Home அடடே... அப்படியா? வழக்கம் போல சிதம்பரம் அவுத்துவுட்ட பொய்மூட்டை! பதிலடி தந்தார் தஞ்சாவூர் ‘அரசு’ டாக்டர்!

வழக்கம் போல சிதம்பரம் அவுத்துவுட்ட பொய்மூட்டை! பதிலடி தந்தார் தஞ்சாவூர் ‘அரசு’ டாக்டர்!

p chidambaram

முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வழக்கம் போல் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்க, அவர் கூறியது போன்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது… இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை நாம் நம்புகிறார்கள். அனைத்தையும் நம்புகிறார்கள். அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளது. 99 சதவீத கிராமங்களில் கழிப்படை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்ததையும் நம்புகிறார்கள். அதுபோல், ஆயுஸ்மான் பாரத் திட்டத்தையும் நம்புகின்றனர்.

தில்லியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆயுஸ்மான் பாரத் திட்ட அடையாள அட்டையை காண்பித்து சிகிச்சை பெறும்படி அவரிடம் கூறினேன். ஆனால், அவர்களுக்கு, ஆயுஸ்மான் பாரத் திட்டம் உள்ளதே தெரியவில்லை.

அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கு சென்றும் தெரியவில்லை. ஆனால், இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாம் நம்புகிறோம். எந்த நோய்க்கும் பணம் செலவு செய்யாமல் சிகிச்சை பெறலாம் என நம்புகிறார்கள். நாம் அப்பாவிகளாக உள்ளோம். பல செய்திகள் மற்றும் விவரங்கள் உண்மைக்கு மாறாக உள்ளது…. என்று பேசினார் சிதம்பரம்.

இந்நிலையில், ப.சிதம்பரம் வழக்கம் போல் எப்படி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும் வகையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரின் பதிவினை சமூகத் தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அதில்… 12 வயது சிறுவன் வயிற்று வலிக்காக பட்டுக்கோட்டை யில் இருந்து அனுப்பி இருந்தார்கள் எங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு!

பரிசோதனையில் வயிறு வீங்கி இருந்தது , இதய துடிப்பு மிக அதிகமாக இருந்தது ,மேலும் நீர் சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் இருந்தான்

உடனே அவனுக்கு நெரம்பு வழி க்ளுகோஸும் ஆன்டி பையோட்டிக் மருந்தும் செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்தோம் ! மேலும் வயிறு வீங்கி போனது, ஸ்கேன் எடுத்ததில் குடல் அடைப்பு இருப்பதாகவும் ஆனால் காரணம் தெரிய வில்லை என்று வந்தது.

ரிஸ்க் அனைத்தையும் தெளிவு படுத்திவிட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம்
வயிற்றை கிழித்த வுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்தது. பின்னர் குடல் அழுகி இருப்பதை கண்டுபுடித்தோம்!

சிறு குடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அழுகி இருந்தது. அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு, சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சை செய்தோம் ,,,

குடல் அழுக காரணம் , வாழ்வுலஸ் என்று கண்டுபிடித்தோம் , அப்படியென்றால் ரத்த ஓட்டம் தடை பட்டு குடல் அழுகி போவது என்று பொருள். அறுவை அரங்கம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துர்நாற்றம் வீசியது!

குடல் அறுவை சிகிச்சை செய்தால் 5 நாட்களுக்கு உணவு கிடையாது Icu இல் வைத்து இரவு பகலாக பயிற்சி மருத்துவரும் , செவிலியர்களும் கவனித்து கொண்டனர். மெதுவாக உடல் தேறியது .!

6 வது நாள் காத்து பிரிந்த பிறகு தண்ணியும் இளநீரும் கொடுக்க ஆரம்பித்தோம். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால் , வயிற்று போக்கு ஏற்பட்டு மிக சிரமம் ஏற்பட்டது . 9 ஆம் நாள் இட்லி , சாதம் ஆரம்பித்தோம்

11 வது நாள் யாரும் எதிர்பார்க்காதது நடந்தது! தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது!

உள்ளே தைத்து வைத்த குடல் தையல் விட்டு போயுடுச்சுனு அர்த்தம் மலம் வயிற்று மேலே வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார் பிறகு அறுவை சிகிச்சை இல்லாமல், நெரம்பு மூலம் சத்து மருந்து , மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நெரம்பு மருந்துகள் செலுத்தியதில் தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது!

ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்தான். உடல் தேறி, இன்று வீட்டுக்கு போறான் தம்பி. இது மறுபிறவி இவனுக்கு!

கிட்டத்தட்ட 25 நாட்கள் எங்கள் வார்டில் இருந்துள்ளான் … இவர்களுக்கு ஒரு ருபாய் கூட செலவு இல்லை! இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்ச ருபாய் இருக்கும்.

கவனிக்க அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம். இது போல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது! என்ன ஒன்று இதை யாரும் வெளியே சொல்வதில்லை,!

அனைவருக்கும் இலவச மருத்துவம் மற்றும் பல மருத்துவ காப்பீடு திட்டம் தந்த மோடி வாழ்க @PMOIndia @narendramodi

https://twitter.com/Rajini_siva24/status/1215850600241541120

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version