December 6, 2021, 4:18 am
More

  பொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா!

  cow pooja - 1

  ஆதிகாலத்தில், தனக்கு பயன்படும் ஒவ்வொன்றையும் மதித்து வணங்கியது மனித இனம். கால்நடைகளை வைத்து பயிர் விளைவித்து உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொண்ட போது, அதற்கு உதவிய அனைத்தையும் வணங்கினான் மனிதன். அந்த வகையில், பசுவின் தேவை மனிதனுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. எனவே, பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வழிபட்டான்.

  வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, ‘காமதேனு’ என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது. வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, ‘காமதேனு’ என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது. வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, ‘காமதேனு’ என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.

  ‘கவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவநாநி சதுர்தச’ என்பது புராண வாக்கு. அதாவது, பசுவின் அங்கங்களில் ஈரேழு பதினான்கு உலகங்களும் அடங்கியிருக்கின்றனவாம்!

  india cows 1 web - 2

  கோயிலில், அதிகாலை வேளையில் கோ- பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பெருமானின் கருவறை வாசல் கதவுகள் திறக்கும் முன், கோயில் காராம் பசுவை அலங்கரித்து, பூக்களால் அர்ச்சித்து, கற்பூர ஆரத்தி காட்டி, குங்குமம் கொடுத்து, மங்கல திரவியங் களை வைத்து, திரையை அகற்றி பிறகு தீபாராதனை நடைபெறும். திருவரங்கம் முதலான முக்கியத் தலங்களில் இந்த தரிசனத்தை தினமும் காணலாம்!

  மனிதனுக்கு பயன்படாது என்று கழிக்கப்பட்ட பொருட்களான வைக்கோல், புல், கழுநீர், புண்ணாக்கு, தவிடு, தானியங்களின் தோல் போன்றவற்றை உணவாக ஏற்று, நமக்கு உணவாகும் பாலைத் தருவது பசுவின் தெய்விகம். இறைவனும் அப்படிப்பட்டவன்தானே!

  06 July23 Modi doneating 200 cows - 3

  குழந்தை செய்யும் குறும்புகளையும் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, குழந்தைக்கு நல்லதையே செய்யும் தாயின் நிலையைப் போன்றும், பக்தன் மீது பரிவு கொண்டு அருள் புரியும் தெய்வத்தின் நிலையைப் போன்றும் திகழ்வதாலேயே பசு, தெய்வத் தாய். இதனால்தான் கோ-பூஜை பழங்காலத்திலேயே பிரசித்தி பெற்றது!

  இல்லங்களில் மட்டுமல்லாது, கோயில்களில் கோசாலை அமைத்து பசுக்களை வளர்க்கின்றனர். பழங்காலத்தில், தானங்களில் கோ-தானம் சிறப்பான இடத்தை வகித்துள்ளது. இப்போதும்கூட சிலர், கோயில்களுக்கு கோ-தானம் செய்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள்.

  தெய்வமாகத் திகழும் பசுவை வழிபடுவதற்கு ஒரு நாளையும் ஒதுக்கினர். அது, தை மாதம் 2-ஆம் நாள். இந்த நாளில் பசுவைக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜை செய்து வழிபடவேண்டும்.

  kamadhenu cow - 4

  பூஜிப்பது எப்படி?

  சிலர் மந்திர பூர்வமாகச் செய்வார்கள். இருப்பினும், எல்லோருக்கும் பொதுவான வழிபாட்டு முறையும் உண்டு. மேலும், கோபூஜையுடன் இந்திர பூஜையும் செய்யும் வழக்கமும் உள்ளது.

  இல்லத்தில், விசாலமான இடத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும். அதிகாலையில், பசுவையும் கன்றையும் குளிப்பாட்டி, மஞ்சள்- குங்குமம்- சந்தனம் இட்டு அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.

  மற்றோர் இடத்தில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை வைத்துக் கொண்டு, நுனி இலை அல்லது தாம்பாளத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜிக்க வேண்டும்.

  இன்னொரு நுனி இலையில் சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, இந்திரனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகே பசுவுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

  பொங்கல், அகத்திக்கீரை அளிப்பது சிறப்பு. பிறகு தாம்பூலம் கொடுத்து, தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். பூஜையின் நிறைவில், கோ-மாதாவிடம் இப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  ரட்சமாம் ரட்சமே கேஹம் ரட்சமே புத்ர பௌத்ரகான்
  ரட்ச கோஷ்டம் ரட்ச பசூன் குருதேனூ: பயஸ்விநீ:
  அனயா பூஜயா இந்த்ர: ப்ரீயதாம் காமதேனுப்ரீயதாம்||

  என்று பிரார்த்தித்து, நமது வேண்டுதலைச் சொல்லி, பசுவை வலம் வந்து வணங்க, மங்கல வாழ்வு ஸித்திக்கும்; வீடு ஸ்பிட்சமாகும்.

  பசுவுக்குப் புல் கொடுத்தால், பஞ்ச மகா பாவங்களும் விலகும் என்றனர் முனிவர்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்தோ, தோஷமுள்ளவராகவோ இருந்தால், பசுவின் சாபம் இருக்கக் கூடும். அவர்கள், இந்தப் பாவங்கள் விலக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, பசுவுக்கு புல் கொடுத்துவர, தோஷங்கள் விலகும்; குலம் தழைக்கும்!

  ஸெளரபேப்ய: ஸர்வஹிதா: பவித்ரா: புண்யராசய:|
  ப்ரதிக்ருண்ணம் த்விமம் க்ராஸம் காவஸ் த்ரைலோக்ய மாதர:||

  ‘காமதேனு வம்சத்தைச் சேர்ந்தவையும், எல்லோருக்கும் நன்மை செய்பவையும், பரிசுத்தமானவையும், புண்ணியக் கூட்டங்களுமான… மூவுலகத்துக்கும் தாயான பசுக்கள், இந்தப் புல்லைப் பெற்றுக்கொண்டு அருள் புரியட்டும்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,798FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-