Home அரசியல் மாங்கல்யம் ஏற்ற மீனாட்சியம்மை! தாலியறுக்கும் தி.க.வினர்! கேள்வி எழுப்பும் தமிழர் கட்சி!

மாங்கல்யம் ஏற்ற மீனாட்சியம்மை! தாலியறுக்கும் தி.க.வினர்! கேள்வி எழுப்பும் தமிழர் கட்சி!

இது போன்று ஆயிரக்கணக்கான கேள்விகளை உங்களிடம் முன் வைக்க முடியும். முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.! - என்று முப்பது கேள்விகளை ராம.ரவிக்குமார் திராவிடர் கழகத்தின் முன் நிறுத்தியுள்ளார்.

ravikumar kalipoongundran

அன்னை மீனாட்சி திருக்கல்யாணத்தை கொச்சைப்படுத்தி இந்து தெய்வங்களை கல்முதலாளிகள் என்று முகநூலில் பதிவிட்ட திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலிபூங்குன்றன் மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில்….

திராவிடர் கழக பொதுச்செயலாளர் திரு கலிபூங்குன்றன் அவர்கள்
03.05 2020 அன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் https://m.facebook.com/story.php?story_fbid=1621247784704653&id=100004583411148 “கும்பி அழுகிறது” திருக்கல்யாணம் கேட்கிறதா? என்று ஒரு கட்டுரை பதிவிட்டு இருக்கிறார்.

மதுரை அன்னை மீனாட்சி திருக் கல்யாணத்தை அவமதிப்பது போலவும் இந்து கோவில் தெய்வங்களை கல்முதலாளிகள் என்றும் ஆறுகால பூசை முறைகளை பார்ப்பனர்கள் சதிச் செயல் என்றும், சாமிக்கு படைக்கூடிய படையல்கள்
எல்லாம் யார் வயிற்றை அறுத்து வைத்துக் கட்டப்படுகிறது.?

மக்களுக்குப் பயன்படாத கோவில் சொத்துக்கள் எதற்கு? இந்து சமய அறநிலையத்துறை 10 கோடி பணம் கொடுத்தால் குய்யோ முறையோ என்று இந்துத்துவ சக்திகள் ஓலம்-போடுவது எதைக்காட்டுகிறது? கோயிலும் கோவில் திருவிழாக்களும் அன்றாடம் நடக்கும் பூசைகளும் உற்பத்தி நாசம். கோயில் சொத்துக்களை எடுத்தால் எந்த “கல் முதலாளிகள்” கேள்வி கேட்கப் போகிறார்கள்?என்பன போன்ற பல கேள்விகளை முன்வைக்கிறார்.

இது இந்து மத உணர்வாளர்களின் நம்பிக்கையாளர்களின் பக்தி நம்பிக்கைகளை கொச்சைப் படுத்துவதாகவும்,பிற மதநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்கத் துணிச்சல் இல்லாத கோழைத்தனத்தையே காட்டுகிறது.
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

தமிழக அரசு திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி பூங்குன்றன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து மீனாட்சி அம்மன் திருக்கோயில் நிர்வாகம் புகார் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது மீனாட்சி பக்தர்கள் இந்துமத உணர்வாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்… என்று கோரியுள்ளார்.

madurai meenakshi thirukkalyanam

மேலும், திராவிடர் கழகத்திற்கு சில கேள்விகள்! – என்று அவர் எழுப்பியிருக்கும் சில கேள்விகள்…

 1. கொரோனா நோய் தொற்று காரணமாக உலகெங்கும் 82 கோடி மக்கள் இரவு உணவு இன்றி வாடி வருவதாக ஐநா சபை அறிவிக்கிறது. எதிர்காலம் இருண்ட சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் “சமாதி முதலாளி”யான ஈவேரா சொத்துக்கள் திராவிடர் கழக அறக்கட்டளை உடமைகள், போன்றவற்றில் பல்லாயிரக்கணக்கான கோடி பணம் குறட்டை விட்டு தூங்குவது ஏன்?
 2. பொருளாதார வீழ்ச்சி என்று புலம்பிக் கொண்டு இருப்பதால் என்ன பயன்? இவர் அறக்கட்டளை சொத்துக்களை மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தினால் என்ன?
 1. இந்துக் கோவில் தெய்வங்கள் “கல் விக்கிரகங்கள்” என்று கேள்வி கேட்கும் நீங்கள் ஏசுநாதர் சிலுவையில் அடித்தது குறித்தோ, சுவற்றைப்
  பார்த்து வணங்குபவர்கள் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்?
 2. இந்து திருக்கோயில்களை வைத்து பூ கட்டுபவர்கள் சமையல்காரர்கள், என பல்வேறு பிரிவினர் பொருளாதார ரீதியில் வளம் பெறுவதற்கு இந்து திருக்கோயில் பூசைகள் திருவிழாக்கள் பயன்படுகிறது. ஈவேரா சமாதி சொத்துக்கள் வீரமணி கும்பலை தவிர்த்து வேறு யாருக்கு பயன்படுகிறது?
 3. சூரிய கிரகண நேரத்தில் உணவு உண்டால் ஒன்றும் செய்யாது என்று “சாப்பிட்டு விழிப்புணர்வு போராட்டம்” நடத்திய நீங்கள் “கொரோனா” நோய் ஒன்றும் செய்யாது என்று உங்கள் “உள்ளம் கவர்ந்த வர்களை” கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்தலாமே!
 4. சித்திரை கள்ளழகர் திருவிழா குறித்தும், அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் குறித்தும் கேள்வி எழுப்பும் நீங்கள் வருட வருடம் ஈவேரா வுக்கு பிறந்த நாளும், நினைவு நாளும் கொண்டாடுகிறார்களே ! ஈவெரா ஒருமுறைதான் பிறந்து இறந்தார் வருடம் வருடம் பிறந்தநாள் நினைவு நாள் விழா தேவையா?
 1. செத்துப்போன ஈவேரா ரோஜாப்பூ மாலை மலர்வளையம் கேட்டாரா?
  உங்கள் பகுத்தறிவு சரி என்றால் கருணாநிதி இறந்த போதும் தயிர்வடை வைத்ததும், முரசொலி வைத்து புதைத்தது, கவிஞர் வைரமுத்து பால்ஊற்றியது; எ.வா. வேலு பஜனை கச்சேரி நடத்தியது; நாதஸ்வர இசைக் கலைஞர்கள் பாட்டிசைத்து அஞ்சலி செலுத்திய போது கருணாநிதிக்கு கேட்கிறதா? என்று கேள்வி கேட்கும் துணிச்சல் உண்டா?
 2. வருடம் வருடம் மீனாட்சிக்கு கல்யாணம் குழந்தை உண்டா? என்று கேள்வி எழுப்பும் நீங்கள் ஈவேரா மணியம்மைக்கு “பிள்ளை இல்லாத” காரணத்தை சொல்வீர்களா? இவர் எப்படி தந்தை ஆவார். கல்யாணத்தில் “கழகம்” பிறந்த கதையை கூறலாமா?
 3. தெருவில் வைத்த சிமெண்ட் பொம்மையான ஈவேரா சிலையை தலைவனாக ஏற்றுக் கொண்ட நீங்கள்! யாராவது உடைத்துவிட்டார்கள்,செருப்பு மாலை அணிவித்தால் மனம் கொதித்து போராட்டம் நடத்துவதுஏன்?
  எந்த வகையில் பகுத்தறிவு? அந்த சம்பவங்களை கடந்து செல்லாமல் கலவரம் செய்வது செய்தது ஏன்?
 4. ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை வைத்த நீங்கள் ஏதாவது மசூதி சர்ச்சுகள் முன்பாக சிலைவைத்த வரலாறு உண்டா ? அல்லா இல்லை இயேசு இல்லை என்றுசொல்லும் தைரியம் உண்டா?
 5. பக்தி என்பது ஃபேஷனாகி விட்டது; வியாபாரமாகி விட்டது என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்கூறவில்லையா என்று கேட்கும் நீங்கள்! சங்கராச்சாரியார் கூறிய இந்து மத பெருமைகள் மதமாற்றம் கூடாது என்பது போன்ற பல விஷயங்களை கேட்க மறுப்பது ஏன்?விமர்சிப்பது ஏன்?
 6. எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களை குறை சொல்லும் நீங்கள் “கருவறைக்குள் நுழைய அனுமதி உண்டா ?என்று கேள்வி கேட்கும் நீங்கள்; பார்ப்பனர்களை போல நன்றாக படிக்க வேண்டும். அறிவு வளர்ச்சி பெற வேண்டும் என்றுஎன்றாவது பேசியது உண்டா? நடந்ததுண்டா ? எனக்கு “முட்டாள்கள் தான் தேவை” என்று ஈவேரா சொன்ன காரணம் இதுதானோ!
 1. தமிழ்நாட்டில் பசியால் பலர் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
  இந்தசூழ்நிலையில் அரசாங்கம் இஸ்லாமியர்களின் நோன்பு கஞ்சிக்கு 4,550 மெட்ரிக் டன் அரிசிகொடுப்பது கூடாது. அதை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்களா? எதிர்ப்புதெரிவித்தீர்களா?
 2. சூரிய கிரகணத்தின்போது “சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது” என்று சாப்பிட்ட நீங்கள்! நோன்பு காலத்தில் பகலில் உணவு உண்டால் என்ன? கஞ்சி குடித்தால் என்ன ?என்று கேள்வி கேட்க, விழா எடுக்க தைரியம்
  உண்டா?
 3. இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் 10 கோடி பணத்தை அரசுக்கு அளித்ததை பொறுத்துக் கொள்ள முடியாத “இந்துத்துவா சக்திகள்” ஓலம் போடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பும்நீங்கள், மசூதி சர்ச் நிர்வாகத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும். “முஸ்லிம் அறநிலையத்துறை” “கிறிஸ்தவ அறநிலையத்துறை” என்று உருவாக்க வேண்டும். மசூதி சர்ச் நிர்வாகத்திலிருந்து 10 கோடி ரூபாய் பணம் எடுக்க வேண்டும், அரசுக்கு கொடுக்க வேண்டும். என்று அறிக்கை விடாமல் அமைதி காப்பது ஏன்?
  போராட்டம் நடத்த துணிச்சல் உண்டா?
 4. கோயிலும் கோயில் தொடர்பான நிகழ்ச்சிகளும் சடங்குகளும் அன்றாட பூசனைகள் அத்தனையும் “உற்பத்தி நாசம்” என்று பொருளாதாரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்களே! உங்கள் கட்சி நடத்தும் மாநாடு மற்றும் திமுகவினர் நடத்தும் மாநாடு போன்றவற்றால் பொருளாதார நாசம் உருவாகாதா? தினசரி கருணாநிதி சமாதிக்கு மலர் அலங்காரம் செய்யும் பணச் செலவை ஏழைகளுக்கு உதவ சொல்லி ஒரு அறிக்கை விடலாமே மானமிகு?????
 5. அத்திவரதர் குறித்து அவதூறு பேசிய கி வீரமணிசுபவீ போன்றவர்கள் அத்தி வரதர் “தரிசனம்” செய்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி உட்பட பல முன்னணி திமுகதலைவர்களிடமும் கேள்வி கேட்கும்தைரியம் உண்டா?
 6. பசியால் மக்கள் வாடிக்கொண்டு இருக்கும்போது திருச்சியில் 120 அடியில் ஈவேரா சிலை திறக்க செய்து வரும் கோடிக்கணக்கான பணம் விரயச் செலவு தானே! அதை மக்களுக்கு பயன்படுத்தலாமே! பதில் சொல்வீர்களா?
 7. கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் கையில் காசு பணம் இல்லை. அதனால் ஈவெரா மணியம்மை அறக்கட்டளை மூலமாக நடக்கும் கல்வி நிறுவனங்களில்மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு கல்வி கட்டணம் கட்ட வேண்டாம் என்றுஅறிவிக்க தயாரா?
 8. கோடம்பாக்கத்து துணை நடிகைகளை அழைத்து வந்து “தாலியறுப்பு நாடகவிழா” நடத்திய திராவிடர் கழக கும்பலே! உங்கள் மனைவிமார்களின் கழுத்தில் இருக்கும் தாலி இருக்கிறதா? அறுபட்டு இருக்கிறதா?
  இந்த உபதேசத்தை திமுக காரர்களுக்கு சொல்வீர்களா? அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
 9. பகுத்தறிவாளர்கள் என்றால் “கருப்பு சட்டை” தான் போட வேண்டும். என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? இது என்ன வகை பகுத்தறிவு?
 10. மதுக்கடைகள்திறக்ககூடாது என்று அறிக்கை விடும் நீங்கள்; மது உற்பத்தி ஆலைகளை மூட சொல்லி “கருப்புக்கொடி” ஏந்தி திமுக கூட்டணி கட்சியினரோடு போராட்டம் நடத்த தயாரா?
 11. நெற்றியில் விபூதி வைத்தால் பொட்டு வைத்தால் கிண்டல் செய்யும் நீங்கள் தலையில் குல்லா போட்டால் கழுத்தில் சிலுவை அணிந்தால் கேள்வி கேட்கும் தைரியம் உண்டா?
 12. குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் அவன் நடக்கிறான் என்றால் எப்படி? என்று எஸ்ரா சற்குணம் பாதிரியாரிடம் கேள்வி கேட்க தைரியம் உண்டா?
 13. கன்னி எப்படி கருத்தரித்தாள்,இயேசுபிரான் எப்படி அவதரித்தார் என்று கேள்வி கேட்க தைரியம் உண்டா?
 14. இந்துக் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று அறிக்கைவிட்டு போராட்டம் நடத்தும் மசூதி சர்ச்சுகளிலும் இதே வாதத்தை முன் வைத்துநீங்கள் போராடாதது ஏன் ?
 15. கொரோனா மக்கள் நிவாரண பணியில் திருவாவடுதுறை தருமபுரம் திருமடம் மற்றும் பல திருமடங்கள் ஆன்மீக அமைப்புகள் மக்களுக்கு அன்றாடம் உணவு கொடுத்து உதவி வருகிறது.
 16. இந்த” ஓசி சோறு “கும்பல் என்ன உதவி செய்திருக்கிறது பட்டியலிட முடியுமா?
 17. பிராமணர்களைப் பார்ப்பனர்கள் என்றுச் சொல்லும் நீங்கள் பிற சாதியினர் பெயர் சொல்லி பேச தைரியம் உண்டா?
 18. சமூக நீதி சமத்துவம் என்று பேசும் நீங்கள் பட்டியலின நபரை திராவிடர் கழகத் தலைவராக நியமிக்க தயாரா?

இது போன்று ஆயிரக்கணக்கான கேள்விகளை உங்களிடம் முன் வைக்க முடியும். முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்.! – என்று முப்பது கேள்விகளை ராம.ரவிக்குமார் திராவிடர் கழகத்தின் முன் நிறுத்தியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =