29 C
Chennai
24/10/2020 12:24 PM

பஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...
More

  சாஸ்தா கோவில் நீர்த் தேக்கத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

  திறக்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவதாக

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  ஊத்தங்கரை அருகே கடையில் தீ: ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்!

  இப்படி தொடர்ந்து இந்தப் பகுதியில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

  கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  காவி வெற்றி! கவி வள்ளுவரைப் பேசும் சமூக ஊடகங்கள்!

  எல்லாவற்றுக்கும் மேலாக, திருவள்ளுவர் இன்று ஆக்கிரமித்திருக்கிறார். காரணம், அவர் பாஜக.,வினரால் தாய் மதம் திரும்பியிருக்கிறாராம்!

  thiruvalluvar deivapulavar

  திருவள்ளுவர் திடீர் கதாநாயகன் ஆகிவிட்டிருக்கிறார். அவரால், பஞ்சமி நிலம் பறிபோச்சு. அரசு ஆலய நிலங்களை தாரை வார்க்கும் திட்டத்துக்கு எதிரான இந்து முன்னணியின் போராட்டம் அமுங்கிப் போச்சு. போர்வெல் மரணம் மறந்து போச்சு. கட் அவுட் வைத்து குட்டு வாங்கிய திமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் கதை வெறும் கதையாச்சு. மாஞ்சா அறுத்து மாய்ந்து போன குழந்தையின் மரண ஓலம் அமுங்கிப் போச்சு.

  எல்லாவற்றுக்கும் மேலாக, திருவள்ளுவர் இன்று ஆக்கிரமித்திருக்கிறார். காரணம், அவர் பாஜக.,வினரால் தாய் மதம் திரும்பியிருக்கிறாராம்!

  இத்தகைய பின்னணியில் இன்று சமூகத் தளத்தில் சிலர் தெறிக்க விட்ட கருத்துகள் இங்கே…


  ஸ்டாலின் அவர்களே நீங்கள் திருந்துங்கள்,
  காவி பெருமை. களவாணி சிறுமை.
  “களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
  ஆற்றல் புரிந்தார்கண் இல்” என்ற வள்ளுவரை , களவாணி கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைத்ததே தமிழின துரோகம்.

  எத்துனை புறம்போக்குத்தனம் செய்தாலும் களவாணித்தனத்தை மறைக்க முடியாது.

  காயப்படுத்துவதை தவிர்த்து திருக்குறள் படித்து திருந்த பாருங்கள்.

  (குறிப்பு: களவாணித்தனம் மற்றும் புறம்போக்கு என்பது அநாகரீகமான வார்த்தைகள் அல்ல, அது அரசு கெஜட்டிலேயே இருக்கிறது என்று சொன்னது ஸ்டாலின் அவர்கள் )
  – நாராயணன் திருப்பதி.

  ஸ்டாலின் அவர்களே, திருவள்ளுவருக்கு மதம் இல்லை என சொல்கிறீர்களே? பாஜக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாக சொல்கிறீர்களே, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் அருள் பாலித்து கொண்டிருக்கும் திருவள்ளுவர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தான் நிர்வகிக்கப்படுகிறது என்ற விவரம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த தங்களுக்கு தெரியாது போனது ஏன்?

  அதே கோவிலில் பிள்ளையார், முருகர், சிவன் மற்றும் பார்வதி சந்நிதிகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் ஆட்சியிலும் இதே நிலை தான் இருந்தது என்பது தங்களுக்கு தெரியவில்லையெனில், ஆட்சி குறித்து உங்கள் கட்சியில் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

  ஹிந்துக்களின், இந்தியர்களின் புனித நிறம் காவி என்பதை ஏற்க மறுக்கிறீர்களா? உங்கள் அரசால் திருவள்ளுவர் கோவில் நிர்வகிக்கப்பட்டது என்பதை தவறு என்று சொல்கிறீர்களா? நாங்கள் காவிக்கூட்டம் தான்! காலிக்கூட்டத்தை எதிர்க்கும் காவி கூட்டம் என்பதில் எங்களுக்கு பெருமை தான்.

  – நாராயணன் திருப்பதி.


  திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை

  நிச்சயமாக…. அறம் பொருள் இன்பம் என இந்து சணாதன தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும்

  கடவுள், ஊழ்வினை, தன் வினை, முன்வினை, செயல் விளைவு, போன்ற அனைத்தையும் தெளிவாகக் கூறுவதோடு கடவுள் எப்படி இருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகிறார் திருவள்ளுவர்.

  கடவுள் மறுப்பு என்பதை குறளில் காணவே முடியாது


  திருக்குறளில்
  1) பிறன் இல் விழையாமை(பிறன் மனைவியை விரும்பாமை)
  2) புலால் மறுத்தல் (மாமிசம் மறுத்தல்)
  3) கள்ளுண்ணாமை( குடிக்காது இருத்தல்)
  இந்த மூன்று அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக தமிழ் போராளீஸ் செய்யும் கூத்தினைக் கண்டிக்கிறார்
  திருவள்ளுவருக்கு நெற்றியிலே பட்டை போட்டது அவமானம் இல்லை
  அவரைத் தூக்கிப் பிடிப்பதாக கூவும் புர்ச்சீஸ் ‘பட்டை’ அடித்துவிட்டு மாட்டைக் கடிப்பதுதான்’ திருவள்ளுவருக்கு அவமானம்


  திருவள்ளுவர்: எல்லா மதத்திற்கும் பொதுவானவராம். ஆனால் கிறிஸ்தவர் என்று ஆய்வு செய்தால் இன்புறத் தோன்றுமாம், சொன்னவர் மு.கருணாநிதி.
  இந்து என்று காவி உடுத்தினால் எதிர்க்கத் தோன்றுமாம், பொங்கத் தோன்றுமாம் ஸ்டாலின் மற்றும் திராவிட குஞ்சுகளுக்கு..!
  அதென்ன கிறிஸ்தவர் என்றால் இன்புறுதல், இந்து என்றால் கொதிநிலையில் துள்ளுதல்!

  • நம்பி நாராயணன்

  திருவள்ளுவரின் உண்மையான வடிவம் புரிந்துவிட்டால் தமிழை வைத்து திராவிட இயக்கம் நடத்திய அத்தனை வணிகமும் படுத்துவிடும். அதனால் அவர்களின் எதிர்ப்பில் காரணம் இருக்கிறது. தாமஸை திருவள்ளுவர் சந்தித்ததாகச் சொன்ன தெய்வநாயகத்தின் கூற்று அந்த வணிகத்துக்கு உதவி புரிந்தது. அதனால் தெய்வநாயகத்தை திமுக கேட்டதா என பதில் கேள்வி எழுப்புவதில் எந்த நியாயமும் இல்லை.

  அற நெறிகள் சொல்லி கொடுத்த ஐயன் திருவள்ளுவர் எங்கே.!
  அடி கொய்யா ல காம கொடூரன் எங்கே..
  காம கொடூரன் பேச்சும் கொள்கையும் கேட்டால்
  (இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரம்)சீரழிந்து போகும்
  ஊருக்கு ஊர் ஐயன் “வள்ளுவனுக்கு”சிலை வைப்பது மேல் நமது தலையாய கடமையும் ஆகும்
  காவி_திருவள்ளுவர்ரேவாழ்க

  திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்பதற்கு காரணம், அன்று இருந்தது சனாதன தர்மமே. வேறு எந்த மதமும் இல்லை.

  திருவள்ளுவரின் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று தாய்லாந்தில் பிரதமர் மோதிஜி வெளியிட்டதைப் பொறுக்க முடியாத எச்சில் கும்பல் இன்று தஞ்சாவூரிலுள்ள 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய திருவள்ளுவர் சிலையின் கண்களைக் கருப்பைத் துணியால் கட்டி, சாணி அடித்து அவமரியாதை செய்துள்ளது.

  இதற்கு மூலக் காரணம் யார் என்று சொல்ல வேண்டியதே இல்லை. இதனால் திருவள்ளுவருக்கோ பிரதமருக்கோ எந்த அவமானமும் ஏற்படாது. ஆனால்.. இதனைச் செய்தவனின் தரமும், அனுப்பி வைத்த தலைவனின் தரமும் பளிச்சென்று தெரிகிறது.

  சிவாஜி கணேசன் திருப்பதி போனதற்காக அவரின் போஸ்டர்களில் சாணியடித்த அதே திமுக கும்பல் இன்னமும் வளராமல் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்..!

  ஆனால்.. இது 1965 இல்லை..!

  Latest Posts

  சாஸ்தா கோவில் நீர்த் தேக்கத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை!

  திறக்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவதாக

  துண்டுச்சீட்டு… ஏன் இந்தப் பெயர் என்பதை அவரே விளக்கிய தருணம்!

  துண்டுச் சீட்டில் தான் கருணாநிதிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று எழுதப்பட்டிருந்ததாம்

  நவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்?

  கதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  953FollowersFollow
  17,300SubscribersSubscribe

  கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை!

  கபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை

  காதல் கணவனை மீட்க… போராடிய பெண்! கைகொடுத்த காவல் ஆய்வாளர்!

  கைக்குழந்தையுடன் நீதி கேட்டு போராடும் பெண் உதவிக்கரம் நீட்டிய திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

  தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

  தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  நவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்?

  கதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்

  சுபாஷிதம்: நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

  வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

  நவராத்திரி ஸ்பெஷல்: சித்திதாத்ரியின் சிறப்புகள்!

  நவதுர்கா வரிசையில் சித்திதாத்ரியின் சிறப்பு என்ன? சித்திதாத்ரியை எவ்விதம் வழிபட வேண்டும்?

  அடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..?!

  மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……

  இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

  ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

  பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

  பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
  Translate »