December 3, 2021, 2:10 pm
More

  ரஜினியை கலாய்த்த உதயநிதியை கழுவி ஊத்தும் டிவிட்டர்வாசிகள்! அதுசரி… மூல பத்திரம் எங்கே?!

  udhayanidhi rajini - 1

  முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் – இப்படி ஒரு டிவிட் வெளியிட்டிருக்கிறார் தற்போதைய திமுக., இளைஞரணித் தலைவரும் திமுக. தலைவரின் மகனும் முன்னாள் திமுக., தலைவரின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின்.

  சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் மற்றும் முரசொலியினை இணைத்துப் பேசியது இப்போது சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது.

  முரசொலியை வைத்திருந்தால் அவன் திமுக., காரன். துக்ளக்கினை வைத்திருப்பவன் அறிவாளி என்று சொன்ன ரஜினியை இப்போது திமுக., காரர்கள் குதறி எடுத்து வருகிறார்கள்.

  அதற்கு பதிலடியாக, உதயநிதிக்கு பலரும் பழைய வரலாற்றை நினைவூட்டி வருகின்றனர்.

  அறிவாளி என்று சுட்டிக் காட்டியதால், முரசொலி படிக்கும் பரம்பரை திமுக., காரர்கள், சுயமரியாதை என்றால் என்ன என்று இப்போது வகுப்பு எடுத்து வருகிறார்கள்.

  dmk 1 - 2

  ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்…. என்று குறிப்பிட்டார்.

  ரஜினி எது பேசினாலும் அது திமுக.,சார்பு ஊடகங்களாலும் சமூக ஊடகங்களில் இயங்கும் திமுக.,வினராலும் அதிகம் விமர்சிக்கப்படும். இப்போது முரசொலியை வேறு குறிப்பிட்டு விட்டதால், ஏற்கெனவே முரசொலி மூலப்பத்திரம் எங்கே என்று சுயமரியாதைத்தனமாக சிலர் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதால், அதற்கு சுயமரியாதையுடன் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக.,வினர் இருப்பதால், இப்போது மேலும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

  ரஜினியில் பேச்சுக்கு, சுயமரியாதைத் தனமாக பதில் அளித்துள்ளார் பகுத்தறிவுப் பகலவனின் வாரிசின் வாரிசு உதயநிதி.

  இதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பதில் அளித்துள்ளார். பொங்கல் வாழ்த்து சொல்வதை போல ரஜினியை அவர் கிண்டல் செய்துள்ளார்.

  உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இப்போது, ரஜினியை சுயமரியாதையுடன் எப்படி அணுகினார்கள் ஸ்டாலினும், உதயநிதியும் என்று குறிப்பிட்டு, டிவிட்கள் பறக்கின்றன.

  ரஜினி வீடு தேடி சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். அப்போது யாருக்குமே அறிமுகம் இல்லாத தன் மகன் @Udhaystalin அவர்களை ரஜினி அருகே நிற்க வைத்து ஆசை தீர போட்டோ எடுத்துக்கொண்டு மறுநாள் நாளிதழ்களில் வரச் செய்தார் #துக்ளக்#Rajinikanth

  முன்னர் இதேபோல் திமுகவின் சிஏஏ போராட்டத்தின் போது, ரஜினியை கலாய்த்து, உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்து இருந்தார்.

  ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் – என்று டிவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் உதயநிதி.

  [email protected]
  ஒன்னு மட்டும் நல்ல தெரியுது கேவலமான விளம்பர யுக்தி இது #தலைசுத்திருச்சு ங்குற வார்த்தை இது பொறாமை .. இல்ல ஆற்றாமை னு ஒதுங்கி போய்டா முடியாது பலம் சக்தி வாய்ந்த ஒருத்தரை விமர்சனம் செய்யும் நபர் அதே தகுதியுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுக்கு உதாரணம் இந்த அரவேக்காடு தான் ….

  dmk 2 - 3

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,778FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-