spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்ஸ்டாலின் திமுக.,வை ஒரு முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக :...

ஸ்டாலின் திமுக.,வை ஒரு முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக : ஹெச்.ராஜா!

- Advertisement -

கரூர்: மு.க.ஸ்டாலின் திமுக.,வை முஸ்லிம் லீக்காக மாற்றி விட்டார்; அவர் போராடியது பாகிஸ்தானில் இருந்துவரும் முஸ்லிம்களுக்காக! இனி தி.மு.க வில் இருக்கும் சரியான சிந்தனையாளர்கள் மற்றும் இந்துக்கள் தி.மு.க வினை விட்டு வெளியேறுவார்கள்; சி.ஏ.ஏ சட்டம் குறித்து தவறாக பிரசாரம் மேற்கொண்டு, மேலும் மேலும் பொய்களைப் பரப்பி வரும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

அவர் இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது,

மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ சட்டம் குறித்து தவறான பிரசாரம் மேற்கொண்டு, மக்களிடையே பதற்றத்தினை உருவாக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன.அவர்களின் இந்த முயற்சி வன்மையான கண்டனம் செய்யப் பட வேண்டியது. ஏனென்றால் 2003 இல் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாயி அவர்களிடம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்துள்ள அந்த நாடுகளைச் சார்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்..

அதுபோல், 2005ஆம் ஆண்டிலும் செல்வி மம்தா பானர்ஜி பார்லிமெண்ட்டில் சி.ஏ.ஏ மட்டுமல்ல, என்.ஆர்.சி அஸ்ஸாமில் மட்டும் ஏன் இருக்கிறது, பெங்காலுக்கும் கொண்டு வரவேண்டும் என்று ஆக்ரோஷமாக பேசி, கையில் இருக்கும் பேப்பரை எடுத்து சபாநாயகர் முன் விசிறி அடித்தார்.

அதே போல, 2012 ம் ஆண்டில் சீத்தாராம் யெச்சூரி தலைமையில், சி.பி.எம் தேசிய மாநாட்டில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அங்கு வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினர் என்று அவர்களுடைய மாநாட்டில் தீர்மானம் போட்டது. ஆனால் அதை மோடி தலைமையிலான அரசு செயல்முறைப்படுத்தியது.

நாடு முழுவதும் தவறான பரப்பி காங்கிரஸ் கட்சி ஒரு கோமாளி கூட்டம் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு செயல்களை செய்து வருகிறது. ஏனென்றால் சி.ஏ.ஏ அவர்கள் கேட்ட சட்டம்! என்.ஆர்.சி ஐ பொறுத்தவரை 1985 ம் ஆண்டில் ராஜீவ்காந்தி பிரதமராக இருக்கும் போது, ஸ்டூடண்ட்ஸ் யுனியனோடு ஒப்பந்தம் போட்டு அதன் மூலமாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நேஷ்னல் ரிஜிஸ்டர் ஆப் சிட்டிசன் இது அஸ்ஸாமிற்கு மட்டுமே கொண்டு வரப்பட்ட சட்டம், கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தது காங்கிரஸ் அரசாங்கம்!

உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்டத்தினை பெங்காலுக்கும் வேண்டுமென்றும் 2005 ல் கூறியவர் மம்தா பானர்ஜி! ஆனால் அதை தற்போது ஏன் எதிர்க்கின்றார்கள்? 2005 ல் மேற்கு வங்கத்திற்கு பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் இடதுசாரிகள் ஆதரவாளர் என்பதினால் அதை எதிர்த்தார். ஆனால் அவர்கள் தற்போது தங்களுக்கு ஆதரவாளர்கள் ஆனதால் தற்போது அதே மம்தா பானர்ஜி எதிர்க்கின்றார். பங்களாதேஸி இந்தியக் குடிமகன்கள் என்று ஒரு முதல்வர் மம்தா பானர்ஜியே சொல்கின்றார்.

நேஷனல் பாப்புலேஷன் ரிஜிஸ்ட்ரேஷன் என்கின்ற இந்திய ஜனத்தொகை கணக்கெடுப்பு என்பது பிரிட்டீஸ் காலத்திலிருந்தே, இந்திய ஜனத்தொகை கணக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளும் என்று 130 ஆண்டுகளுக்கு மேல் நடந்து கொண்டு இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிற்கு முன் 2009 ம் ஆண்டு நேஷனல் பாப்புலேஷன் ரிஜிஸ்டர் என்பதனை அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கொண்டு வந்தார். ஆனால் அந்த சட்டத்தினை அதே சிதம்பரம் இன்று எதிர்க்கின்றார். இவர்கள் மனிதர்களா? அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மட்டுமல்ல, தமிழகத்தில் கூட மத ரீதியான போராட்டங்களாக மாற்றியுள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போஸ்டர்களை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக என்று ஒட்டியுள்ளனர்.

இஸ்லாமிய மத அடிப்படையில் 1947 ல் பாகிஸ்தான், பங்களாதேஷை கொடுத்துள்ளோம்! எனவே பாகிஸ்தான், பங்களாதேஷிகளை நம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். 4 தினங்களுக்கு முன்னர், பெருந்துறையில் குற்ற நடவடிக்கைகளில் 4 பேர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷில் என்ன முகவரி கொடுத்துள்ளார்களோ, அந்த முகவரி தான் இங்கேயும் கொடுத்துள்ளனர். வெளிநாட்டினர் சட்டப்படி வெளியேற்றப்படும் சட்டத்தில்….

ஏன் ? அஸ்ஸாமில் மட்டும் என்.ஆர்.சி கொண்டு வந்துள்ளார்கள் என்றால் பங்களாதேஷ் பகுதியிலிருந்து வருபவர்களைக் கண்டறிய கொண்டு வந்தவர்கள். ஆகவே தமிழகத்தில் மட்டும் சுமர் லட்சக் கணக்கானோர் பங்களாதேஷ் நாட்டினர் வந்துள்ளனர். ஆனால், இது அரசுக்கும் தெரியும்! அதைக் கண்டறியத் தான் இந்த பதிவேடு!

பெருந்துறையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமானோர் இங்கு வந்து குடியேறி உள்ளனர். ஒவ்வொரு தேச பக்த இந்தியனுக்கும் மத பாகுபாடு இல்லாமல் கூறுவது என்னவென்றால், சட்டவிரோதமாக குடியேறிய அந்நிய நாட்டினரை வேலைக்கு வைத்து கொள்ள வேண்டாம்! இந்த மாதிரியான தவறுகள் நடப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து!

அந்நிய நாட்டிலிருந்து ஊடுருவியவர்களை வெளியேற்ற வேண்டும். வேலி தாண்டி வந்தவரை என்ன செய்வது? எங்க ஊரில் உள்ளவர், 106 நாட்கள் திகார் ஜெயிலில் இருந்தவர் சிதம்பரம் கூறுகின்றார்…. வேலி தாண்டி வந்தவரை விரட்டி விட தான் வேண்டும் என்றார். 1985 ல் இருந்தே என்.ஆர்.சி இருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தி.மு.க கட்சியினை முஸ்லீம் லீக் ஆக மாற்றி விட்டார். திராவிட முன்னேற்ற கழகத்தினை சார்ந்த இயக்க தொண்டர்கள் மற்றும் இந்துக்கள் தற்போது எங்களிடம் (பா.ஜ.க வினரிடம்) சொல்வது என்னவென்றால்., கட்சி தலைமை போகும் பாதை சரியில்லை,. ஏனென்றால் நாட்டிற்கு ஆபத்தினை விளைவிக்க உள்ள ஒரு விஷயத்தினை கட்சி தலைமை ஆதரித்துள்ளது என்று கூறுகின்றனர்.

இதை நிருபிக்கும் வகையில் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் ஷாகீபாக் போராட்டத்தைப் போன்று யாரெல்லாம் இருக்கின்றார்கள்?! வண்ணாரப்பேட்டையில் யாரெல்லாம் உட்கார்ந்து இருக்கின்றனர்.? ஸ்டாலினோ அல்லது மற்றவர்களோ உட்கார்ந்து உள்ளனரா? இல்லை, திருப்பூர், கோவை, திருச்சி உழவர் சந்தை, மதுரையில் உள்ள தேனி ஹைவே யில், ஆகவே இப்போது பட்டவர்த்தமாக நிருபணம் ஆகி விட்டது இது எதிர்கட்சிகளின் போராட்டம் அல்ல, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள்,. நாடு முழுவதும் 1947 க்கும் முந்தைய கலவரச்சூழல்களை உருவாக்க இந்தக் கலவரம் நடைபெற்று வருகிறது.

பாதிப்பு இருந்தால் யார் வேண்டுமென்றாலும் போராடலாம், ஆனால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்! எந்தக் காரணமும் இல்லாமல், யாருடைய முடிவும் இல்லாமல். ஆனால் சட்டவிரோதமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கேட்பது தேசத்துரோகம்.

நேற்று திருப்பூர் பற்றி உயர் நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பு கொடுத்துள்ளது. சட்டவிரோதமாக கூடுபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தீர்ப்பு ! அது திருப்பூருக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அதை அமல்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும். வண்ணாரப்பேட்டையில் மட்டுமல்ல, கோவையில் கலவரத்தினை தூண்டுபவர்கள், யார், காவல்துறையினர் எந்த வித ஆயுதமும் இல்லாமல், உள்ள நிலையில் காவல்துறையினரை இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் ஏராளமானோர் தாக்குகின்றனர். அப்போது, வன்முறையினை தூண்டுபவர்கள் யார் ? வன்முறையாக மாற்றுபவர்கள் வன்முறை சக்திகள், ஆகவே, தமிழகத்தில் காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினரையும் மிரட்டுபவர்கள் யார் என்பதை காவல்துறை பார்க்க வேண்டும். மிரட்டலையும், வன்முறையையும் இஸ்லாமிய அமைப்புகள் கையில் எடுத்துள்ளன.

தமிழகத்தில் இந்துக்களுக்கு மட்டுமே தமிழ் என்று போராடும் தி.மு.க ஏன் ? இஸ்லாமியர்களிடையே தமிழுக்காக போராடவில்லை? இந்துக்களை மட்டுமே தி.மு.க வினரும், தி.க வினரும் பேசி வருகின்றனர். அதில் குறிப்பாக கோயில்களைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர்.

அக்கட்சியினர் மட்டுமே இந்துக்கள் கோயிலில் மட்டுமே தலையிடுகின்றனர். எங்கே அந்த கும்பல் எல்லா மசூதிகளின் முன்னிலும் நின்று, தமிழில் நமாஸ் பண்ண வேண்டுமென்று கூறுகின்றனரோ, அன்று நான் இது குறித்து பேசவில்லை~ தமிழில் நமாஸ் பண்ண வேண்டுமென்று கூறட்டும், பின்பு தமிழில் குடமுழுக்கு பற்றி பேசட்டும்! அவர்கள் அரபியில் தொழட்டும், அது குறித்து எனக்கு எந்த குழப்பமும் இல்லை. அது அவர்களுக்கான உரிமை. ஆனால் நான் சொல்வது, இவர்களைப் பற்றி. வீரமணி, ஜெய்னுலாபுதீன், ஸ்டாலின் என்றெல்லாம் அவர்கள் இப்படி வததால் நான் அவர்களிடம் கேட்கிறேன்….

இலங்கையில் கூட தமிழர்களுக்கு மூன்று வித கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் மீட்போம். ஆலய நிலங்கள் அரசு நிலங்கள் அல்ல, அது கோயிலுக்கே சொந்தம்! அந்த நிலங்கள் கோயிலுக்கு மட்டுமே சொந்தம்!. அதை அரசாங்கம் எடுத்துக் கொள்ள முடியாது!

அரசாங்கம் மத சார்பற்றது என்றால் அதில் ஒரு மதத்தினருக்கு மட்டுமே (இந்துக்களின்) உரிய நிலங்களில் கவனம் செலுத்துவது எப்படி? ஏன்? என்று கேளி எழுப்பினார் ஹெ.ராஜா.

அவரது இந்த பேட்டியின் போது, பா.ஜ.க மாவட்டத் தலைவர் கே.சிவசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வீடியோ பதிவு மற்றும் செய்தி: – ஆனந்தகுமார், கரூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe