December 7, 2021, 5:46 am
More

  95ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.,! நாகபுரி விஜயதசமி விழா!

  rss live stream - 1

  ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு இன்று 95ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை ஒட்டி நாகபுரியில் நடைபெறும் விஜயதசமி விழாவில் பிரபல தொழிலதிபர் சிவநாடார் கலந்து கொண்டிருக்கிறார்.

  மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் ஆகியோர் பங்கேற்றனர்.

  1925ல் விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ்., என்ற அமைப்பு. மராட்டியரான டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவாரால் தேசத்தின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரப் போராட்டத்தின் போது இளைஞர்களை பாரத கலாசாரத்தின் அடிப்படையில் ஒன்றிணைப்பதற்காகவும் தொடங்கப்பட்டது.

  இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 95வது ஆண்டில், இன்று நடைபெறும் விஜயதசமி நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சிவநாடார் கலந்து கொண்டு பேசினார்.

  பின்னர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் ஜி பாகவத் பேசியவற்றில் இருந்து… சில துளிகள்…

  சமுதாயத்தில் நடைபெறும் சில சம்பவங்களை lynching என்று கூறுவதன் மூலம் பாரதத்தின் பெருமைகளை குலைத்து, சிறுபான்மையினர் என்று அழைக்கப் படுவோர் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஊட்ட சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்

  துரதிருஷ்டவசமாக சமூக ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் இன்னும் முழுமையாக இல்லை. சாதி , மொழி, இறை நம்பிக்கை, பிராந்தியம் போன்றவைகளை பயன்படுத்தி சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்த நினைக்கிறார்கள்.

  சில காலமாக பாரதத்தின் எண்ண ஓட்டத்தில் நல்லதோர் மாற்றம் தெரிகிறது, பாரதம் வளர்ந்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் நாட்டில் உள்ள சில சுயநல சக்திகளுக்கும், உலகில் சிலருக்கும் அச்சத்தை தருகிறது. எனவே வலிமையான உருவாவதை இவர்கள் விரும்புவதில்லை.

  நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திராயனின் விக்ரம் கருவியை தரையிறக்கியதன் மூலம் பாரத விஞ்ஞானிகள் தங்களது திறமையினை உலகிற்கு பறை சாற்றினார்கள்.

  நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திராயனின் விக்ரம் கருவியை தரையிறக்கியதன் மூலம் பாரத விஞ்ஞானிகள் தங்களது திறமையினை உலகிற்கு பறை சாற்றினார்கள்.

  சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தியது போன்ற செய்திகள் அவ்வப்போது வருகிறது. ஒரு சமுதாயம் மட்டுமே இதை செய்யவில்லை, இரு தரப்பில் இருந்தும் இது நடக்கிறது. இது நமது பண்பாட்டிற்கு ஒவ்வாத செயல்

  கருத்து வேறுபாடுகள் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே தீர்வு காண வேண்டும். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

  சமுதாயத்தில் உள்ள ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தியது போன்ற செய்திகள் அவ்வப்போது வருகிறது. ஒரு சமுதாயம் மட்டுமே இதை செய்யவில்லை, இரு தரப்பில் இருந்தும் இது நடக்கிறது. இது நமது பண்பாட்டிற்கு ஒவ்வாத செயல்

  கருத்து வேறுபாடுகள் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே தீர்வு காண வேண்டும். காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

  சமுதாயத்தில் அமைதி நிலவ தேவையான அனைத்து முயற்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

  சில விஷயங்கள் நீதிமன்றத்தில் மூலமே தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. நீதிமன்றத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், சமுதாயத்தில் நல்லெண்ணத்தை குலைக்கும் வகையில் எதுவும் செய்யவோ, பேசவோ கூடாது. இது எல்லா சமுதாயத்திற்கும் பொருந்தும்.

  சுதேசித்தன்மை என்பது தேசபக்த உணர்வு என்று தெங்கிடி ஜி குறிப்பிடுகிறார். எனவே சுதேசி தன்மையை நாம் மறக்ககூடாது

  இந்த விஜயதசமிக்கு முந்தைய ஆண்டு , ஸ்ரீ குருநானக் அவர்களின் 550வது ஆண்டு, மஹாத்மா காந்திஜியின் 150வது பிறந்த தினம் என பல சிறப்புக்கள் கொண்டதாக அமைந்தது

  தத்தோத்பந்த் தெங்டி ஜி அவர்களின் நூறாமாண்டு பிறந்தநாள் விழா நவம்பர் 10 அன்று துவங்குகிறது.

  உயர்பதவிகளில் உள்ளோர் தெரிவிக்கும் கருத்துக்களை திரித்து மக்களை குழப்புகிறார்கள். சரியான விஷயங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்து சொல்வதன் மூலமே இவர்களை தடுக்க முடியும்.

  அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில், அதிகமான கடுமைகளை தவிர்த்து, திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும்.

  உயர்பதவிகளில் உள்ளோர் தெரிவிக்கும் கருத்துக்களை திரித்து மக்களை குழப்புகிறார்கள். சரியான விஷயங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்து சொல்வதன் மூலமே இவர்களை தடுக்க முடியும்.

  ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஹிந்து என்ற சொல் மதம் என்ற குறுகிய வட்டத்தில் பார்க்கும் தவறான சிந்தனை குழப்பம் விளைவித்து வருகிறது. அதனால் சிலர், பயத்தினாலோ, தயக்கத்தினாலோ, ‘பாரதிய’ , ‘Indic’ போன்ற சொற்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். சம்ப்ரதாயம் , வழிபாடு முறை, உணவு, பழக்கவழக்கங்கள், மொழி, மாநிலம் வேறாக இருந்தாலும் அனைவறையும் தனதாக கருதி ஆர்எஸ்எஸ் பணி செய்கிறது. அனவறையும் தனதாக பார்ப்பது தான் ஹிந்துத்வா.

  பெண்களை தாயாக போற்றும் பாரதத்தில், பெண்களின் மானத்தை காக்க போர்கள் நிகழ்ந்த இத்தேசத்தில், மானத்தை காத்துக்கொள்ள தீயில் குதித்த தியாக பெண்கள் வாழ்ந்த இந்த பூமியில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை ஒரு அவமானமாகும்.

  நம் கலாச்சாரத்தின் புனிதம் மற்றும் ஒழுக்கம் குறித்து ஆண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இது அவர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்தே குடும்பத்தினரால் அளிக்கப்பட வேண்டும்

  நமது தாய்மார்கள் சிறந்த அறிவாற்றலுடனும், சுயசார்புடனும், தங்களை காத்து கொள்ளும் வகையிலும் நாம் தயார் செய்ய வேண்டும்.

  கடந்த 94 ஆண்டுகளாக சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் மக்களுக்குள் பரஸ்பர நன்மதிப்பு, நல் ஒழுக்கம், தேசபக்தி, தெளிவான சிந்தனை ஏற்படுத்தவே சங்கம் வேலை வேலை செய்து வருகிறது.

  ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமுதாய சேவை அனைவர்க்கும் சங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சங்க தொடர்புக்கு இன்னும் வராதவர்கள் மத்தியில் ஒரு அச்சம், அவநம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன

  ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே சங்கம் செய்கிறது, ஆனாலும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் சங்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். இதற்கு பின்னால், சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த விரும்பும் சக்திகளே உள்ளன

  சங்கத்தின் பார்வையில் ஹிந்து என்பது ‘ஹிந்துக்கள்’ என்று தங்களை குறிப்பிடுவோரை மட்டும் அல்ல. யார் யாரின் முன்னோர்கள் எல்லாம் இங்கு இருந்தார்களோ, யாரெல்லாம் தேசம் உயர்வடைய உழைக்கிறார்களோ, அமைதியை நிலைநாட்ட அனைவருடனும் கைகோர்த்து ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். அவர்களின் இறை நம்பிக்கை, மொழி, உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் சரி.

  வலிமையான, ஒழுக்கமான, நற்பண்புகளை கொண்ட ஹிந்துக்களை சங்கம் உருவாக்கி வருகிறது. இது யாரை கண்டும் அஞ்சாது, யாரையும் பயமுறுத்தாது, மாறாக பலவீனமானவர்களை காக்கும்.

  சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய புதிய அரசு எடுத்த முடிவு, அதற்கு இருக்கும் மனஉறுதி, மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கும், உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பு மற்றும் தேசநலனில் உள்ள அக்கறை ஆகியவைகளை நிரூபிக்கிறது.

  சட்டப்பிரிவு 370-ன் காரணமாக அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் போது தான், இதற்கான முழு பலன் கிட்டும்.

  சட்டப்பிரிவு 370-ஐ திறமையாக செயல்பட்டு, பொதுமக்களின் உணர்வுகளுக்கு இசைந்து, இரு அவைகளிலும் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற்று, சரியான அணுகுமுறையோடு செயலாற்றியதற்கு, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு பாராட்டுக்கள்.

  அநியாயமாக விரட்டியடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்பட்டு, அச்சமின்றியும், பாதுகாப்பாகவும், தேசப்பற்றுடனும், ஹிந்துவாகவும் அவர்கள் வாழும் போது தான் இது நடக்கும்.

  சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் தங்கள் சொத்துகளுக்கும், வேலைகளுக்கும் பாதுகாப்பில்லை என்று அவர்கள் மனதில் எழுந்துள்ள தவறான எண்ணத்தை போக்க வேண்டும். இந்த அச்சங்கள் நீங்கினால்,அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு செய்யவேண்டிய கடமையை பிற மாநில மக்களுடன் இசைந்தும் மேற்கொள்வார்கள்.

  ஜனநாயகம் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரவில்லை, மாறாக நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம், சுதந்திரத்திற்கு பிறகு கிடைத்த அனுபவம், அறிவாற்றல் காரணமாக வாயிலாக நம் தேசிய எண்ணோட்டத்தில் இயல்பாகவே கலந்து விட்டது

  ஜனநாயகம் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரவில்லை, மாறாக நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம், சுதந்திரத்திற்கு பிறகு கிடைத்த அனுபவம், அறிவாற்றல் காரணமாக வாயிலாக நம் தேசிய எண்ணோட்டத்தில் இயல்பாகவே கலந்து விட்டது

  உயர்மட்ட அளவில் ஊழல் இல்லையென்றாலும், கீழ் மட்டத்தில் இது நடந்துக்கொண்டு தான் உள்ளது. பல தடுப்பு சட்டங்கள் கொண்டு வந்தாலும் தவறு செய்பவர்கள் அவைகளை வளைத்து தப்ப முயற்சிக்கிறார்கள், நேர்மையானவர்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

  ஊழல், லஞ்சம் ஒரு வக்கிரமான செயல். இளம்வயது முதலே வீடுகளில் குழந்தைகள் மாத்தியில் இது குறித்து விழிப்புணர்வு அளித்து வந்தால் மட்டுமே, மாற்றம் ஏற்படும்

  கடந்த 94 ஆண்டுகளாக சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் மக்களுக்குள் பரஸ்பர நன்மதிப்பு, நல் ஒழுக்கம், தேசபக்தி, தெளிவான சிந்தனை ஏற்படுத்தவே சங்கம் வேலை வேலை செய்து வருகிறது.

  உலகிற்கு பாரதம் அத்தியாவசியமானது. பாரதம், தனது கலாசாரத்தின் அஸ்திவாரத்தின் ஆதாரத்தில் பலமான தேசமாக நிற்கவேண்டும். இந்த இலட்சியத்திற்காக நல்லிணக்கம், நன்னடத்தை கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அதற்காக அரும்பணியாற்றி வருகின்றனர்.

  Outsource செய்யாதீர்கள் வலிமையான பாரதத்தை உருவாக்கும் பணியை சில அமைப்புகளோ, சில தனிநபர்களோ பார்த்து கொள்வார்கள் என்று வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது. தேச முன்னேற்றம், சமுதாயப்பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகியவை Outsource செய்யமுடியாது. விழிப்புணர்வுடைய சமுதாயத்தின் தன்னலமற்ற, நேர்மையான , தகர்க்க முடியாத ஒற்றுமையுடைய பங்களிப்பு இல்லாமல் நிரந்தர மாற்றம் ஏற்படாது.

  விழிப்புணர்வுடைய,தன்னலமற்ற, நேர்மையான , தகர்க்க முடியாத ஒற்றுமையுடைய சமுதாயத்தினை உருவாக்கும் ஒருங்கிணைப்பாளர்களை தயார் செய்யும் பணியில் ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்தப் பணிதான் நம் குடும்பம், நாடு மற்றும் உலகம் மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும்.

  Rashtriya Swayamsevak Sangh – Vijayadashami Utsav 2019 – Live Stream

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,807FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-