September 26, 2021, 3:55 am
More

  ARTICLE - SECTIONS

  பாஜக.,வுக்கு முன்பே… ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசிட்டார்!

  பாஜக.,வின் ஐ.டி., பிரிவு வள்ளுவருக்கு காவி பூசி படம் வரையும் முன்பே, அன்றைய பிரபல ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசி படம் வரைந்து விட்டார் என்று கூறி கல்கி இதழின் பழைய அட்டைப் படத்தை பகிர்ந்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

  bjp thiruvalluvar kalki - 1

  பாஜக.,வின் ஐ.டி., பிரிவு வள்ளுவருக்கு காவி பூசி படம் வரையும் முன்பே, அன்றைய பிரபல ஓவியர் மணியம் வள்ளுவருக்கு காவி பூசி படம் வரைந்து விட்டார் என்று கூறி கல்கி இதழின் பழைய அட்டைப் படத்தை பகிர்ந்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

  கல்கி இதழின் 1955ம் வருட ஜூன் 5ம் தேதியிட்ட இதழில், (மன்மத வருடம் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தை ஒட்டி வந்த இதழின் அட்டைப் படத்தில் வள்ளுவர் எழுத்தாணியும் குறள் ஓலையும் கீழே விரித்திருக்க… அட்டைப் படத்தில் யோசனையில் முட்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.

  இந்த அழகிய ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் மணியம். கல்கி இதழின் முதல் அட்டைப் படமே வண்ணத்தில் தான் வந்தது. அது அச்சானது அன்றைய கலைமகள் மாத இதழ் அலுவலக அச்சுக்கூடத்தில்!

  இது குறித்த கருத்தை பாஜக.,வைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி தமது டிவிட்டர் பதிவில் போட்டிருந்தார்.

  ஹா ஹா ஹா!1955ம் ஆண்டு ஜூன்5ம் தேதியிட்ட கல்கி இதழில் திருவள்ளுவர். ஸ்டாலின் அவர்களே, காவி மயம் மட்டுமல்ல, தாமரை மயமாக காட்சியளிக்கிறாரே திருவள்ளுவர். இதற்கும் ஒரு கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் செய்யுங்கள்.

  ~ நாராயணன் திருப்பதி… என்று அவர் போட்டிருந்த டிவிட்டின் கீழ் பலர் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தியிருந்தனர். அதை வைத்தே, இந்தக் கருத்துகள் எழுதுவோர் எல்லாம், பதின்ம வயது பாலகர்கள் என்றும், அச்சு இதழின் வாசனை அறியாத பருவத்தினர் என்றும் தெரிகிறது. மூளை மழுங்கடிக்கப் பட்ட டாஸ்மாக் திராவிடன் என்பதை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

  சரி, நாமே வள்ளுவர் தினத்தின் வரலாற்றைத் தெரியப் படுத்துவோம்.

  முருகன் பிறந்த நாள் வைகாசி விசாகம்! அதற்கு அடுத்த நாள் வைகாசி அனுஷம்! அதுவே திருவள்ளுவரின் பிறந்தநாள்.

  1971ம் ஆண்டு வரை வைகாசி அனுஷம் அன்றே திருவள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், திராவிட இயக்கத்தினரின் ஆட்சியில், தை 1 வள்ளுவர் பிறந்த நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் தை 1 இல்லை தை 2 என மாற்றப்பட்டது.

  ஆனால், இன்றளவும் பழைய நியமங்களைக் கடைப்பிடித்து வரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில், சென்னைத் திருவள்ளுவர் மன்றம், தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு திருவள்ளுவர் கழகங்களில், வைகாசி அனுஷம் அன்றுதான் வள்ளுவரின் பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது.

  இது குறித்து அறிஞர் ஒருவர் கூறிய போது…. வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்பவர்கள் மிகவும் பின்னோக்கி எல்லாம் செல்ல வேண்டாம், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களைத் தெரிந்துக் கொண்டாலே போதும்.

  1935 மே மாதம்18 ஆம் நாள், அனுஷநட்சத்திர நாள். அன்றைய தினம் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப் படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலை அடைந்து திருவள்ளுவர் திருமேனிக்கு நீராட்டல் நடத்தி பூசனைகளைச் செய்து வழிபட்டனர். அன்றைய நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

  மறைமலை அடிகள், கா. நமச்சிவாய முதலியார், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், T.செங்கல்வராயன் உள்ளிட்ட அறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.

  அடுத்த ஆண்டு வைகாசி அனுஷம் அன்று நடைபெற்ற வள்ளுவர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தலைம ஏற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்.

  சுவாமி சித்பவானந்தா, கி.வா. ஜகந்நாதன், அமரர் கல்கி உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் அறிஞர்களும் வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

  இப்படி மிகக் குறுகிய இந்த அரை நூற்றாண்டுக்கும் சற்று கூடுதலான காலத்துக்குள், தங்கள் கைகளில் அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், நாட்டின் சரித்திரத்தையே மாற்றியவர்கள் திராவிட இயக்கத்தினர். வள்ளுவர் பிறந்த தினத்தை மட்டுமா மாற்றினார்கள், வள்ளுவரின் இயல்பான தோற்றத்தையும், அவரின் அடையாளத்தையுமே பொய்யான வார்த்தைகளைப் பரப்பி, மாற்றிவிட்டார்கள்.

  இப்போது வள்ளுவருக்காகப் போராடி, அவரை மீட்க வேண்டிய துர்பாக்கிய நிலையில், தமிழ் மண் இருக்கிறது. உண்மைத் தமிழர்கள், திராவிடனுக்கு விலை போகாத பச்சைத் தமிழ் ரத்தம் நாடி நரம்பெல்லாம் ஓடுவது உண்மை என்றால், திருவள்ளுவரை நாத்திகக் கூடாரத்தில் இருந்தும், வந்தேறி கிறிஸ்துவக் கூடாரத்தில் இருந்தும் மீட்க, தோள் தட்டி தொடை தட்டி நெஞ்சு நிமிர்த்தி ஓங்கிக் குரலெடுத்து படையெனப் புறப்பட்டு விடுவான்.

  1 COMMENT

  1. நான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கி. வ. ஜெ , உ. வே. சா முதலிய ஆன்றோர்கள் ஒப்புதல் அளித்த ஓவியம்
   சர்ச்சை க்களுக்கு பாற்பட்டது

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,456FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-