பத்துக்குள்ள பட்ஜெட் மேட்டர் இருக்குங்க!

இன்று காலை மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

புது தில்லி:
பத்துக்குள்ள பட்ஜெட் மேட்டர் இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

2017 – 18 மத்திய பட்ஜெட் 10 முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.
அவை, 1. விவசாயிகள் நலன் 2. கிராமப்புற மக்கள் நலன் 3. இளைஞர் மேம்பாடு 4. ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல் 5. உட்கட்டுமான மேம்பாடு 6. வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை 7. பொது சேவை 8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல் 9. நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு 10. விவேகமான நிதி மேலாண்மை ஆகிய 10 கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார் அருண் ஜேட்லி.

முன்னதாக, இன்று முற்பகல் 11.08 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி. இந்த பட்ஜெட்டில், பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இணைந்து முதல்முறையாக தாக்கலானது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அறிவிப்பு ஒன்றை வாசித்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “வழக்கமாக அவை உறுப்பினர் மறைந்தால் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், இன்று 2017 – 2018 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்டதால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கு பதிலாக நாளை அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடும் அமளிக்கு இடையே பட்ஜெட்டை11.08 மணிக்கு அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.