Home இந்தியா கத்ரி கோபால்நாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

கத்ரி கோபால்நாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் இன்று காலை, கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலமானார்.

ுகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக் குறைவால் இன்று காலை, கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலமானார்.

2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் இவர். பல்வேறு மேடைகளில் சாக்ஸபோன் இசையைப் பிரபலப் படுத்தியுள்ளார் . சென்னை மார்கழி சீஸன் இசை விழா உத்ஸவத்தில் இவரது கச்சேரிகள் களை கட்டுபவ.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் இவர். சாக்ஸபோன் இசையை கர்நாடக சங்கீதத்தில் புகுத்தி அதற்கு தனியிடம் பெறச் செய்த இவர், சினிமாவிலும் கர்நாடக பாணியிலான சாக்ஸபோன் இசையை வாசித்து, அதற்கு மேலும் புகழ் சேர்த்தவர்.

டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘டூயட்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை, உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பெற்று, இன்றளவும் மறக்க இயலாத இசையாக நிலை கொண்டுவிட்டது.

இன்று காலை உடல் நலக் குறைவால் காலமான சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமரின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ள இரங்கல் செய்தியில் கர்நாடக சங்கீதத் துறையில் கத்ரி கோபால்நாத்தின் பங்கு மிகப்பெரியது; கர்நாடக இசை உலகுக்கு மிகப் பெரும் பணியாற்றியவர். அவரது பணி கண்டங்களைக் கடந்து உலகில் பிரபலமானது. அவரது திடீர் மறைவு வேதனையைக் கொடுத்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version