October 22, 2021, 2:19 am
More

  ARTICLE - SECTIONS

  காப்பீட்டு பணத்துக்காக கணவரை போட்டுத் தள்ளிய மனைவி!

  லாக்டௌன் காரணமாக கிராமத்திலேயே இருந்த வீரன்னா குடித்து மீதி இருந்த காலி பாட்டில்களை சேகரித்து பக்கத்து ஊரில் விற்று வந்தார்.

  insurance money
  insurance money

  வாரங்கலில் காப்பீட்டு பணத்துக்காக கைப்பிடித்த கணவனை காட்டுக்கு அனுப்பினாள் ஒரு மனைவி.

  பக்கா ப்ளான் போட்டு கொலை செய்து விட்டு தனக்கு எதுவும் தெரியாது என்று தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள் என்று போலீஸ் ஸ்டேஷன் படியேறிய ஒரு கொடூரமான பெண்ணின் திட்டங்களை வெளிப்படுத்தினர் பர்வதகிரி போலீசார்.

  முக்கிய குற்றவாளியோடு கூட உதவி செய்த கணவரின் தங்கை தங்கை கணவனைக் கூட கைது செய்து திங்கள்கிழமை ஈஸ்ட் ஜோன் இன்சார்ஜ் டிசிபி கொல்லி வெங்கடலட்சுமி வரங்கல் கமிஷனரேட் அலுவலகத்தில் விவரங்கள் தெரிவித்தார்.

  வரங்கல் ரூரல் மாவட்டம் பர்வதகிரி மண்டலம் ஹட்யதாண்டா வைச் சேர்ந்த பாதாவத்வீரன்னா, யாக்கமா தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள். அவர்கள் வாழ்க்கைக்காக ஒரு பிரைவேட் பள்ளியில் டோபி வேலை செய்து வந்தார்கள்.

  அப்போது வீரன்னா குடிப்பழக்கத்துக்கு ஆளாகி தினமும் மனைவியை இம்சை செய்தார். இதனால் பொறுமை இழந்த யாக்கமா எப்படியாவது தன் கணவனை கொன்று விட வேண்டுமென்று தீர்மானித்தாள். கணவனை கொன்ற பின் வரும் காப்பீட்டு தொகையோடு நல்லபடியாக வாழ்ந்து விடலாம் என்ற ஆலோசனையோடு கணவரின் பெயர் மீது உள்ளூர் கிராமீண வங்கியில் 20 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்வித்தாள்.

  லாக்டௌன் காரணமாக கிராமத்திலேயே இருந்த வீரன்னா குடித்து மீதி இருந்த காலி பாட்டில்களை சேகரித்து பக்கத்து ஊரில் விற்று வந்தார்.

  இந்த மாதம் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெற்று மதுபாட்டில்களை விற்பதற்காக நெக்கொண்டா என்ற ஊருக்குச் சென்றார் . இதனால் யாக்கம்மா, நாத்தனார் மற்றும் அவள் கணவர் பிச்சுவுக்கு செய்தி தெரிவித்தாள்.

  இதனால் பிச்சு நெக்கொணடா கிராமத்துக்குச் சென்று வீரன்னாவை சந்தித்து அவருக்கு நிறைய குடிக்க வைத்தார். பின் மூன்று சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பி அழைத்து வந்தார். அதே சமயத்தில் அவர் குடிபோதையில் இருந்த போது வீரன்னாவை இரவு பதினோரு மணிக்கு வீரன்னாவுக்கு சொந்தமான வயலில் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டார்கள். உயிரோடு இருக்கிறாரோ என்று சந்தேகத்தோடு ஒரு பாறாங்கல்லை தூக்கி தலையில் மோதி அருகில் இருந்த கால்வாயில் எறிந்துவிட்டு அவரவர் திரும்பிச் சென்றனர்.

  பின்னர் தன் கணவரை காணவில்லை என்று யாக்கம்மா தன் நாத்தனாரோடு சேர்ந்து பர்வதகிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தாள்.

  சிபி ரவீந்தர் உத்தரவுபடி களத்தில் இறங்கிய பர்வதகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கிஷ்ண் சிசி கேமராவின் ஆதாரத்தோடு குற்றவாளியை கண்டறிந்தார்கள். அதன்படி திங்களன்று இறந்தவரின் வீட்டிற்கு வந்த மூன்றுபேரை கைது செய்தார்கள். குற்றவாளிகளிடம் இருந்து மூன்று சக்கர வாகனத்தோடு கூட நைலான் கயிறு பேங்க் பாஸ்புக் இன்ஷூரன்ஸ் பத்திரம் 2 செல்போன்களை கைப்பற்றினார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-