September 28, 2021, 1:36 pm
More

  ARTICLE - SECTIONS

  ஒரே ஒரு மாநாடு; அரசின் ஒட்டுமொத்த முயற்சியும் ‘க்ளோஸ்’! தமிழக முஸ்லிம்களே அதிகம்!

  தில்லியில் தப்ளிக் இ ஜமாஅத் இஸ்லாமிய மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 2,137 பேரின் அடையாளம் தெரிந்தது.. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிகம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

  corona spread - 4

  தில்லியில் தப்ளிக் இ ஜமாஅத் இஸ்லாமிய மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 2,137 பேரின் அடையாளம் தெரிந்தது.. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே அதிகம் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

  உலகம் முழுதும் கொரோனா பீதி அதிகரித்த நிலையில் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று அறிகுறி கடந்த ஜன.30இல் தெரியவந்தது. அதற்குள் உலக நாடுகள் பலவற்றில் இரண்டாம் கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது.

  இந்நிலையில், தில்லியில் ஷாகீன் பாக் பகுதியில் சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவற்றை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் இஸ்லாமியர்களைத் திரட்டி போராட்டத்தை நடத்தி வந்தன. அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. மேலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களிலும் போராட்டத்தை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருந்தார்கள்.

  caa nrc npr - 5

  கொரானோ வைரஸ் தொற்றால் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்ற அச்சத்தால், மத்திய மாநில அரசுகள் அவர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, போராட்டங்களை கைவிடுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தன. ஆனாலும் அரசின் கெஞ்சலுக்கு மிஞ்சும் வகையில், உயிர் எங்களுக்கு மயிர், கொரோனாவுக்கு பயந்து வீட்டில் இருப்பதை விட சிஏஏ., என்.ஆர்.சிக்கு எதிராக போராடி சாவதே மேல் என்று அந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள அப்பாவி மக்களையும் தூண்டி கொரோனா நோய்த் தொற்றுக்கு பலிகடாவாக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திட்டமிட்டு செயலில் இறங்கினர்.

  இத்தனை விழிப்புணர்ச்சியும் கெஞ்சுதல்களும் ஏற்படுத்தப் பட்ட போதிலும், வெளிநாட்டில் இருந்து முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாநாடு என்று தெரிந்தும், தில்லி மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து தான் அதிகம் பேர் சென்றிருக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரத்தக்க தகவலாக உள்ளது. அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படமாட்டோம், நாங்கள் வைத்ததே சட்டம் என்ற எதேச்சாதிகார அகம்பாவப் போக்கால் இப்போது இஸ்லாமியக் குடும்பங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

  தில்லி மாநாட்டில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதால் நாடு முழுவதும் கொரோனா பீதி உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1507 ஆக உயர்ந்துள்ளது.

  தில்லியில் மார்ச் 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது சவுதி, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

  muslim - 6

  மேலும் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தெலங்கானா, தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

  இதையடுத்து தில்லி மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர்களுக்கு திரும்பிய அனைவரையும் கண்டுபிடிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 515 பேர் உட்பட நாடு முழுவதும் 2,137 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டுபிடித்து தனிமைப் படுத்தும் பணிகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

  இந்தநிலையில், தப்ளிக் இ ஜமாத்தின் மௌலானா மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அஸ்ஸாமிலிருந்து 216 பேரும், உத்தரப் பிரதேசத்திலிருந்து 156 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 109 பேரும், மத்தியப் பிரதேசத்திலிருந்து 107 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

  பீகாரில் இருந்து 86 பேரும், தெலங்காணாவிலிருந்து 55 பேரும், ஜார்க்கண்டிலிருந்து 46 பேரும், கர்நாடகாவிலிருந்து 45 பேரும், உத்தரகண்ட்டிலிருந்து 34 பேரும், அந்தமானிலிருந்து 21 பேரும், ராஜஸ்தானிலிருந்து 19 பேரும், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிஸாவிலிருந்து தலா 15 பேரும், பஞ்சாபிலிருந்து 9 பேரும், மேகாலயாவிலிருந்து 5 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

  இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட இஸ்லாமியர்களே அதிகம் என்பதும் அவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, கொரோனோ பாதிப்பு பட்டியலில் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  கேரளத்தில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டதற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நேரடியாக வைரஸ் தொற்று இருந்ததும், தமிழகத்தில் இத்தனை பாதிப்பு ஏற்பட வெளிநாட்டினர் மூலம் அவர்களுடன் மாநாட்டில் கலந்துகொண்ட உள்நாட்டினருக்கு பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டு மக்களைக் காக்கவேண்டும் என்பதற்காகவே 21 நாள்களுக்கு தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவு எல்லாம் போட்டு மத்திய மாநில அரசுகள் முயற்சிகளைச் செய்த போது, அவற்றை துச்சமென எண்ணி வேண்டுமென்றே வீம்புக்கு இது போல் சிலர் செய்திருப்பதால் இப்போது பொதுமக்கள் பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-