Home அடடே... அப்படியா? அர்னாப் கோஸ்வாமி கைது: இருண்ட ‘கை’களின் பின்னணி!

அர்னாப் கோஸ்வாமி கைது: இருண்ட ‘கை’களின் பின்னணி!

arnab-arrest
arnab arrest

இன்று Republic Tvன் Editor in Chief அர்னப் கோஸ்வாமி, மும்பையில் உள்ள அவரது பாரேல் இல்லத்தில் இருந்து இன்று காலை சுமார் 8.00 மணியளவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை IPC section 306ன் கீழ் (abetment of suicide) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2018ம் ஆண்டு மும்பை அலிபாக் என்ற இடத்தில் வசித்து வந்த ஒரு ஆர்கிடெக்ட் மற்றும் அவரது தாயார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவருக்கு ரிபப்ளிக் தொலைக்காட்சி அலுவலகத்தில் பணி புரிந்ததற்கான தொகை முழுவதுமாக வழங்கப்படவில்லை என்பதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அவர்களின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கும் மூடப்பட்டது.

தற்போது இந்த வழக்கு தான் தூசி கட்டப்பட்டு, இதன் அடிப்படையில் அர்னப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு உள்ளார். இது மகாராஷ்டிர அரசின் காழ்ப்புணர்ச்சியையே பறைசாற்றுகிறது. மேலும் மும்பை போலீஸ் கமிஷனர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு பத்திரிகையாளரை பழி தீர்த்து கொண்டு இருக்கிறார் என்று தான் நம்பத் தோன்றுகிறது.

இன்று அதிகாலை அர்னப் கோஸ்வாமியின் வீட்டை சுமார் 7.00 மணியளவில், ஆயுதங்கள் ஏந்திய பத்திற்கும் மேற்பட்ட போலீசார் முற்றுகையிட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் கதவை திறக்க சற்று தாமதம் செய்யவே, உள்ளே நுழைந்த போலீசார் அவரை தாக்கி, தலைமுடியை பற்றி இழுத்து சென்று போலீஸ் வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றியதாக தெரிகிறது.

https://twitter.com/search?q=%23IndiaStandsWithArnab&src=trend_click&vertical=trends

அவரை கைது செய்ய கோர்ட் ஆர்டரோ, சம்மன்களோ முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பத்திரிகையாளரை அதிலும் குறிப்பாக அதிக மக்கள் பார்க்கும் ஒரு முக்கியமான தொலைக்காட்சி நிறுவனத்தின் Editor in Chiefஆக இருக்கும் ஒரு மனிதரை இப்படி ஒரு தீவிரவாதியை போல கைது செய்து அடித்து இழுத்து செல்லவேண்டிய அவசியம் தான் என்ன????

ALSO READ: ரிபப்ளிக் டிவி அர்னாப்  கோஸ்வாமி கைது – அடித்து இழுத்து சென்ற போலீசார்?

சில நாட்களுக்கு முன் இதே மும்பையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அவரது காதலி ரியா சக்ரபர்திக்கு இதே மும்பை காவல்துறை பாதுகாப்பு அளித்து அவரை ஒரு அதிமுக்கிய புள்ளியாகவே பாவித்து, அவருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் தாங்களே பதிலளித்து அவரது செய்தி தொடர்பாளர்களை போன்று செயல்பாட்டை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மும்பை போலீஸார் யாரை திருப்தி படுத்த இது போன்ற எதேச்சாதிகார போக்கை கையில் எடுத்துள்ளார்கள்????

https://twitter.com/iDigitalVicky/status/1323921848799670272

அர்னப் கோஸ்வாமி தனது பத்திரிகை துறை பயணத்தின் மூலம் பல எதிரிகளை சம்பாதித்திருக்க கூடும். அவரது style of Journalism என்பதை பிடிக்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆயினும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் செய்த பல ஊழல்கள், காமென்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடங்களில் ஊழல், கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு என்று சொல்லி ஆதர்ஷ் அப்பார்ட்மெண்ட் என்ற பெயரில் கட்டிய கட்டிடத்தில் ஊழல், 2ஜி, நிலக்கரி ஊழல், Devos ISRO ஊழல் என்று பல ஊழல்களை வெளிக்கொணர்ந்தது இவரின் முயற்சியாலேயே.

இவர் மஹாராஷ்டிர அரசுக்கு, பால்கர் என்ற இடத்தில் 3 இந்து சாதுக்கள் கொல்லப்பட்ட வழக்கிலும், தற்போது சிபிஐ விசாரணை செய்துவரும் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கிலும் மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

ALSO READ: அர்ணாப் கைது: தேசிய சிந்தனைக் கழகம் கண்டனம்!

இவரது முயற்சியால் தான் இவ்விரு வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவரை பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி மஹாராஷ்டிர அரசு மற்றும் காவல்துறை காத்திருந்ததாகவே தெரிகிறது. தற்சமயம் அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவரை கைதுசெய்துள்ளனர்.

இதனை பாஜக தலைவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்களும் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். இது மற்றும் ஒரு எமர்ஜென்சி என்றே எதிர்க்கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் கருதுகின்றனர்.

https://twitter.com/mvmeet/status/1323968223356727296
  • வலைதேடி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version