October 19, 2021, 11:04 pm
More

  ARTICLE - SECTIONS

  மோடி, அமித்ஷா சோலியை முடிங்க… என்று இஸ்லாமியரைத் தூண்டிய நெல்லை கண்ணன் கைது!

  பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த நெல்லை கண்ணன் குறித்த விவரம் கிடைத்ததை அடுத்து, போலிஸார் அவரை கைது செய்தனர்.

  nellai kannan hospital - 1

  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்து அவதூறாகப் பேசியதுடன், அவர்கள் இருவர் சோலியை முடியுங்க என்று இஸ்லாமியரைத் தூண்டிவிட்டுப் பேசிய நெல்லை கண்ணன், பெரம்பலூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

  திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.29ஆம் தேதி இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான எஸ்.டி.பி.ஐ., சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பொதுக் கூட்டம் நடந்தது.

  இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பிரமுகரும், மேடைப் பேச்சாளருமான நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதுடன், ஒருமையிலும் திட்டித் தீர்த்தார். தொடர்ந்து, அவர்கள் இருவர் சோலியையும் பாய்மார்கள் முடிச்சிடு வாங்கன்னு பாத்தா.. இன்னும் விட்டுவெச்சிருக்கீயளே என்று கொலைவெறித் தனமாகப் பேசினார்.

  அவரது சர்ச்சைக் கருத்துகளும் கொலை மிரட்டலும் பாஜக.,வினரை உசுப்பி விட்டது. வேறு எந்த தமிழக அரசியல் கட்சியினரும் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதுடன், நாம் தமிழர் கட்சி போன்றவை ஆதரவு தெரிவித்தது தமிழகத்தில் அரசியல் நாகரீகம் எவ்வளவு அதளபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

  nellai kannan speech - 2

  தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது ஊடகத்தினரும் நெல்லை கண்ணன் பேச்சுக்கு வக்காலத்து வாங்கி கேள்விகள் எழுப்பியது, தமிழக ஊடகத்துறை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறதோ என்றும், பாகிஸ்தானின் பி டீமான திமுக.,வின் சொல்படி ஆடுகின்றனவோ என்ற சந்தேகத்தையும் தமிழகத்தில் கிளப்பி விட்டது.

  இந்நிலையில், பாஜக., தலைவர்கள் மட்டும் இந்த அநாகரிக கொலை வெறிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

  தாம் கைது செய்யப் படுவோம் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக இஸ்லாமிய மதவாத அமைப்பான மமமுக., ஆம்புலன்ஸை அனுப்பி வைத்து, அவரை கைதாக விடாமல் தடுக்க ஏற்பாடு செய்தது.

  இதை அடுத்து, நெல்லை கண்ணனுக்கு உடல் நிலை சரியில்லை என்ற நாடகத்தை இஸ்லாமிய அமைப்புகள் துணையுடன்நடத்தினர். அதன்படி நெல்லை கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  ஆனால் பாஜக., வினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவரை மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது. இதை அடுத்து மேலும் ஓரிரு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மறுக்கப் பட்ட நிலையில், பின்னர் வேறு ஒரு மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார்.

  பின்னர் அங்கிருந்தும் சென்று, மதுரை மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஆனால், தமிழகத்திலேயே இருக்க வேண்டாம், வேறு மாநிலங்களுக்குச் செல்லலாம் என்று கூறி, கேரளத்தின் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர்.

  ஆனால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த நெல்லை கண்ணன் குறித்த விவரம் கிடைத்ததை அடுத்து, போலிஸார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் மீது விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் தகவல் நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்

  பர்னபாஸ் தலைமையிலான தனிப்படை பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் அவரை கைது செய்துள்ளனர் அவர் நெல்லை கொண்டுவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-