spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்நடிகை மேகன் மார்க்லேவுடன் கோலாகலமாய் நடைபெற்ற பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம்!

நடிகை மேகன் மார்க்லேவுடன் கோலாகலமாய் நடைபெற்ற பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம்!

- Advertisement -

england harry megan marriage
பிரிட்டன் இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் மகன் ஹாரியும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணத்துக்காக அரச குடும்பத்தினர், பொதுமக்கள் என 2,640 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

 

இந்நிலையில் சனிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் அரண்மனைக்கு விருந்தினர்கள் வர, திருமணத்துக்காக அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இசை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியின் அலையை விருந்தினர்களுக்கும் மணமக்களுக்கும் ஏற்படுத்தியது. பிரிட்டன் அரச குடும்பத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட திருமண நிகழ்வைக் காண பிரிட்டனிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ரசிகர்கள் முந்தைய நாள் இரவே சாலைகளில் காத்திருந்தனர்.

இத்தனை பேர் இருந்தாலும், அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் 600 பேருக்கு மட்டுமே தேவாலயத்துள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் வெளியே இருந்தபடி, திருமண வைபவத்தைக் கண்டு களித்தனர். திருமண நிகழ்வுக்கு சற்று முன்னர் மணமகன் ஹாரி தமது சகோதரர் வில்லியமுடன் ராணுவ சீருடையில் வந்தார். இதைத் தொடர்ந்து மணமகள் மேகன் மார்க்லே, தமது தாய் டோரியா ராக்லாண்டுடன் பழமையான ரோல்ஸ் ராய்ஸ் காரில் அரண்மனைக்கு வந்தார்.

மணமகள் மேகனின் தந்தை தாமஸ் மாக்லே, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அதனால் அவரால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.

மணமகளுக்கு உரிய வெள்ளை கவுன் அணிந்து தேவாலயத்துக்குள் வந்தார் மேகன் மார்க்லே. அவரை, இளவரசர் ஹாரியின் தந்தை சார்லஸ் கரம் பிடித்து வரவேற்று ஹாரியின் கரங்களில் ஒப்படைத்தார். பின்னர் இருவரும் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக, மணப்பெண் தோழியர் ஆறு பேருடன், இளவரசர் வில்லியம்ஸின் குழந்தைகள் பிரின்ஸ் ஜார்ஜ், பிரின்ஸ் சார்லோட்டே உள்ளிட்ட நான்கு குழந்தைகள் ‘பேஜ்பாய்ஸ்’ ஆகப் பின் தொடர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் மேகன் மார்க்லேவை கோட்டைக்குள் அழைத்துச் சென்றனர். தாய் டோரியா ராக்லாண்டுடன், மேகன் மார்க்லே செயின்ட்.ஜார்ஜ் சர்ச்சின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர், இங்கிலாந்து ராணி தனக்கு பரிசளித்த விலையுயர்ந்த வில்ஷே தங்கம் கொண்ட மோதிரத்தை அணிந்திருந்தார். இளவரசர் ஹாரி ஒரு பிளாட்டின மோதிரத்தை அணிந்தார். தொடர்ந்து திருமண அடையாளமாக மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இந்தத் திருமண விழாவில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பிரபல அமெரிக்க தொகுப்பாளர் ஒப்ரா வின்ஃபரே, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் உள்ளிட்ட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டு திருமண தம்பதியை வாழ்த்தினர்.

2,000க்கும் மேற்பட்டோர், வின்ட்சார் கோட்டையில் கீழ்த் தளத்திலிருந்து இந்த நிகழ்வைக் காண அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்து மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப் பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe