spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வாசல் படி தாண்டாமல்... ஏகாந்தமாய் ஏழுமலையான்! திருப்பதி பிரமோத்ஸவம்!

வாசல் படி தாண்டாமல்… ஏகாந்தமாய் ஏழுமலையான்! திருப்பதி பிரமோத்ஸவம்!

- Advertisement -
tirumala-tirupathi-perumal1
tirumala tirupathi perumal1
  • வாசல் படி தாண்டாத ஏழுமலை சுவாமி.
  • ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் ஏகாந்தமாகவே திருமலையில் நடக்கப் போகிறது.

வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. ஒன்பது நாட்களும் ஆலயத்திற்கு உள்ளேயே நிகழ்ச்சிகள். கல்யாண மண்டபத்தில் கல்யாண சேவைகள். சுவர்ணரத, மகா ரத உற்சவங்கள் ரத்து.

திருமலை ஸ்ரீவாரி பிரமோற்சவம் என்ற உடனேயே மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள், கலை நிகழ்ச்சிகள், கோலாகலம், கொண்டாட்டம், நெருக்கித் தள்ளும் பக்தர்களின் கூட்டம், மாடவீதிகளில் கண்ணுக்கு விருந்தாக கோவிந்தனின் ஊர்வலம்… இவைதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு கரோனா இவை அனைத்திற்கும் மங்களம் பாடி விட்டது.

திருமலை வரலாற்றில் என்றுமே இல்லாத விதமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக நடத்த வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. அதனால் வெங்கடேஸ்வர சுவாமி வாசறாபடி தாண்டாமலேயே பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கப் போகிறார்.

திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் இந்த ஆண்டு ஆடம்பரம் இல்லாமல் நடக்கப் போகின்றது. மாடவீதிகளில் மிக வைபவமாக நடக்கும் தங்க ரத, மகாரத உற்சவங்கள் கூட ரத்து ஆகிவிட்டன.

பிரம்மாண்ட நாயகனான ஸ்ரீநிவாசனுடைய திருமலை புண்ணிய க்ஷேத்திரத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உள்ளது. பல அரசர்கள் தம் வெற்றியை கொண்டாடும் விதமாக சுவாமிக்கு பல உற்சவங்களை நடத்தியுள்ளார்கள்.

திருமலையின் பரிபாலனை பொறுப்பை 1843 வரை பல மகாராஜாக்களும், ஆற்காட்டு நவாப்புகளும், ஈஸ்ட் இந்திய கம்பனி பிரதிநிதிகளும், பிரிட்டிஷ் அதிகாரிகளும் நடத்தியுள்ளார்கள். அதன்பிறகு ஹாத்தீ ராம் 1933 வரை இந்த க்ஷேத்திரத்தின் பரிபாலனையை ஏற்றார். சுவாமிக்கு அப்போது மாதம் ஒரு முறை பிரம்மோற்சவம் நடந்த சந்தர்ப்பங்கள் உள்ளதாக தெரிகிறது.

அதன்பின் சில பிரச்சனைகள் காரணமாக பிரம்மோற்சவங்கள் ஆண்டுக்கு ஒரு முறையும் அதிகமாதம் வரும் போது இரண்டு முறையும் நடத்தினார்கள். எத்தனை இயற்கை விபரீதங்கள் நேரிபட்டாலும் இவற்றை ரத்து செய்ததோ ஏகாந்தமாக நடத்தியதோ திருமலை வரலாற்றிலேயே இல்லை. 1998ம் ஆண்டு பிரம்மோற்சவங்களின் இறுதி நாள் இரவு அஸ்வ வாகன சேவையை ஆரம்பிப்பதற்கு முன்பு புயற் காற்றோடு பெருமழை கொட்டியதால் திருமலை நீரால் நிரம்பி ஆறு போல் காட்சியளித்தது. அதனால் வாகன சேவை ரத்து செய்ய வேண்டும் என்று அர்ச்சகர்களும் ஆகம பண்டிதர்களும் அதிகாரிகளும் தீர்மானம் எடுத்தார்கள்.

tirumala-tirupathi-perumal
tirumala tirupathi perumal

ஆனால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மழை நின்றுவிட்டதால் நீரெல்லாம் பள்ளங்களை நோக்கி ஓடி விட்டதால் வாகன சேவை நடத்தியதாக மூத்த அர்ச்சகர்கள் தெரிவித்தார்கள்.

முன்பு போர்களும் படையெடுப்புகளும் நடந்த நாட்களில் கூட ஸ்ரீவாரி ஊர்வலங்களை நிறுத்தியதாக தமக்குத் தெரிந்தவரை எங்குமே இல்லை என்று அர்ச்சகர்கள் விவரித்தார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் ஸ்ரீநிவாசன் தன் இரு தேவிகளோடு சேர்ந்து மாடவீதிகளில் ஊர்வலம் வந்து பக்த கோடிகளை அருள்பாலித்து வந்தார்.

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோத்ஸவத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி பங்கு பெறப் போகிறார். இந்த மாதம் 23 ஆம் தேதி மாலை கருட சேவையை முன்னிட்டு வெங்கடேஸ்வர சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதலமைச்சர் சமர்ப்பிப்பார்.

பிரமோத்ஸவத்திற்கு வரப் போகும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோடு சேர்ந்து முதல்வர் ஜெகன் 24ஆம் தேதி ஶ்ரீவாரி தரிசனம் செய்து கொள்வார். தரிசனத்திற்கு பிறகு நாதநீராஜனம் மண்டபத்தில் நடத்தப்படும் சுந்தரகாண்ட பாராயணத்தில் அவர்கள் இருவரும் பங்கு பெறுவார்கள். அதன்பிறகு கர்நாடகா அதிதி கிருஹத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் இரு முதல்வர்களும் பங்கு பெறுவார்கள். அங்கிருந்து பத்மாவதி அதிதி கிருஹத்தை அடைந்து பலகாரம் சாப்பிட்ட பின் ஜகன் தாடேபல்லி திரும்பிச் செல்வார்.

கரோனா தாக்குதலால் பக்தர்களுக்கும் அதிகாரி களுக்கும் வைரஸ் பரவாமல் பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக நடத்த வேண்டும் என்றே டிடிடி போர்டு தீர்மானித்துள்ளது. கோவிட் நிபந்தனைகளின்படி நடத்துவதற்கு பிரத்தியேக திட்டம் வகுத்து உள்ளது. 19 லிருந்து 27 வரை ஆண்டு பிரம்மோற்சவம் ஆலயத்திலேயே கல்யாண பண்டபம், ரங்கநாயக மண்டபங்களுக்கு உள்ளேயே நடத்த உள்ளார்கள்.

முதல் நாள் சேஷ வாகனம் முதல் இறுதி நாள் அஸ்வ வாஹனம் வரை அனைத்து சேவைகளும் கல்யாண மண்டபத்திலேயே நடப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe