Home அடடே... அப்படியா? பரோலில் வந்த தொடர் குண்டுவெடிப்புக் குற்றவாளி திடீர் மாயம்!

பரோலில் வந்த தொடர் குண்டுவெடிப்புக் குற்றவாளி திடீர் மாயம்!

dr jalees ansari

பரோலில் வந்த தொடர் குண்டு வெடிப்புக் குற்றவாளி.. (தற்போது அஜ்மர் ஜெயிலில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருபவன்) Dr.ஜலீஸ் அன்ஸாரி.. நேற்று மும்பையில் காணாமல் போய்விட்டார்.

இவன் ஒரு மிக முக்கியமான தீவிரவாதி.. 1990 களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நாடெங்கும் நிகழ்த்தியவன்.

இவனை குற்றவாளி என்று நிரூபித்தது இவன் நிகழ்த்திய ஜெய்பூர் தொடர் குண்டு வெடிப்பில், அஜ்மர் குண்டு வெடிப்பில் மற்றும் மாலேகான் குண்டு வெடிப்பில். 1990 வாக்கில் இவன் பாகிஸ்தானில் தீவிரவாத டிரெயினிங் எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

தொழில்முறையில் மருத்துவப் படிப்பு படித்த இவன் தன் தொழிலை தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுத்தி.. தேசத்திற்கெதிராக பல தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திக் காட்டினான்.

டாக்டர் ஜலீஸ் அன்சாரி, 90களின் முற்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜெய்பூர் தொடர் குண்டுவெடிப்பு, அஜ்மர் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புக்களில் தொடர்புடையவன். ஆயுள் தண்டனை பெற்று அஜ்மிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்சாரி, மும்பையில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக டிச.,28 ம் தேதி உச்ச நீதிமன்றம் பரோல் அளித்ததை அடுத்து, வெளியே வந்தான்.

நீதி மன்ற உத்தரவின் படி இன்று (ஜன.,17) காலை அவன் சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அன்சாரி மாயமாகி விட்டதாக அக்ரிபடா போலீஸ் ஸ்டேஷனில் அவனின் குடும்பத்தினர் நேற்று (ஜன.,16) புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது, நேற்று காலை 5 மணிக்கு தொழுகைக்காக சென்ற அன்சாரி அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிய வந்துள்ளது.

பலமணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததாலும், அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாலும் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாயமான அன்சாரியை மும்பை போலீசார் மற்றும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.

தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அடையாளம் காட்டப்படும் அன்சாரி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையத்தில் பயிற்சி பெற்றவன். தடைசெய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுடனும் அன்சாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version