Home கல்வி மதுரை பல்கலை., ஆன்லைன் தேர்வில் காபி அடிப்பதை தடுக்க புதிய நுட்பம்!

மதுரை பல்கலை., ஆன்லைன் தேர்வில் காபி அடிப்பதை தடுக்க புதிய நுட்பம்!

mk-university-online-exam1
mk university online exam1

மதுரை காமராசர் பல்கலை கழக கணினி அறிவியல் துறை சார்பில் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தலைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்!

ஆன் லைன் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி அடையாள அட்டை வசதிகளுடன் உடனடி தேர்வு முடிவுகள் மதுரை மாவட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை சார்பில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்க புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதவும் அதற்கு உடனடி முடிவுகளும் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

mk university online exam2

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கிருஷ்ணன், பேராசிரியர் பாரி பாமேஸ்வரன் முன்னிலையில் கணித அறிவியல் துறை தலைவர் பொன்ராஜ் தலைமையில் கணித அறிவியல் துறை சார்பில் கியூ ஆர் கோட் எனப்படும் தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதில் நான்கு வகையான பதிலளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

mk university online exam3

குறிப்பாக ஒரு அட்டையில் ஏபிசிடி என குறிக்கப்பட்டிருக்கும் அதை மாணவர்கள் அந்த தேர்வுக்குரிய வினாவைத் தேர்வு செய்து செல்போன் மூலம் உடனடியாக தங்கள் கைகள் தெரியுமோ அல்லது முகங்கள் தெரியும் அளவிற்கு உடனடியாக பதிவு செய்ய முடியும் அவர்கள் மூலமாக பதிவு செய்ய முடியும் இதனை தொடர்ந்து அது ஆன்லைனில் வைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவர்கள் பதில்கள் பதிவு செய்யப்பட்டு தேர்வு முடிவு முடிந்ததும் உடனடியாக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெளிவரும் வகையில் புதிய தொழில்நுட்பம் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது

mk university online exam5

இதனால் மாணவர்கள் காப்பி அடிப்பதாக பக்கத்தில் உள்ள அவருடன் உரையாடுவது கேள்வி கேட்பது பதில் சொல்வது போன்றவை தவிர்க்கப்படுவதுடன் உடனுக்குடன் பதில் சொல்வதும் சரியான பதில் சொல்லக் கூடிய மார்க்கம் தவறான பதிவு செய்வதற்கு உரிய மதிப்பெண் எனவும் உடனடியாக பதிவு செய்யப்பட்டு தேர்வு முடிந்ததும் உடனடியாக தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதனால் மாணவர்களுக்கு காப்பி அடித்தல் மற்றும் குழுவாக சேர்ந்து தேர்வு எழுதுதல் போன்றவை தவிர்க்க இந்த புதிய ஆன்லைன் கல்வித்திட்டம் பயனுள்ளதாக அமையும் என பேராசிரியர் பொன்ராஜ் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் குறிப்பிடுகையில் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 2000 மாணவர்கள் வரை தேர்வு எழுதும் வகையில் வடிவ அமைக்கப்பட்டுள்ளது இதற்காக அவர்கள் ஆன்லைனில் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் இணைப்பு பெற்றால் உடனடியாக தேர்வு எழுதவும் உடனடியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்

இது காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய முறை இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அடையும் வகையில் இந்தத் திட்டம் அமையும் ஒரு சில சிறிய குறைபாடுகள் உள்ளன அவற்றை சரிசெய்து எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் அனைத்து கல்வி குழுமங்களும் இதன் மூலம் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டார்

mk university online exam6

தேர்வுகளில் காப்பி அடிப்பதிலும் ஆள்மாறாட்டம் செய்வதிலும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மோசடிகள் நடைபெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில் அதனைத் தடுப்பதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியர் மேசக் பொன்ராஜ் ‘மின்னணு சங்கிலி’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.

‘மின்னணு சங்கிலி’ முறையில் தேர்வுகள் நடத்தப்படும்போது தேர்வர்கள் யாரிடமும் பேச முடியாது. மீறி பேசினால் இணையதளம் மூலம் கட்டுப்பாட்டு கணினிக்குத் தெரிந்துவிடும். இந்தத் தேர்வு முறையில் தேர்வர்கள் வலது கையில் செல்லிடப்பேசியை வைத்திருக்க வேண்டும். இடது கையில் எஸ்.எஸ்.சி. ஸ்மார்ட் அண்ட் செக்யூர் கார்டு என்ற மின்னணு கருவியை வைத்திருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும்போது ஒவ்வொரு கேள்வியும் ஒரு நிமிடம் மட்டுமே செல்லிடப்பேசியில் காண்பிக்கப்படும். தேர்வின்போது தேர்வர்களின் அருகில் உள்ள நண்பர்கள், பெற்றோர் அருகில் சென்று வினாவை படிப்பது அல்லது ஏதாவது உதவிகள் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் கண்காணிப்பு கேமரா படம் எடுத்து தேர்வு கட்டுப்பாட்டு கணினிக்கு அனுப்பிவிடும்.

இரண்டு கைகளுக்கும் இடையே சுமார் ஒரு அங்குலத்திற்கு குறைவான தூரமே இருப்பதால் இந்தத் தொழில்நுட்பம் ‘மின்னணு சங்கிலி’ என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் புத்தகங்களைப் புரட்டுவதற்கு வாய்ப்பில்லை.

ஒவ்வொரு வினைக்கும் அவரது எஸ்.எஸ்.சி. உபகரணம் மூலம் கைரேகையையும் காணொலி மூலமாகப் பதிவுசெய்யப்படும். இதனால் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற செயல்கள் ஒழிக்கப்படும். கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை ஒப்பிடுகையில், செல்லிடப்பேசி, எஸ்.எஸ்.சி. முறையில் நடத்தப்படும் தேர்வுகள் செலவு மிகக்குறைவு.

இணைய பயன்பாட்டின்போது இணைப்பு கிடைக்காவிட்டால் தேர்வர்கள் செல்லிடப்பேசியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இணைப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு வைத்து தேர்வில் பங்கேற்கலாம்.

இது குறித்து பேராசிரியர் மேசக் பொன்ராஜ் கூறுகையில், “காமராசர் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள்களுக்கு ரூபாய் 50 லட்சத்தைச் செலவழிக்கிறது.

‘மின்னணு சங்கிலி’ தொழில்நுட்பம் மூலமாக இந்தச் செலவினங்களைத் தவிர்க்க முடியும். மேலும் தாள்களுக்காக மரங்களை வெட்டுவதிலிருந்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணன், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

மேலும் இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து காமராசர் பல்கலைக்கழகம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. பயிற்சியில் பங்குபெற விரும்பும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்” என்று கூறினார்.

துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் 32 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் அதில் 25 மாணவர்கள் தேர்வு எழுதினர் மீதம் உள்ள ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் சிக்னல் கிடைக்காததால் தேர்வில் பங்கு பெற இயலவில்லை இதில் முதலிடம் பிடித்த 3 மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version