spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டா... பாகிஸ்தானுக்கே போயிடுங்க!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டா… பாகிஸ்தானுக்கே போயிடுங்க!

- Advertisement -
meerut sp an singh

பாகிஸ்தான் வாழ்க என்று கூச்சலிட்டதால் தான் அங்கேயே செல்லுங்கள் என்று நான் கூறினேன் என உத்திரபிரதேச காவல் அதிகாரி கூறியுள்ளார்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று போராட்டக் காரர்கள் சிலர் கத்தி கூச்சல் இட்டனர்; அதனால் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று நான் கூறினேன் என உத்திரபிரதேச காவல் அதிகாரி கூறியுள்ளார்!

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பொதுச் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

மீரட்டில் கடந்த 20ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது இதையடுத்து அங்கு அமைதியை ஏற்படுத்த வந்த மீரட் மாவட்ட எஸ்பி அகிலேஷ் நாராயன் சிங் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து செல்ல உத்தரவிட்டார்

அப்போது அவர் நீங்கள் சாப்பிடுவது இங்கே ஆனால் விரோதி நாட்டுக்கு புகழ் பாடுகிறார்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள் உங்களுக்கு இருண்ட காலம் தொடங்கி விடும் இங்கே முழு சுதந்திரத்தை அனுபவித்து விட்டு அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படாதீர்கள் என்று கூறினார்!

எஸ்பி அகிலேஷ் நாராயணி இந்த பேச்சு சமூக வலை தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இந்த பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்தார்.

https://twitter.com/ianujagnihotri/status/1210850354583048192

இதுகுறித்து விளக்கம் அளித்த எஸ்பி போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூச்சலிட்டனர். அதனால்தான் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறினேன் என விளக்கமளித்தார்.

மீரட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கூச்சலிட்டது உண்மைதான் என்பது தெரியவந்தது

இருப்பினும், அந்த அதிகாரிக்கு எதிராக ஊடகங்களும், எதிரகட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஆதித்யநாத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

https://twitter.com/ram26chouhan/status/1211139445442826240

அரசுக்கு எதிரான கோஷங்களை போட்டபடி ஆர்பாட்டம் நடத்திய சிலர் வன்முறைகளிலும் ஈடுபட்டனர். போலீசார் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் போலீசார் மீது கல்வீச்சு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

ஆனால், இந்தியா முழுவதும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள இந்த அதிகாரியின் பேச்சு குறித்து மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில் “ஒரு மாவட்ட போலீஸ் அதிகாரியே இவ்வாறு எப்படி பேசலாம், சம்பவம் உண்மையாக இருந்தால் மாநில அரசு உடனடியாக போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் “இந்த போராட்டங்களின் மீது போலீசார் அளவுக்கு அதிகமாக அடக்குமுறை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்ட நக்வி அதே சமயம் போராட்டக்காரர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதும் ஏற்புடையதல்ல. இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் உ.பி. அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஆனால், இது குறித்து சர்ச்சையில் சிக்கிய போலீஸ் அதிகாரி கூறுகையில்: “அவர்கள் எங்களை பார்த்தவுடனேயே பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறினார்கள், அதற்கு நான் நீங்கள் அந்த நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்றால் அங்கு செல்லலாம் என்று தான் சொன்னேன் ” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe