும் சுருக்கும் வேலை நடைபெறுகிறது… நாம் சொல்ல விரும்பவது … இது கீழடி நாகரிகம் அல்ல…வைகைநதி நாகரீகம்…

  வைகை நதி தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் சரியான ஆய்வாளர்களை கொண்டு விரிவான அகழ்வாராய்ச்சி செய்து முழுமையான அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்பதே… #வைகைநதி_நாகரீகம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,110FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-