October 18, 2021, 1:04 pm
More

  ARTICLE - SECTIONS

  குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டம் போணியாகாத நிலையில்… ஜேஎன்யு.,வில் வன்முறை வெறியாட்டம்!

  CAA போராட்டம் செல்லுபடியாகாததால்.. அடுத்த நாடகத்தை காங்கிரஸும், கம்னாட்டீஸ்களும் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளனர்..!

  delhi jnu - 1

  தில்லி ஜே.என்.யூ., பல்கலை.,க்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

  தில்லி ஜே.என்.யூ. வளாகத்தில் நடந்த வன்முறையில், மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் என்பவர் காயம் அடைந்தார். முகமூடி அணிந்தவர்கள் தாக்கியதாக அய்ஷி கோஷ் மற்றும் மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

  இதனிடையே உடனடியாக கருத்து தெரிவித்த காங்கிரஸின் முன்னாள் தலைவரும் வருங்கால தலைவருமான ராகுல், மாணவர்களின் துணிச்சலான குரல்களுக்கு நாட்டை கட்டுப்படுத்தும் பாசிஸ்ட்டுகள் அஞ்சுகிறார்கள். ஜே.என்.யூ. பல்கலை.யில் மாணவர்கள் மீதான தாக்குதல் பாசிஸ்ட்டுகளின் அச்சத்தையே காட்டுகிறது என்று கருத்து தெரிவித்தார்.

  தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., வளாகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், பல்கலை., மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் மீது சராமரி தாக்குதல் நடத்தினர். முகமூடி அணிந்த மர்மநபர்கள் கண்மூடிதனமாக சரமாரியாக தாக்கியதாக கோஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

  இரும்பு தடிகளை கொண்டு கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் மர்மநபர்கள் தாக்கியதில் பலர் பலத்த காயமடைந்தனர். இத்தாக்குதலில் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

  மர்மநபர்களின் தாக்குதலில், 28 மாணவர்கள் மற்றும் சில பேராசிரியர்கள் காயமடைந்தனர்.
  இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலை., மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  மம்தா பானர்ஜி இது குறித்துக் குறிப்பிட்ட போது, ஜே.என்.யூ.,வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகத்தனத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இத்தகைய கொடூரமான செயல்களை விவரிக்க போதுமான வார்த்தைகள் இல்லை. நமது ஜனநாயகத்திற்கு இது ஒரு அவமானம்… என்று கூறினார்.

  இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் அதிர்ச்சியாகவும், பயங்கரமாகவும் இருக்கின்றன. முகமூடி அணிந்தவர்கள் ஜே.என்.யூ., விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியுள்ளனர். காவல்துறை என்ன செய்கிறது? காவல் துறை ஆணையர் எங்கே? தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்படும் போதே தாக்குதல் நடக்கிறது எனில் அரசின் ஆதரவுடன் மட்டுமே நடந்திருக்க வேண்டும். இது நம்ப முடியாத அளவில் உள்ளது… என்று குறிப்பிட்டார்.

  தில்லி பல்கலை வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கல்வி வளாகங்கள், அரசியல் போர்க்களங்களாக மாறக்கூடாது என்று கூறினார்.

  தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், தாம் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த போதே இதே கருத்தை வெளியிட்டதாக குறிப்பிட்டார். அரசியல் வாதிகளின் கையில் பொம்மைகளாக மாணவர்கள் மாறிவிடக் கூடாது என்று ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார். வன்முறை சம்பவம் குறித்த விசாரணை நடப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதன் முடிவில் உண்மை வெளிவரும் என்றார்.

  இதனிடையே இது குறித்து சமூக வலைத்தளங்களில் இன்று பெரும் அளவிலான கருத்து மோதல்கள் வெடித்தன.

  ஜேஎன்யுவை மூட வேண்டும் என்ற ஹேஷ்டாக்குடன் டிவிட்டரில் பலரும் கருத்து பகிர்ந்தனர்.

  JNU வில் “சீனியர் சிடிஸன் மாணவர்கள்” நேற்று இரவு தாக்கப்பட்டதற்காக.. கம்யூனிஸ்ட் கட்சி D.ராஜா, காங்கிரஸின் சுர்ஜே வாலா, கபில் சிபில் போன்றவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு பாலிவுட் ஷப்னா ஹாஸ்மி, ஸ்வர்ன கௌரி போன்ற கடுமையான இடது சாருகளும் கண்டனம்..!

  இதில் ரகசியம்… நேற்று இரவு முகத்தை மறைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தியவர்களுடன் அதே சீனியர் சிடிஸன் மாணவர்கள் கூடிப் பேசியதாக.. கொஞ்சிக் குலாவியதாக.. (கீழே வீடியோவில் சிவப்பு பை வைத்திருக்கும் ஆயிஷே கோஷும் ஒரு முகமூடி ஆளும் பேசுகிறார்கள்) ஒரு வீடியோ தற்போது ரிபப்ளிக் டிவியில் ஓடுகிறது..!

  தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திலேயே தாக்கியவர்கள் ABVP தான் என்று அந்த சீனியர் சிடிஸன் மாணவர்கள் “மை” போட்டு கண்டு பிடித்து விட்டார்களாம்..! CAA போராட்டம் செல்லுபடியாகாததால்.. அடுத்த நாடகத்தை காங்கிரஸும், கம்னாட்டீஸ்களும் அரங்கேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளனர்..! – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,562FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-