ஏப்ரல் 22, 2021, 3:54 மணி வியாழக்கிழமை
More

  நயவஞ்சக திமுக.,! அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் ஆவேசம்!

  மக்கள் தொகை அடிப்படையில் எங்களை விட குறைவாக உள்ள இஸ்லாமியர்களுக்கு திமுக அளித்த அங்கிகாரம் கூட எங்களுக்கு அளிக்கவில்லை.

  christian conversion
  christian conversion

  நயவஞ்சக திமுக. அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பினர் ஆவேசம்

  சென்ற பாரளுமன்ற தேர்தலில் திமுகவினருக்காக அனைத்து திருச்சபைகளிலும் பிரச்சாரம் செய்த கிறிஸ்தவ பாதிரியார்கள் இம்முறை திமுகவை நம்பவில்லை. மேலும் இந்த முறை தேவலாயங்களில் திமுகவை ஆதரித்து பேச போவதும் இல்லை என முடிவெடுத்துள்ளோம்.

  அதனால் அனைத்து வகையான கிறிஸ்தவ பிரிவு கூட்டமைப்பினர்கள் திமுகவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள். அது இந்த தேர்தலில் எதிரொளிக்கும்.

  அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சிறுபான்மையினர் ஆதரவாளர்கள் என்று கூறிய திமுக இதுவரை எங்களுக்கு எவ்வித உதவியையும் செய்யவில்லை. தேர்தலில் கிறிஸ்தவ சமுதாயத்திற்க்கு சீட்டுகள் ஒதுக்கபடுபதில்லை. இதனால் எங்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திலோ, பாரளுமன்றத்திலோ இல்லையாதலால் எங்கள் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை.

  மாறாக இத்தனை காலம் எங்களை ஏமாற்றி எங்களை வெரும் ஓட்டு வங்கியாக மட்டுமே வைத்து எங்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

  மக்கள் தொகை அடிப்படையில் எங்களை விட குறைவாக உள்ள இஸ்லாமியர்களுக்கு திமுக அளித்த அங்கிகாரம் கூட எங்களுக்கு அளிக்கவில்லை.

  மேலும், ஸ்டாலின் மற்றும் கட்சியினர் தேர்தலில் பெரும்பான்மையினர் வோட்டுக்களை கவர
  வடஇந்தியர் பிரசாந்த் கிஷோர் பேச்சை கேட்டு தற்பொழுது செல்லுமிடமெல்லாம், தாங்கள் இந்துக்கள் என முழங்கி வருவதோடு கையில் வேல், நெற்றியில் விபூதி, குங்குமம் தரித்து எங்களை ஏளனம் செய்து வருகிறார்கள். பல மடாதிபதிகள், ஆதினங்களை சந்தித்து ஆதரவு கோருகின்றனர். அது உண்மையல்ல எங்களை ஏமாற்றியது போல இந்துக்களை ஏமாற்றி வருகிறார்கள். இனி தமிழக மக்கள் திமுகவை நம்பமாட்டார்கள்.

  இத்தனை காலம் திமுகவிற்க்காக குரல் கொடுத்த எங்கள் மூத்த பேராயர். எஸ்றா. சற்குணம் அவர்களையே தூக்கி எறிந்துவிட்டது. அவர் கண் படுத்த படுக்கையாகி இருக்கின்றார். அவரை ஸ்டாலின் கண்டுக்கொள்ளவே இல்லை. கிறிஸ்தவம் தழுவிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா மேலும் பல சினிமா புள்ளிகளை கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தினால் தங்கள் பக்கம் வரவிடாமல் ஸ்டாலின் செய்கின்றார்.

  இனியும் திமுகவை நம்பி பிரயோஜனம் இல்லை பேராயர் எஸ்றா அவர்களின் மகள் கதிரொளி வெளிப்படையாகவே அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து விட்டார். அதையும் அவர்களால் பொறுக்க முடியாமல் தினமும் திமுக ரவுடிகளால் பெண் எனக் கூட பாராமல் அவரை மிரட்டி வருகின்றனர். தூத்துகுடியில் கனிமொழி எம்.பி ஆனதே எங்கள் தயவால்தான். இனி அதுபோன்ற ஒரு தவறை செய்யமாட்டோம்.

  திமுக இந்துக்களுக்கு மட்டும் அல்ல கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரிதான். இதை கிறிஸ்தவர்கள் உணர்ந்து பேச துவங்கிவிட்டனர்.

  திமுகவின் ஒரே நோக்கம் பதவிக்காக அதன் மூலம் கொள்ளையடிப்பதற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டோம். இனி ஒரு காலமும் திமுகவிற்க்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள்.

  பாஜகவை பொருத்தவரை நியாமாக நடத்தி வரும் திருச் சபைகளில் அவர்கள் தலையிடுவதில்லை. அவர்களை ஆரம்பத்தில் தவறாக புரிந்துவந்தோம். காரணம், பணத்திற்க்காக மதம் மாற்றம் செய்யும் பால். தினகரன், மோகன்.சி.லாஸரஸ் போன்றவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதிக்கு கணக்கு கேட்பதால், பணத்திற்க்கு ஆசைப்பட்ட சில போலி பாதிரியார்கள் பாஜகவை கிறிஸ்தவர்களின் பொது எதிரியாக மக்கள் மத்தியில் சித்தரித்து, ஒட்டு மொத்த கிறிஸ்தவ மதத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டனர். உண்மை அதுவல்ல, பிரதமர் மோடியின் ஆட்சியில் நியாயமாக கிடைக்க வேண்டியவைகள் எங்களுக்கு கிடைத்துதான் வருகிறது. எங்கள் உரிமைகள் மறுக்கபடுவதில்லை.

  பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரி என்றால் இதுவரை பல திருசபைகள் மூடியிருக்க வேண்டும். இந்து கோவில் நிலங்களில் இன்றளவும் பல கிறிஸ்தவ திருச்சபைகள், கல்லூரிகள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதை பத்தி அவர்கள் இதுவரை ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை. கட்டாய மதமாற்றத்தை மட்டுமே எதிர்க்கின்றார்கள்.

  பாஜக எங்கள் எதிரி என்றால், ஏன் இதுவரை மதம் மாறியவர்களுக்குக் கூட சாதி அடிப்படையில் அரசு வேலை, படிப்பில் சலுகைகள் அளிக்க வேண்டும்?

  திராவிடம், இந்துத்வா என பிரிவினைவாதம் பேசி கிறிஸ்தவர்களை இந்துக்களிடமிருந்து, வோட்டு அரசியலுக்காக பிரித்து வைத்ததே திமுகதான்.

  இனியும் திமுகவை நம்ப மாட்டோம், தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என உண்மையான கிறிஸ்துவின் விசுவாசிகள் முடிவெடுத்துள்ளோம்.

  எங்கள் பரமபிதா கர்த்தர் எங்களை வஞ்சித்து வரும் திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்

  • அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »