October 28, 2021, 4:37 am
More

  ARTICLE - SECTIONS

  வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்.. உண்மைகள்..! (பகுதி-3)

  சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான சாஸ்திர நூல்களை அந்தந்த துறை அறிவு உள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து பார்த்தால் பல அற்புதக் கருத்துகளை வெளிக்கொணர முடியும் .

  sarala bhasha samsritam - 1

  சம்ஸ்கிருதம் அமிர்த மொழி! இறந்த மொழியல்ல!

  சமஸ்கிருத மொழியின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை வைத்த மேலை நாட்டவர்களின் அடியொற்றி நடக்கும் போலி மேதாவிகள் சிலர் இந்த நவீன யுகத்தில் சம்ஸ்கிருத மொழி தேவை இல்லை என்று வாதம் செய்து உளறியவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக சமஸ்கிருத மொழியின் சிறப்புகளைப் பற்றி அறிந்து வருகிறோம்.

  சம்ஸ்கிருத மொழியில் இல்லாததே இல்லை என்று கூறி வருகிறோம்.

  sangatham script - 2

  ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதி, சாணக்கிய நீதி போன்ற சம்ஸ்கிருத நூல்களில் மனிதன் உத்தமனாக எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறியுள்ள ஸ்லோகங்கள் எண்ணிலடங்காதவை உள்ளன. இவை எல்லாக் காலத்துக்கும் பயன்படும் அமிர்த மூலிகைகள்.

  இவற்றைப் பற்றிய புரிதல் சிறுவயது முதலே ஏற்படுத்தாத காரணத்தால் உயர்ந்த பதவிகளுக்குப் பறந்த மெக்காலேவின் மானசீக புதல்வர்கள் சம்ஸ்கிருத மொழியின் உயர்வை அறிந்து கொள்ள இயலாமல் உள்ளார்கள்…. செருப்பைத் தின்னும் நாய் கரும்பின் இனிப்பை அறியாது என்று கவி வேமனா கூறியதுபோல.

  சம்ஸ்கிருத மொழியை பாரத நாட்டு கலாச்சார மொழியாக அறிவிப்பது நன்மை பயக்கக்கூடியது.

  சம்ஸ்கிருத மொழி ஒரு விஞ்ஞான மொழி. விஞ்ஞானமனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் உள்ளதால் இந்த மொழியின் தேவை இல்லாத அறிஞர் இருககமாட்டார்.

  சில சம்ஸ்கிருத துரோகிகளும் போலி மேதாவிகளும் காரணம் இல்லாமலேயே சேற்றை வாரி இறைத்தாலும் இந்த மொழி அமிர்த மொழியாக போற்றப்படுகிறது. சமஸ்கிருத அறிஞர்கள் அனைவரையும் பாக்கியசாலிகளாக ஆக்குகிறது.

  samskrita - 3

  ஜிஹ்வாயாம் சம்ஸ்கிருதம் யஸ்ய ஹ்ருத்யாஸ்திக்ய மகுண்டிதம் வேத சாஸ்திர விசாரஸ்ய மனசே ஸ ஹி பாக்கியவான் – (சித்ரசதகம் – ஶ்ரீஜடாவல்லபுல புருஷோத்தம்).

  • ஸம்ஸ்கிருத மொழி குறித்த ஞானம், தெய்வத்தின் மீதும் வேதத்தின் மீதும் இதயத்தில் கலங்காத இலக்கு, வேத சாஸ்திரங்களின் மீது ஆர்வம் உள்ளவர்கள் பாக்கியசாலிகள்.

  எந்த பணியில் இருப்பவர்களாக இருந்தாலும் அறிவு வளர்ச்சிக்கு சம்ஸ்கிருதத்தை சரணடைய வேண்டியதுதான்.

  சம்ஸ்கிருத மொழியை தொலைவாக வைத்ததால்தான் மாணவர்கள் சம்ஸ்கிருதி அதாவது கலாச்சாரத்திற்கு தொலைவாகிவிட்டார்கள். இளைய தலைமுறையில் ஒழுக்கம், தேசபக்தி, பெற்றோர் மீது அன்பு, குருமார்களிடம் பக்தி ஏற்பட வேண்டுமென்றால் சம்ஸ்கிருதத்தை அவர்களுக்கு நெருக்கமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் பாரததேசம் வைபவம் நிறைந்த நிலைமையை வந்தடையும்.

  சம்ஸ்கிருத மொழியில் உள்ள பல்வேறு சாஸ்திர நூல்களை அந்தந்த பணியில் உள்ளவர்கள் படித்தறிந்து கடைப்பிடித்தால் பலப் பல லாபங்களை கட்டாயம் அடைவர்.

  மானுட மேன்மைக்காக சம்ஸ்கிருதம்:
  ஒரு கோடி நூல்களின் சாராம்சத்தை அரை ஸ்லோகத்திலேயே கூறிவிடும் இந்த புகழ்பெற்ற ஸ்லோகத்தால் சம்ஸ்கிருத நூல்களின் உயர்வு தெளிவாகிறது.

  ஸ்லோகார்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி:
  பரோபகாராய புண்ணியாய பாபாய பரபீடனா

  • பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் ஸ்லோகம் இது. பரோபகாரத்திற்காக வாழ்பவர்களை புகழ்ந்து கூறும் இந்த ஸ்லோகம் பலருக்கும் எழுச்சியூட்டக்கூடியது. பரோபகாராய வஹந்தி நிம்னகா:
   பரோபகாராய துஹந்தி தேனவ: !
   பரோபகாராய பலந்தி பூருஹ:
   பரோபகாராய ஸதாம் விபூதய: !!
  • பிறருக்கு உபகாரம் செய்வதற்காகவே நதிகள் பாய்கின்றன. பசுக்கள் பால் தருகின்றன. மரங்கள் பழங்களை அளிக்கின்றன. நல்லோர்களின் ஐஸ்வர்யம் பரோபகாரத்திற்காகவே உள்ளது. மாணவர்களுக்கு ஆதர்சமாக இருக்கக்கூடிய மற்றுமொரு ஸ்லோகம் இது. பர்த்ருஹரி அளித்த இந்த ஸ்லோகம் கல்விச் செல்வத்திற்கு உள்ள சிறப்பை இவ்வாறு விளக்குகிறது.
  samskritabharathi2 - 4

  ந சோர ஹார்யம் ந ச ராஜஹார்யம்
  ந ப்ராத்ரு பாஜ்யம் ந ச பாரகாரீ !
  வ்யயேக்ருதே வர்தத ஏவ நித்தியம்
  வித்யா தனம் சர்வதன பிரபாவம் !!

  • பிற செல்வங்களுக்கு உள்ள எல்லைகள் கல்விச் செல்வத்திற்கு கிடையாது. ‘வித்யா தனம்’ திருடர்களால் திருட இயலாதது. அரசாங்கம் உடைமைபடுத்தாது. அண்ணன் தம்பிகள் சொத்துப் பிரிவினை செய்து கொள்ள முடியாது. தோள்களுக்கு பாரமாக இருக்காது. செலவழிக்க செலவழிக்க வளர்ந்துகொண்டே இருக்கும்.

  சம்ஸ்கிருத மொழியில் கல்வியறிவுக்கு விளக்கமளித்த வாக்கியங்களையும் கல்வியறிவின் பலன்களை தெரியச் செய்யும் இதுபோன்ற ஸ்லோகங்களையும் மாணவர்கள் படித்தால் ஊக்கம் பெற்று உயர்வார்கள் அல்லவா?

  வித்யாததாதி வினயம், வினயாத் யாதி பாத்ரதா !
  பாத்ரத்வாத் தனமாப்னோதி, தனாத் தர்மம் தத: சுகம் !!

  • உலக மொழிகள் எதிலுமே இல்லாத விளக்கம் இது. வித்யையின் பிரயோஜனம் பற்றிக் கூறும் சுலோகம் இது.

  மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் எவ்வாறு உதவி புரியும்? மகரிஷிகளான சரகர், சுஸ்ருதர் போன்றவர்கள் அளித்த வைத்திய நூல்களை இன்றைய நவீன மருத்துவர்கள் படித்து புரிந்து கொண்டால் புதுப்புது கருத்துகளை வெளிக்கொணரும் யோசனை ஏற்படும். மருத்துவர்களிடம் நேர்மையின் விழுமியங்களை வளர்க்கும் விதத்தில் அறிவுறுத்தும் இந்த ஸ்லோகத்தை அனைத்து மருத்துவக் கல்லூரியிலும் காட்சிப்படுத்தினால் மருத்துவ மாணவர்களிடம் நிறைய மாற்றங்களை எடுத்து வரும். பணமே எப்போதும் எதிர்பார்ப்பாக இருக்க கூடாது என்று கூறுகிறது இந்த ஸ்லோகம்.

  samskritabharathi 1 - 5

  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுஸ்ருத மகரிஷி அளித்த இந்த சூக்தி என்றைக்கும் பயனளிக்கக் கூடியது.

  க்வசித் தர்ம: க்வசித் மைத்ரீ
  க்வசித் கீர்தீ: க்வசித் தனம் !
  கர்மாப்யாச: க்வசித் சேதி
  சிகித்ஸா நாஸ்தி நிஷ்பலா !! -( சுஸ்ருத சம்ஹிதை)

  • மருத்துவராக வேறு ஒரு மனிதருக்கு செய்யும் சிகிச்சை என்றைக்கும் வீண்போகாது. அடுத்தவருக்கு சிகிச்சை அளிப்பது உங்கள் தர்மம். அது உங்களுக்கு புண்ணியத்தை அளிக்கிறது. ஓரொருமுறை நீங்கள் செய்த சிகிச்சை மூலம் புது மனிதர்களோடு நட்பு ஏற்படுகிறது. மீண்டும் ஒரு முறை உங்களுக்கு புகழை சம்பாதித்துக் கொடுக்கிறது. உங்களுக்கு ஆதாயம் கூட கிடைக்கச் செய்கிறது. அதற்கும் மேலான பலனான அனுபவத்தை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கச்
   செய்கிறது.

  இந்த விளக்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இல்லாத மருத்துவர்களைப் பற்றி தெரிவிக்கிறது.

  திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் சம்ஸ்கிருத மொழி.

  எது இதில் உள்ளதோ அதுவே அனைத்திலும் உள்ளது என்று மகாபாரதம் பற்றி கூறியது சமஸ்கிருத மொழிக்கும் பொருந்தும். ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு கணக்கே இல்லை. சம்ஸ்கிருத நாடகங்களின் தாக்கம், சௌந்தரிய லஹரி, சிவானந்தலஹரி போன்ற ஆன்மீகப் படைப்புகளின் தாக்கம் திரைப்பட எழுத்தாளர்களிடம் பலமாக உள்ளது என்பதில் ஐயமில்லை. பஞ்சதந்திரம், கதா சரித் சாகரம் (11வது சதாப்தி), குணாட்யரின் பிரஹத் கதா சாகரம், வேதாளக் கதைகள்… இவ்விதம் பல சம்ஸ்கிருத நூல்கள் கதைகளுக்கும் பாடல்களின் படைப்புகளுக்கும் உதவியாக இருந்து வருகின்றன.

  சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஆயிரக்கணக்கான சாஸ்திர நூல்களை அந்தந்த துறை அறிவு உள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து பார்த்தால் பல அற்புதக் கருத்துகளை வெளிக்கொணர முடியும் .

  சமீபத்தில் நோபல் பரிசு பெற்றவர், பாரத வழிமுறையான உபாசனைகள் மனிதர்களை நோயிலிருந்து எவ்வாறு பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி செய்தவரே!

  தெலுங்கில் – பி எஸ் சர்மா.
  தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்
  (Source: ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ் அக். 2019)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-