October 18, 2021, 9:36 am
More

  ARTICLE - SECTIONS

  யலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே…! வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..!

  இதன் பொருள் என்னவென்றால், மற்ற சமூகங்களை விட முஸ்லிமாக இருந்த நபர்களுக்கே ரஹ்மான் அனைத்து சலுகைகளையும் சட்டமீறல்களுடன் செய்திருந்தார் என்பதே!

  abdulrehman - 1

  மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐபிஎஸ்., அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார் என்று ஊடகங்களில் உள்நோக்கமுள்ள செய்திகளைப் பரப்ப விட்டார்கள் பலர். அதனை ஏதோ மத்திய அரசுக்கு எதிராக ஒரு அதிகாரி முடிவு எடுத்து விட்டது போல் சமூக ஊடகங்களில் பரபரப்பாகவும் பகிர்ந்தார்கள் பலர்.

  ஆனால், அவரது உள்நோக்கமுள்ள டிவிட்டர் பதிவினை பலரும் கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்பதே உண்மை. தான் வி.ஆர்.எஸ்., அதாவது தாமாக முன்வந்து ஓய்வு பெறும் அடிப்படையில் கடிதம் எழுதிவிட்டு, இந்திய சட்டத்துக்கு எதிராக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இருப்பதாகவும், அதனால் இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அதனால் நாளை முதல் அலுவலகம் செல்லப் போவதில்லை என்றும், முடிவாக தாம் பணியில் இருந்து வெளியேறுவதாகவும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு, இரு பக்க கடிதத்தையும் அதில் வெளியிட்டிருந்தார்.

  இந்தத் தகவலுக்கு என்டிடிவி., இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றையும் டேக் செய்து டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

  டிவிட்டர் பதிவில் வேலையை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிட்டுவிட்டு, கடிதத்தில் வி.ஆர்.எஸ் அப்ளிகேஷன் போட்டு ஏமாற்றி நாடகமாடியிருக்கும் இவர் போன்ற இஸ்லாமியர்களை அதிகாரப் பதவிகளில் அமர்த்தி அழகு பார்ப்பது இந்த நாட்டின் சாபக்கேடு. இவர் போன்றவர்கள் களை எடுக்கப் பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!

  குறிப்பாக, அப்துல் ரஹ்மான் ஐபிஎஸ்.,க்கு ஆகஸ்ட் மாதமே இது போன்று டிசம்பர் மாதம் #குடியுரிமை மசோதா தாக்கல் செய்வார்கள் என்று தெரியும் போல?! என்று கிண்டல் செய்கிறார்கள் பலர்.

  ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் நாலாந்தர தரகுத் தற்குறிகள், பதவி விலகலுக்கும், விருப்ப ஓய்வுக்கும் வித்தியாசம் தெரியாத கோமாளிகளாக இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டு, குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவினால் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அதிகாரியைப் பாரீர் என்று சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் கதறிவிட்டுக் காத்திருக்கிறார்கள்.

  சரி… இது குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

  குடியுரிமை திருத்த மசோதா தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜினாமா செய்கிறார் என்றும் செய்தி பரப்பப் பட்ட நிலையில், அவரது கதையில் சொல்லப் பட்ட நிழலான கடந்த காலமும், ஓட்டைகளும் என்ன என்று தெரிந்து கொள்வோம்!

  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என மூன்று அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்துவ சீக்கிய ஹிந்து உள்ளிட்ட ஆறு மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றியுள்ளது.

  இந்த நிலையில், சட்டத்தை இழிவுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பிரசாரம் ஏற்கெனவே சில நபர்களால் தொடங்கப்பட்டுவிட்டது! இப்போது மசோதாவை இழிவுபடுத்த சில அறிவுஜீவிகள் மற்றும் ஆர்வலர்கள் மூலம் பொதுமக்களிடையே அச்ச உணர்வைத் தூண்டும் செயலை செய்து வருகின்றார்கள்! இதன் பின்னணியில் தேச ஒற்றுமைக்கு எதிரான சதிச் செயல் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

  இதுபோன்ற செயலில், ஒரு மகாராஷ்டிரா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மானும் இறங்கியுள்ளார். “அப்பட்டமான வகுப்புவாத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான”தாக உள்ள இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டமாக, தாம் வகித்து வரும் ஐபிஎஸ்., சேவையில் இருந்து தாம் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

  குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப் பட்ட நிலையில், மும்பையில் சிறப்பு ஐ.ஜி.பி ஆக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019 க்கு எதிரான “சிவில் ஒத்துழையாமை”யின் பகுதியாக, வியாழக்கிழமை (இன்று) முதல் பணிக்கு செல்ல மாட்டேன் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

  “அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்திற்கு எதிராக” இந்த மசோதா இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். ரஹ்மான் புதன்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிரா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.

  “இந்த மசோதா இந்தியாவின் மத பன்மைத்துவத்திற்கு எதிரானது. இந்த மசோதாவை ஜனநாயக முறையில் எதிர்க்குமாறு நீதி நேசிக்கும் அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்திற்கு எதிராக இயங்குகிறது” என்று ரஹ்மான் கூறியுள்ளார்

  தற்போது மகாராஷ்டிராவின் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு ஐ.ஜி.பியாக இருக்கும் அப்துர் ரஹ்மான் ஏற்கெனவே ‘தனிப்பட்ட காரணங்களை’ சுட்டிக்காட்டி ஆகஸ்ட் மாதம் ஒரு விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கு (வி.ஆர்.எஸ்) விண்ணப்பித்திருந்தார்! இருப்பினும், அவரது விண்ணப்பத்தை இந்த ஆண்டு அக்டோபரில் உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) ஏற்கவில்லை.

  Abdur Rahman - 2

  சுவாரஸ்யமாக, அந்த அதிகாரி தனது வி.ஆர்.எஸ் விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக எம்.எச்.ஏவுக்கு எதிராக 2019 நவம்பரில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஒரு விண்ணப்பத்தையும் தாக்கல் செய்திருந்தார்.

  மகாராஷ்டிராவின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அப்துர் ரஹ்மான் தனது ராஜினாமாவை “அவசரக் கோலத்தில், மனதைப் பயன்படுத்தாமல், தெளிவான தவறான எண்ணத்துடன், நியாயமற்ற வகையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம்” நிராகரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

  “எனது தனிப்பட்ட காரணங்களால்” வி.ஆர்.எஸ்-க்கு விண்ணப்பித்ததாகக் கூறிய அவர், டிசம்பர் 12 மற்றும் அதற்குப் பிறகு அலுவலகத்திற்கு வர முடியாது.

  அவரது வி.ஆர்.எஸ் விண்ணப்பம் ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரி இப்போது வியாழக்கிழமை முதல் அலுவலகத்திற்கு வரமாட்டேன் என்று கூறி கடந்த ஐந்து மாதங்களில் தனது பதவியில் இருந்து இரண்டாவது முறையாக ‘பதவியை ராஜினாமா செய்ய’ இந்த நாளைத் தேர்வு செய்துள்ளார்.

  அப்துர் ரஹ்மான் ஏற்கனவே ஆகஸ்ட் முதல் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். இந்த ராஜினாமா இப்போது ஒரு மைலேஜ் பெறுவதற்காக, CAB க்கு எதிரான ஒரு நடவடிக்கையாக, இப்போது அவரால் கூறப்படுகிறது.

  மேலும், ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மானின் நேர்மை மற்றும் நடத்தை மீது கடந்த காலங்களில் கேள்வி எழுந்துள்ளது. அவர் சார்ந்த இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களை பகிரங்கமாக ஆதரித்ததற்காகவும், மேலும் பல குற்றச்சாட்டுகளுக்காகவும் பல முறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக ஐபிசி மற்றும் மும்பை காவல்துறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு குற்றச்சாட்டு 2011ல் பதிவு செய்யப் பட்டது. அப்துர் ரஹ்மான் தனது பதவியைப் பயன்படுத்தி, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தார்மீக சீர்குலைவை ஏற்படுத்தியிருந்தார். இந்தப் புகாருடன் இணைக்கப்பட்ட புகார்தாரர் தனது சமூகத்திற்கு சாதகமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டதை விசாரணை அதிகாரி கண்டுபிடித்திருந்தார்.

  இதன் பொருள் என்னவென்றால், மற்ற சமூகங்களை விட முஸ்லிமாக இருந்த நபர்களுக்கே ரஹ்மான் அனைத்து சலுகைகளையும் சட்டமீறல்களுடன் செய்திருந்தார் என்பதே!

  முஸ்லீம் சமூக நபர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் நன்மைகளை உறுதி செய்வதற்காக ரஹ்மான் தனது பதவிக் காலத்தில் யவத்மாலில் நடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் பல முறைகேடுகளைச் செய்திருந்தது தெரியவந்தது.

  கடந்த காலங்களில் அப்துர் ரஹ்மானின் உத்தியோகபூர்வ நடத்தைக்கு எதிராக கேள்விகள் முன் வைக்கப்பட்டாலும், ஏற்கெனவே விருப்ப ஓய்வு பெற முயன்ற ஒருவர், அதற்காக முன்னரே கடிதம் எழுதி வைத்த ஒருவர், இப்போது பதவியில் இருந்து எவ்வாறு ராஜினாமா செய்ய முடியும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

  ஒரு அதிகாரியின் வி.ஆர்.எஸ் விண்ணப்பத்தை மகாராஷ்டிர உள்துறை நிராகரிக்கப் பட்ட நிலையில், இப்போது “சட்ட ஒத்துழையாமை” மற்றும் குடியுரிமை மசோதா ஆகியவற்றை ஒரு காரணமாகக் குறிப்பிட்டு தனது கடைசி நாள் வேலையாக அறிவிக்க தேர்ந்தெடுத்துள்ளார்.

  மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடத் தேர்ந்தெடுத்துள்ள ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் நடத்தை மற்றும் பின்புலம், உள்நோக்கம் குறித்து, அவரது நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முன்னதாக, அவர் மீது முஸ்லிம் சார்பு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்த போது, ‘கருத்து வேறுபாடு’ என்பதைக் காரணம் காட்டி, தமது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறினார். அப்போதும் விருப்ப ஓய்வுக்குத்தான் குறிப்பிட்டிருந்தார்.

  கேள்விக்குரிய நடத்தையைக் கொண்டிருந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தனது பிரசாரத்தை பொதுமக்களிடையே, குறிப்பாக நாட்டின் முஸ்லிம்களிடையே பரப்ப முனைவதன் மூலம் பதவியை எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்திருப்பார் என்பதை நினைக்கும் போது, அதிர்ச்சி அளிப்பதாகத்தான் உள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,562FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-