spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைTASMAC … கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு! எதற்காக? யாருக்காக? யாரை எதிர்த்து இந்த போராட்டம்?!

TASMAC … கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு! எதற்காக? யாருக்காக? யாரை எதிர்த்து இந்த போராட்டம்?!

- Advertisement -
liquor sqaure
liquor sqaure

மதுக் கடைகள் திறப்பதைக் கண்டித்து, தமிழக மக்கள் இன்று கருப்பு சின்னம் அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திமுக., தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில்… கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள், காவல் துறையை சேர்ந்தவர்கள் பலரும், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

கள வீரர்களான அவர்களுக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத தமிழக அரசை கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு நடவடிக்கை பற்றி கவலைப்படாமல், மதுக் கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.

மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்காததையும் கண்டிக்கிறோம். எனவே மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக நாளை (மே 7) ஒரு நாள் மட்டும் கருப்பு சின்னம் அணிய வேண்டும்.

காலை 10:00 மணிக்கு தமிழக மக்கள் அவரவர் வீட்டின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் 15 நிமிடங்கள் நிற்க வேண்டும். அப்போது ‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்த அ.தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்’என முழக்கமிட்டு கலைய வேண்டும்.. என்று கூறியுள்ளனர்.

திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறிக்கை சமூகத் தளங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. மதுக்கடைத் திறப்பு என்பதை யார் எதிர்க்கிறார்கள்? எதற்காக எதிர்க்கிறார்கள்? அவர்கள் எதிர்ப்பதற்குத் தகுதியானவர்களா? என்று பலவிதங்களில் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

dmk admk

அதே போல், அதிமுக., அரசை சாய்ப்பதற்கு திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பு… திமுக., தனது சாராய ஆலைகளை மூடுவதற்கும், மது பாட்டில்கள் ஆலைகளை விட்டு வெளியே வராமல் தமிழக அரசின் டாஸ்மாக்குக்கு விற்பனை செய்யாமல் தடுத்தும் விட்டால், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கிடைக்காது. அதனால் டாஸ்மாக் கடைகள் செயல்பட முடியாது. மது பாட்டில்கள் கிடைக்கவில்லையே என்ற கோவத்தில் மதுப் பிரியர்கள் அனைவரும் தமிழக அரசை திட்டித் தீர்த்து பெரும் புரட்சியில் இறங்குவார்கள். ஆக… ஆக… எடப்பாடி பதவி விலகணும் என்று ஸ்டாலின் ஓர் அறிக்கை விட்டால் போதும். அதன்மூலம் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும். ஸ்டாலின் நினைத்தது நிறைவேறிவிடும் … என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்த மேலும் இரு கருத்துகள்…

திமுக வின் முன்னணித் தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் நடத்தும் ‘கோல்டன் வாட்ஸ்’.
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்கள் நடத்தும் ‘எலைட்’.
கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படத்தைத் தயாரித்த ஜெயமுருகன் அவர்கள் நடத்தும் ‘எஸ்என்ஜே’.
திமுகவுக்கு நெருக்கமானவரான காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் அவர்கள் நடத்தும் புதுக்கோட்டை ‘கால்ஸ்’.
திமுக ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் தரணிபதி நடத்தும் ‘இம்பெரியல்’.
இவற்றிலிருந்து சரக்கு வந்தால் தான் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடியும்!

திமுக தலைவர் ஸ்டாலின ஒரு அறிக்கை விட்டு “கொரோனா பரவிட்டு வர நேரத்துல நாங்க அரசுக்கு சரக்கு தர மாட்டோம்” னு கொஞ்சம் சொல்லச் சொல்லுங்க பாப்போம்.. Rolling on the floor laughing Face with tears of joy

  • மோகன்ராஜ் ஜபமணி.

தேவ பாலன் @Deva_BalanD : ராஜாஜி கெஞ்சியும், 1974ல் விடாப்பிடியாக மதுவை கொண்டு வந்தார் கலைஞர்
1989, 1996, 2006 என ஆட்சிக்கு வந்த போதும் மது ஒழிப்பு செய்யவில்லை, பதிலுக்கு பாக்கெட் சாராயம் தான் கொண்டு வந்தார் கலைஞர்
திமுக பிரமுகர்கள் ஆலையில் தான் இப்போதும் மது உற்பத்தி ஆகிறது
இது தான் எங்கள் மது ஒழிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe