Home இந்தியா இஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை!

இஸ்லாமிய கும்பல் ரவுடியிஸம்; மனைவிக்கு உட்கார இடம் கேட்டு கெஞ்சிய கணவன் அடித்துக் கொலை!

கைக்குழந்தையுடன் தன் மனைவி சிரமப்பட்ட போது, அதைக் கண்டு சகியாமல், ரயிலில் சற்று நகர்ந்து கொண்டு தன் மனைவிக்கு கொஞ்சம் இடம் கொடுக்குமாறு கெஞ்சிய கணவன், இஸ்லாமிய கும்பல் ரவுடிகளால் அடித்தே கொலை செய்யப் பட்டுள்ளார். கும்பலாக சேர்ந்தால், அடுத்தவர் சிரமப் படுவதைக் கண்டு மனம் இரங்கி உதவி செய்யாமல் போவது மட்டுமல்ல, வன்முறையைக் கையில் எடுத்து அடித்தே கொல்வார்கள் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

மும்பை-லாதூர்-பிதர் எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை ஓர் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 26 வயது இளைஞரை இஸ்லாமிய பெண்கள் ஆறு பேர் உள்பட 12 பேர் அடித்தே கொலை செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் புனே மற்றும் டவுண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்ததாக ஜிஆர்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்ட சாகர் மார்க்காட், அவரது மனைவி ஜோதி, அவரது தாய் மற்றும் இரண்டு வயது மகள் ஆகியோர் புனே நிலையத்திலிருந்து ரயிலின் பொதுப் பெட்டியில் அதிகாலை 12.45 மணி அளவில் ஏறினர்.

“கொல்லப்பட்டவரின் மனைவி பதிவு செய்த புகாரின் படி, அந்தப் பெட்டியின் இருக்கைகள் நிரம்பியிருந்தன. அமர்வதற்கு ஒரு சீட் கூட காலியாக இல்லை. அப்போது சாகர் மார்க்காட் பர்தா அணிந்திருந்த ஒரு பெண் பயணியிடம், கொஞ்சம் நகர்ந்து கொண்டு அமர்ந்து சிறிதளவு இடம் கொடுத்தால், கைக்குழந்தையுடன் நின்று கொண்டு சிரமப்படும் தன் மனைவி அமர்வதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்தப் பெண் மற்றும் உடன் வந்த மேலும் ஐந்து பெண்கள், சாகர் மார்காடை வாயில் வந்த மொழியில் எல்லாம் திட்டித் தீர்த்தனர். வார்த்தை துஷ்பிரயோகம் செய்து அவமரியாதை செய்யத் தொடங்கினர். கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆறு பெண்கள் உட்பட 12 பேர் சாகர் மார்க்காட்டை அடித்து உதைத்துள்ளனர் என்று அந்த ரயில்வே அதிகாரி கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றபோது, ​​அவர்கள் மனம் திரும்பவில்லை, ரயில் டவுண்ட்டை அடையும் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாகர் மார்க்காட்டை கொடூரமாகத் தாக்கியபடியே வந்துள்ளனர்… என்று அவர் மேலும் கூறினார்.

டவுண்ட் நிலையத்தில், காவல்துறையினர் சாகர் மார்க்காட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய கும்பல் தாக்குதலில் உயிரிழந்தவரும் அவரது குடும்பத்தினரும், கல்யாணில் வசிப்பவர்கள். அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்திவாடிக்கு சென்று கொண்டிருந்தனர். இதை அடுத்து, கும்பலாக ஒரு மனிதரைக் கொன்ற 6 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் மீது, பிரிவு 302 (கொலை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version