October 24, 2021, 1:48 am
More

  ARTICLE - SECTIONS

  சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

  கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

  chidambaram pressmeet - 1

  சிறையில் இருந்து வெளியான பின்னர் ப.சிதம்பரம் தில்லியில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

  பின்னர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையையும் தன்னையும் ஒப்பிட்டுப் பேசினார். இது சமூகத் தளங்களில் பெரிதும் விமர்சிக்கப் பட்டது.

  இருப்பினும், சிதம்பரத்திடம் கேட்க வேண்டிய கேள்விகள் எவ்வளவோ இருக்க, சிதம்பரம் சொன்னதையே ஒரு பேட்டியாக மாற்றி அச்சு, காட்சி ஊடகங்களில் வெளியிட்டார்கள். இந்நிலையில், ஒரு ஊடகத்தானாக, அந்த செய்தியாளர் சந்திப்பில் ப.சிதம்பரத்திடம் கேட்க முடியாமல் போன கேள்விகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டு வருகின்றனர் சமூக ஊடகங்களில்.

  சுமுகமாய்ச் சென்று தலையாட்டி வரும் சுமுக ஊடகத்தானுக்கு மண்டையில் நச் என்று கொட்டு வைக்கும் வகையில் சமூக ஊடகத்தார் முன்வைத்துள்ள சில கேள்விகள்… இவை!

  வ.உ.சிதம்பரம் சிறையில் இருந்தார், நானும் சிறையில் இருந்தேன் என்று சொன்னதும், மரக்கட்டிலில் படுத்து உறங்கியதால் வலிமையாக உள்ளேன் என்று கூறியுள்ளார் சிதம்பரம்”.!!

  வ.உ.சி செக்கிழுத்தார், நீங்கள் எதை இழுத்தீர்கள் என்று ஊடகத்தாராக நாம் ஏன் கேள்வி கேட்கவில்லை…?!

  மரக்கட்டிலில் படுத்து எதற்காக இவ்வளவு தியாகம் செய்தீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை…?

  சிதம்பரம் தைரியசாலி என்றால் எதற்காக உங்கள் வீட்டில் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்டீர்கள், அது கேவலமான செயல்தானே என்று கேட்கவில்லை…?

  சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்ய வந்தபோது நேருக்குநேர் அதிகாரிகளை சந்திக்காமல் பதுங்கியிருந்தது அவமானம் இல்லையா  என்று கேட்கவில்லை…?

  உங்கள் வீட்டில் உள்ள சுவரை ஏறிகுதித்து வந்து உங்களை அதிகாரிகள் கைது செய்யும் அளவுக்கு நீங்கள் அநாகரீகமாக நடந்து கொண்டது ஏன் என்று கேட்கவில்லை…?

  6 விதமான நோய் இருப்பதாக கூறி ஜாமீன் கேட்டீர்களே, சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்ல வேண்டும் என்று உங்கள் வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் சொன்னாரே…!
  அதனால் எப்போது சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்வீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை..?!

  உடல் நலம் சரியில்லை என்று சொல்லி பிணையில் வந்த மறு நாளே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டீர்களே! சிகிச்சைக்காக என்று கபில் சிபல் பொய் சொல்லி ஜாமீன் கேட்டாரா என்று கேள்வி கேட்கவில்லை…?!

  ஏன் உங்களை உச்சநீதிமன்றம் அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லக்கூடாது என்று தடை விதித்து நிபந்தனை ஜாமீன் வழங்கியது, உங்களுக்கு அவமானமாக இல்லையா என்று கேட்கவில்லை…!?

  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சாட்சி சொல்பவர்களிடம் பேச உச்ச நீதிமன்றம் உங்களுக்கு ஏன் தடை விதித்துள்ளது என்று கேட்கவில்லை…?

  வெளிநாட்டில் சொத்துகளை வாங்கி நீங்கள் குவித்து உள்ளதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளதற்கு உங்கள் விளக்கம் என்ன என்று கேள்வி கேட்கவில்லை…!

  ஆக மொத்தத்தில், ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சிதம்பரத்திடம், அவர் மீதுள்ள குற்றங்கள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை!

  சிதம்பரம் எதை தியாகம் செய்து சிறை சென்றார்? யாருக்காக சிறை சென்றார்? எதற்காக சிறை சென்றார்..? என்ற கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்…

  ஐயாம் வெரி சாரி தமிழக மக்களே! ஒரு நிருபராக நான் மன்னிப்பு கேட்கிறேன்… வெட்கப் படுகிறேன்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,585FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-