September 28, 2021, 1:43 pm
More

  ARTICLE - SECTIONS

  சாணக்கியத் தனமா? சனநாயகப் படுகொலையா?!

  கெட்டபையன் ஸார் இந்த மொட்டபாஸ். நீங்கள்ளாம் விளையாட போகணுமின்னு மைதானத்துல இறங்குமுன்னே, ஆட்டத்த முடிச்சி, கோப்பைய வாங்கிட்டு வீட்ல படுத்து தூங்கிட்டிருப்பார்.

  modi amitshaa - 1
  கெட்டபையன் ஸார் இந்த மொட்டபாஸ். நீங்கள்ளாம் விளையாட போகணுமின்னு மைதானத்துல இறங்குமுன்னே, ஆட்டத்த முடிச்சி, கோப்பைய வாங்கிட்டு வீட்ல படுத்து தூங்கிட்டிருப்பார்.

  மகாராஷ்டிர அரசியல் திருப்பங்கள் குறித்து, கலவையான விமர்சனங்கள் வருகின்றன. ஒரு புறம், சிவசேனா, பாஜக., இரண்டுமே ஒரு முதல்வர் பதவிக்காக இப்படி சண்டை போடுவதா என்றும், மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிப்பதா என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

  இந்நிலையில், திடீரென இன்று காலை பாஜக., முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து, முதல்வராக பதவியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் பட்நவிஸ்.

  இந்த திடீர் திருப்பமும், இவ்வாறு ஒரு நிகழ்வு நடக்கப் போகிறது என்பதே வெளியில் தெரியாமல் ரகசியமாக நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு, ஒரே இரவில் இவ்வாறு நடந்துள்ளதும் நாடு முழுதும் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதனிடையே, சிவசேனா குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். எழுத்தாளரும் விமர்சகருமான பிரகாஷ் ராமசாமி குறிப்பிடும் போது, மரியாதையாக சிவசேனை கூட்டணில இருந்திருந்தா, நல்ல ஆட்சிக்கு ஆதரவு மட்டுமல்ல, மானம் மரியாதை, கொள்கை இதெல்லாம் இன்டாக்ட் ஆக இருந்திருக்கும்.., இதெல்லாம் விட பிரஷாந்த் கிஷோர்ட்ட ஐடியா கேட்டு செஞ்சதில்.. typical collateral damage ஆகிவிட்டது.

  பாஜக நம்பிய தோழமைக் கட்சி பாஜக முதுகில் குத்தியது.
  சிவசேனா வலதில் இருந்து வழுக்கி வீழ்ந்தது.
  ஷரத் பவாரை நம்பியதில் காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவிற்கு ஆதரவு தந்தது. காங்கிரஸின் மதசார்பற்ற என்கிற போலி கொள்கை அடிவாங்கியது. ஷரத்பவாருக்கு கொள்கையெல்லாம் இரண்டாவது பட்சம்தான். பிசினஸ்தான் முக்கியம்.

  ஆனால் ஷரத்பாவாரையும் அமித்ஷாவையும் கேவலமாய் ஊட்டகங்கள. எடைபோட்டுக்கொண்டிருக்கும்போது.. அர்த்த ராத்திரியில் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. என்ன ஷரத் பவார் டபுள் ஆக்ட் கொடுத்து ரெண்டு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பார் போல.. டலீவர் லெவலுக்கும் மேலான கேடித்தனமான தலைவர்.

  பாரதிய ஜனதாவிற்குமே சறுக்கல்தான். ஆனால் முதுகில் குத்திய சிவசேனாவால்.. இப்படி வழுக்க நேர்ந்ததால்.. அதிகாலையில் சிவசேனாவை முதுகில் குத்தும்போது வழுக்கி.. ஆப்பாய் சிவசேனாவிற்கு முடிந்திருக்கிறது.

  நடுநிலைகள் இனி யாருக்கும் வெட்கமில்லை என்று தாராளமாய் பொதுவெளியில் எழுதலாம் அதற்குமுன் 37 சிங்கங்களை வெட்கமில்லாமல் தானே இங்கிருந்து தில்லி அனுப்பினீர்கள்..?- என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  இது போல் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மீம்ஸ்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. அமித் ஷாவை சாணக்கியன் என்று புகழ்ந்து சில கருத்துகள். அதற்கு மாறாக, பாஜக., ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது என்றும் சில கருத்துகள்.

  இப்படி எல்லாமுமாகக் கலந்து இன்றைய பொழுது ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்குமாக மகாராஷ்டிர திருப்பங்களுக்கு மத்தியில் தீனி போட்டிருக்கிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-