முன்னாள் நீதிபதி கட்ஜு செய்யும் அரசியல்: இப்பவே இப்டின்னா…?

இந்த நான்கு கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கையில் வெள்ளை, 'பேன்ட்' அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும். வெள்ளை பேன்ட், போராட்டத்தின் குறியீடு ஆகும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வழக்கறிஞர்கள் அவற்றை நீக்க வேண்டாம். இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.

சென்னை:

முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவரது முகநூலில் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் நீதிபதியான அவரது அரசியல் பணிகள் தற்போது அதிகரித்திருப்பதாகத் தெரிந்தாலும், இப்போவே இப்டின்னா… அப்போ? என்ற வினாக்களையும் விமர்சகர்கள் எழுப்பாமல் இல்லை!
சென்னையில் தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் நீதிபதி கட்ஜு பகிர்ந்துள்ள அவரது முகநுால் பதிவு:

தென் மாநிலங்களை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்களும், இன்று முதல் தினமும், கீழ்கண்ட கோரிக்கைகளுக்காக, அமைதியாக போராட வேண்டும்.

* வட மாநில உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் ஹிந்தியும் வழக்காடு மொழியாக உள்ளது. அதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை, அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டும்

* உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையிலோ அல்லது இதர தென்மாநில நகரங்களிலோ ஏற்படுத்த வேண்டும்

* ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, பெங்களூரு சிறை பறவையின் கைப்பாவை பழனிசாமி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

* ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை, உரிய அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்

இந்த நான்கு கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கையில் வெள்ளை, ‘பேன்ட்’ அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும். வெள்ளை பேன்ட், போராட்டத்தின் குறியீடு ஆகும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வழக்கறிஞர்கள் அவற்றை நீக்க வேண்டாம். இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.