spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சூரரைப் போற்றும் சூர்யாவுக்கு... சாமானியனின் மனம் திறந்த மடல்!

சூரரைப் போற்றும் சூர்யாவுக்கு… சாமானியனின் மனம் திறந்த மடல்!

- Advertisement -
8 write down8

நீங்கள் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வந்தது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன் மகிழ்ச்சி.

நல்லோர் சிந்தனை படிக்காத காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு ஜோதிகாவின் வார்த்தை புரியாது எனவும்

ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தப்பாமல் தாளமிட்டு ஊடகங்களில் தாங்கள் அறிக்கை அளித்துள்ளதையும் பார்த்தேன்

ஆபாசத்தை அள்ளி தெளித்து கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டி பண்பாட்டை கலாச்சாரத்தை சீரழித்த நீங்களும் உங்கள் மனைவியும்

நல்லோர் சிந்தனையை நிறைய படித்து நிரம்பி வழியும் அளவு காது கொடுத்து கேட்பவர்கள் என்ற லட்சணத்தை ஊரறியும்

பக்கத்தில் ஆஸ்பத்திரி அசிங்கமாக கிடந்ததால் தஞ்சை கோவிலுக்குள் நான் போகவில்லை என ஜோதிகா எகத்தாளம் பேசியதற்கு எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாம் முட்டாள்களா ? நல்லோர் சிந்தனை அறியாதவர்களா ?

தமிழகத்தில் மட்டுமல்ல கம்போடியா போன்ற உலகின் பல்வேறு இடங்களில் கலைநயத்தோடு நூற்றுக்கணக்கான ஆலயங்களை கட்டிய ராஜராஜன் உள்ளிட்ட சோழ மன்னர்களும் பாண்டிய ,பல்லவ ,சேர மன்னர்களும் நம்முடைய முன்னோர்களும் ஏதோ முட்டாள்கள் போல ஜோதிகா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை ஜெய்ப்பூர் அரண்மனையோடு ஒப்பிட்டு பேசி இருப்பதிலிருந்து தஞ்சை பெரிய கோயில் தனது சொகுசு பங்களா போல தான் ஜோதிகாவின் சிற்றறிவுக்கு எட்டி இருப்பது தெரிகிறது

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த சாதனா (ஜோதிகா) தஞ்சை கோவிலுக்கு நான் செல்லவில்லை என பெருமையாக பேசுவதில் ஆச்சர்யம் இல்லை. வருத்தமும் இல்லை.

ஆனால் கோவிலுக்கு செலவு பண்ணும் காசை அரசு ஆஸ்பத்திரி கட்டனும்னு யாரே எழுதி கொடுத்த வசனத்தை வன்மத்தோடு வாந்தியெடுத்தார் ஜோதிகா என்பதால் தான் பிரச்சனை

தஞ்சை கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் ஆயிரகணக்கான கோவில்கள் உண்டியல் பணத்தை யார் கொண்டு செல்லுகிறார்கள் எதற்கு செலவிடுகிறார்கள் என்பது கற்புக்கரசி ஜோதிகாவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை

கோவில் உண்டியலில் போடும் காசை அரசு ஆஸ்பத்திரி மருத்துவமனை கட்டிடங்களுக்கும் மக்கள் பணிகளுக்கும் செலவு செய்கிறது என்பதை ஊருக்கே புத்திமதி புண்ணாக்கு சொல்லும் உங்க அப்பாரு கூடவா உங்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை

ஆறாம் அறிவோடு ஜோதிகா பேசியிருந்தால் அரசுக்கு ஒரு காசு வருமானம் அளிக்காத பள்ளிவாசல் சர்ச் பற்றி அல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும். தொப்புளில் ஜிமிக்கி மாட்டி ஊருக்கு உடம்பை காட்டிய மங்கையர் குல மாணிக்கம் ஜோதிகாவிடம் அந்த அறிவை எதிர்பார்த்தது எங்கள் தவறு தான்.

surya statement
surya statement

சரி ஆஸ்பத்திரி அசிங்கமாக கிடந்ததால் ஷீட்டிங் முடிந்து தஞ்சை கோவிலுக்குள் செல்லவில்லை என விஷத்தை கக்கிய ஜோதிகா அந்த ஷீட்டிங் முடித்து பல கோடி செலவில் கட்டப்பட்டு சகல வசதிகளுடன் இருக்கும் உங்கள் சொகுசு பங்களாவிற்கு வர மட்டும் மனம் இருந்ததோ ?

நூறு ரூபாய் சம்பாதித்து மன நிம்மதிக்காக அரசு பணிக்காக கோவில் உண்டியலில் பத்து இருபது ரூபாய் போடும் மக்களுக்கு அட்வைஸ் சொல்கிறார் உங்கள் மனைவி ஜோதிகா

அது சரி தமிழக மக்கள் சினிமா மோகத்தை தொழிலாக்கி நீங்க , உங்கள் அப்பா , உங்க தம்பி , மனைவி என நான்கு பேர் கோடி கோடியாய் சம்பாதித்த சொந்த பணத்தில் எத்தனை மருத்துவமனை கட்டினீர்கள் எத்தனை பள்ளிக்கூடம் கட்டினீர்கள்.

உடலை ஒளிவு மறைவின்றி காட்டியது போல உங்கள் உண்மையான வருமானத்தை அரசாங்கத்துக்கு காட்டி வரியாது ஒழுங்கா கட்டினீர்களா என்பதை உங்கள் மனசாட்சி உங்களை கேட்கட்டும்.

கடவுள் மறுப்பாளர்களும் இந்து மத எதிர்ப்பாளர்களும் ஜோதிகா கருத்திற்கும் அதற்கு முட்டுகொடுத்த உங்கள் அறிக்கைக்கும் ஆதரவு தெரிவித்து புகழ்பாடுவதில் இருந்து இதன் வசனகர்த்தா இயக்குனர் யார் என்பதை உணர முடிகிறது.

தமிழ் கடவுள் முருகனைப் போற்றிய சிவகுமாரனின் மகன் சரவணன் தற்போது சூர்யாவாக உருவெடுத்து சூரரைப்போற்று என்ற தலைப்பில் திரைப்படம் எடுப்பதை இருப்பதை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது சூர்யா

அரசு கட்டடங்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் கல்வி நிறுவனங்கள் மீதும் உங்களுக்கும் ஜோதிகாவுக்கும் அக்கறை இருந்தால் சினிமா பார்த்து தியோட்டருக்கு சென்று நூற்றுக்கணக்கில் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீணாக செலவு செய்வதை தவிர்த்து அரசு மருத்துவமனை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு செலவு செய்யுங்கள் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா

சினிமா படத்தை பார்த்து காசை வீண் அடிப்பதில்லை என்று தமிழக மக்கள் என்றோ முடிவு செய்திருந்தால் ஜோதிகா இன்றைக்கு என்ன தொழில் வேலை செய்து சம்பாதித்து இருப்பார் என்பது ஜோதிகாவுக்கு மட்டுமே தெரியும் அதை அவருடைய முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முன்னோர் வாக்குகளை நாங்கள் நன்றாகப் படித்து இருக்கிறோம் சூர்யா. நீங்களும் உங்கள் மனைவி ஜோதிகாவும் உங்கள் குழந்தைகளுக்காவது அதை சொல்லிக் கொடுங்கள். உங்கள் முதுகில் ஒரு மூட்டை அழுக்கை வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • கா.குற்றாலநாதன், நெல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe