ஏப்ரல் 19, 2021, 1:46 காலை திங்கட்கிழமை
More

  இந்த ரண களத்திலயும் ஒரு கிளுகிளு… திரும்பிப் பார்க்க வைத்த திருமண அழைப்பிதழ்!

  இந்த அழைப்பிதழ் கேலியாகவும், கோபமாகவும், வருத்தமாகவும் ஏதோ ஒரு வகையில் வைரலாக உள்ளது.

  marriage-invitation-in-virudhunagar1
  marriage-invitation-in-virudhunagar1

  ரணகளத்துலயும் ஒரு குதூகலம் போல… விருதுநகர் மாவட்டத்தில் வைரலாகும் கலக்கல் கல்யாண பத்திரிக்கை இப்போது வைரலாகி வருகிறது.

  சிலர் திருமணங்களை வித்தியாசமாக செய்வார்கள். சிலர் ஆடம்பரமாக செய்வார்கள். சிலர் கடன் வாங்கி செய்வார்கள். சிலர் கடனே என செய்வார்கள். இந்த வைரஸ் தொற்று பிரச்சினையால் கடந்த ஐந்து மாதங்களாக, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போட்டது அரசு.

  இப்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கியதால் திருமண விழாக்கள் பழைய உற்சாகத்துடன் நடந்து வருகிறது. அதிலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என ஒருவர் அச்சடித்து வழங்கிய திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

  விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஆகாசம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது.

  இதற்கு இரு வீட்டார்கள் சார்பில், அனைவரையும் கவரும் படியான வாசகங்களுடன், திருமண அழைப்பிதழ் அச்சடித்து வழங்கியுள்ளனர்.

  marriage-invitation-in-virudhunagar
  marriage-invitation-in-virudhunagar

  நீங்க பஸ் ஓடலன்னு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லைன்னாலும் பக்கத்து வீட்ல பைக் கடன் வாங்கிட்டாவது வந்துருங்க, குடி குடியைக் கெடுக்கும் எனவே கொஞ்சமா குடிங்கன்னு அட்வைஸ் செய்து, அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

  இந்த அழைப்பிதழ் கேலியாகவும், கோபமாகவும், வருத்தமாகவும் ஏதோ ஒரு வகையில் வைரலாக உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »