10/07/2020 2:10 PM
29 C
Chennai

தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!

சற்றுமுன்...

“நான் இங்க டிஎஸ்பி.,யா இருக்குற வர உன்னால தொழில் செய்ய முடியாது”: புகாரளிக்க வந்தவருக்கு மிரட்டல்!

குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை!

விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!
ab709287e16f6f48f018f20507ab1d51?s=120&d=mm&r=g தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். |* சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |* விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். |* சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். |* இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Kanchi varadarajaperumal temple uthsav தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாம் நாள் உத்ஸவத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறால் பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

நேற்று வைகாசி விசாக நம்மாழ்வார் சாத்துமுறை திருவிழாவும், பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாள் உத்ஸவமும் ஒன்று போல் வந்தது. இப்படி பல முறைகள் வந்திருக்கிறது. சென்ற வருடமும் இது போல் வைகாசி விசாக நம்மாழ்வாழ்வார் சாத்துமுறை, பிரம்மோத்ஸவத்தின் ஒருநாளில் வந்து சுமுகமாக நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடம், நேரமின்மையை திடீரென புகுத்தி, தேவையற்ற பிரச்னைகளை கோயில் வடகலை அர்ச்சகர்கள் செய்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இன்னொரு பிரிவான தென்கலை வைணவர்கள். அதற்குக் காரணம், நம்மாழ்வார் சாத்துமுறையை அந்த இடத்தில் வைத்து நடத்துவதற்கு குறிப்பிட்ட வடகலைப் பிரிவில் சிலர் விரும்பாததே காரணம் என்று புகார் கூறுகின்றார்கள்.

நம்மாழ்வார் வைணவ மரபின் ஆணி வேராகத் திகழ்ந்தவர். வேளாள குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வார் இயற்றிய தமிழ் வேதங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவைதான் வைணவ மரபுக்கே அடிப்படையாகத் திகழ்கின்றன. வைணவர்கள் போற்றிக் கொண்டாடும் தமிழ் மறைகள் என, வடமொழியில் திகழும் நான்கு வேதங்களின் சாராம்சத்தை தமிழில் அளித்தவர் நம்மாழ்வார். ஆழ்வார்களின் தலையாயவர் என்றும், தமிழ் மறைகளாகப் போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உலகுக்கு மீண்டும் அளித்தவர் என்றும் போற்றும் நம்மாழ்வாரின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத் திருநாள், அனைத்து வைணவ ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் பிற் காலத்தில் வடகலை வைணவப் பிரிவினரின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், ஆலயத்தின் பல சந்நிதிகள் வடகலை திருமண் காப்புடன் மாற்றம் பெற்றன. ஆயினும் நம்மாழ்வார் சந்நிதி உள்ளிட்ட ஒரு சில சந்நிதிகளில் இன்றும் தென்கலை திருமண் காப்புடன் பாரம்பரிய உத்ஸவங்கள், முறை மாறாமல் வழிவழியாக நடத்தப் பெற்று வருகின்றன.

kanchi varatha garudasevai1 தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

ஆனால், நேற்று திடீரென நிகழ்ந்த ஒரு நிகழ்வு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தமிழ் வேத பிரபந்தங்கள் ஓதப்பட்டு முடிக்கப்படாத நிலையில், வடகலை பிரிவைச் சேர்ந்த சிலர் உள்ளே புகுந்து கலாட்டா செய்து, அடிதடி ரகளையில் ஈடுபட்டு, ஆபாசச் சொற்களைப் பேசி, பெருமாளை துணீயைப் போட்டு மூடி, ஏதோ போல் எடுத்துச் சென்றுள்ளனர். இதை அடுத்து, பலரும் தங்கள் அதிருப்தியை கோயில் செயல் அலுவலர், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோருக்கு புகார்களாக எழுதியுள்ளனர்.

ராமானுஜ சாம்ராஜ்ய சபா அமைப்பின் சார்பில் அனுப்பப் பட்டுள்ள புகாரில், 29-5-2018 அன்று நடந்த நிகழ்வுகள் கோடானு கோடி ஸ்ரீவைஷ்னவ பகவத் பாகவதர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

நம்மாழ்வாரையும் வேளாள குலத்தையும் இழிவு படுத்தும் விதமாக, சிலர் பேசியதும், நம்மாழ்வார் சாத்துமுறை நடத்த விடமாட்டோம் என்று, நம்மாழ்வார் சாத்துமுறையை செய்யவிடாமலும், தமிழ் வேதமான திவ்ய பிரபந்தம் சேவிக்க விடாமலும் தடுத்து, சாத்துமுறை தீர்த்தத்தை கொட்டி எங்கள் வேளாளர் இனத்தையே கேவலப் படுத்தி உள்ளார்கள். எனவே “நம்மாழ்வார் சாத்துமுறையை நடத்தி சாத்துமுறை தீர்த்தம் சடாரி, நம்மாழ்வார் மரியாதையும் நடத்த வேண்டும்.

தவறும் பட்சத்தில் நாங்கள் வேளாளர் குல மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்… – என்று கோவிந்த ராமானுஜ தாசர் என்பவர் கையெழுத்திட்டு புகார் அனுப்பியிருந்தார்.

சூரிய பிரபை புறப்பாடுக்கும் கருட சேவைக்கும் நடுவே இடைப்பட்ட நேரத்தில், பெருமாள் இந்த நம்மாழ்வார் சாத்துமுறை உத்ஸவத்தில் வந்து நம்மாழ்வார் மரியாதைகளைப் பெற்றுக் கொள்கிறார். இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் மரபு சார் விழா. இந்நிலையில், இந்த உத்ஸவத்தில் ஏற்படுத்தப் பட்ட குளறுபடிகளும் பிரச்னைகளும் குறித்து, நாம் விசாரித்தபோது, அங்கிருந்தவர்கள் கூறியவை…

பொதுவாக சூரிய பிரபை புறப்பாட்டுக்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். அதன் பின்னர், உத்ஸவப் பெருமாள் மீண்டும் தன் சந்நிதிக்கு விரைவாகவே திரும்பி விடுவார். மே 28ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4.45க்கு சூரிய பிரபை புறப்பாடு தொடங்கியது. எனவே, இரவு 9 மணிக்குள் பெருமாள் தன் சந்நிதிக்கு திரும்பி விடுவார் என்றும், 9.30க்கெல்லாம் நம்மாழ்வார் சாத்துமுறைக்காக நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்து விடுவார் என்றும் எதிர்பார்த்தோம்.

ஆனால் வேண்டுமென்றே ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அன்று வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள் 10 மணிக்குதான் பெருமாளை சந்நிதிக்கு எழுந்தருளச் செய்தார்கள். ஆனால் அதன் பின்னரும் அரை மணி நேரத்துக்கு வேதச் சாற்று என்பதை இழுத்தார்கள். அதன் பின்னர் பெருமாள், நம்மாழ்வார் சந்நிதிக்கு எழுந்தருளும் போது மணி 11 ஆகிவிட்டது.

நம்மாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியதால்தான் பெருமாள் கோயிலுக்கு இவ்வளவு பெருமை. அதனால்தான் அது திவ்ய தேசம் எனும் அந்தஸ்தைப் பெற்று பக்தர்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. அப்படிப்பட்ட நம்மாழ்வார் சந்நிதியில் மரியாதை அளிப்பதும் பூஜைகள் செய்த பின் பெறப்படும் தீர்த்தத்தைப் பெறுவதும் மரியாதையும் கௌரவமும் நிறைந்த ஒரு நிகழ்வு.

இதில், தென்கலையார்கள் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களும் வேளாளர் குலத்தினர் உள்ளிட்ட வைணவ தாசர்களும் பெருமளவில் கலந்து கொண்டு நம்மாழ்வாரின் பிரபந்தப் பாசுரங்களை, தமிழ் வேதத்தை பெருமாளே காதுபடக் கேட்பதான நம்பிக்கையில் ஓதுவார்கள். பொதுவாக 330 பாசுரங்களை, கிரமப்படி மெதுவாக சொல்லி முடிக்க இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால், அன்று பெருமாள், நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்ததே 11 மணி என்பதால், பாசுரங்களை வேகமாக அவசர கதியில் சொல்லி முடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது.

அப்படி 330 பாசுரங்களை குறைந்த காலத்துக்குள் சொல்லியாக வேண்டும் என்ற அவசர கதியில், வேக வேகமாக அனைத்துப் பாடல்களையும் சொல்ல முயற்சி செய்தார்கள். பொதுவாக, இவ்வாறு பாசுரங்கள் சொல்லத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட நேரம் கடந்ததும், பெருமாளுக்கு திருவாராதனம் தொடங்க வெளியில் வந்து கேட்பார்கள். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும், நாங்கள் திருவாராதன பூஜை செய்ய தொடங்கலாமா என்று கேட்பார்கள். அவ்வாறு கேட்டுக் கொண்டு திருவாராதனம் செய்யத் தொடங்கி, திருவாராதன பூஜை முடியும் நேரத்தில், சரியாக வெளியில் பிரபந்தப் பாசுரங்களும் ஓதப் பட்டுநிறைவை அடையும். அதன் பின் சாத்துமுறை, தீர்த்த பிரசாத விநியோகம் எல்லாம் நடக்கும். இது எந்தக் குழப்பமும் இல்லாமல் இதுநாள் வரை நடந்து வந்தது.

ஆனால், நேற்று திடீரென வடகலை பிரிவினர் வேண்டுமென்றே திருவாராதனத்தை முன்கூட்டியே தொடங்கினர். நேரமின்மையைக் காரணம் காட்டி, ஆழ்வாரின் செந்தமிழ்ப் பாசுரங்களை சொல்ல விடாமல் திட்டமிட்டு தடுத்தனர். அதுவும் ஒன்றரை மணி நேரத்தில் பாசுரங்களைச் சொல்லி முடித்து, சாத்துமுறை பாசுரங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், மேலும் 30 முதல் 40 நிமிடங்களே ஆகும் என்ற நிலையில், திடீரென உள்ளே புகுந்து, பெருமாளை சால்வை போட்டு மூடி, வாத்தியம் எதுவும் இல்லாமல் மயான அமைதியுடன் எடுத்துச் சென்றார்கள். பெருமாளுக்கு சாத்துமுறை நேரத்துக்காக வைக்கப் பட்டிருந்த தீர்த்த பாத்திரத்தில் இருந்து தீர்த்தத்தை எடுத்துக் கொட்டி விட்டு அராஜகத்தில் ஈடுபட்டார்கள்.

கருட வாகனம் காலை 4 மணிக்கு தொடங்கப்படும். அதற்கு முன்னர் அலங்காரம் செய்வதற்கு போதுமான நேரம் இருந்த போதிலும், நள்ளிரவு 1.30 மணிக்கே பெருமாளை அங்கிருந்து எடுத்துச் செல்வதிலேயே குறியாக இருந்து தமிழ்ப் பாசுரங்களையும் நம்மாழ்வாரையும் அவமதித்தார்கள். இத்தனைக்கும் உத்ஸவர் மூலவருக்கு மரியாதை செய்ய 5 நிமிடங்களும், சாத்துமுறைக்கு 12 முதல் 15 நிமிடங்களும், பொது பக்தர்களுக்கு நம்மாழ்வாரின் தீர்த்த பிரசாத விநியோகம் 15 முதல் 20 நிமிடங்களும், உபயதாரர்களுக்கு மரியாதை செய்ய 3 நிமிடங்களும் மட்டுமே தேவை என்ற நிலையில், அதற்குக் கூட அனுமதிக்காமல், கோயில் நிர்வாகத்தினர் உதவியுடன் அனைவரும் சேர்ந்து நம்மாழ்வார் சந்நிதியை விட்டு பெருமாளை எடுத்துச் சென்றனர்.

இதை எல்லாம் விட மிக மோசமான அதிர்ச்சிகர சம்பவமாக, கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் மற்றும் பரிஜாரகர் ஓரிருவர், தங்கள் வேஷ்டிகளை அவிழ்த்துக் காட்டி, உங்களால முடிஞ்சதைப் பாருங்கடா என்றும், இந்த வீடியோக்களை போட்டு உங்களால என்னத்தடா கிழிக்க முடியும் என்றெல்லாம் ஒருமையில் பேசி, பூஜை செய்யும் அர்ச்சகர் இனத்துக்கே இழிவைச் சேர்த்தார்கள் என்று மனம் குமுறுகிறார்கள் பக்தர்கள்.


இந்நிலையில் முதல் நாள்தான் இவ்வாறு அராஜகம் செய்தார்கள், மறு நாளும் (செவ்வாய்க்கிழமை இன்று) வைகாசிவிசாக நட்சத்திரம் மீதம் இருப்பதால், அந்த நம்மாழ்வார் சாத்துமுறை உத்ஸவத்தை இன்றாவது நடத்த ஏற்பாடு செய்யுங்கள், இந்த ஒரு உத்ஸவம் இந்த வருடம் நடக்காமலே போய் விட்டது என்ற அவப் பெயர் இருக்கக் கூடாது என்று கோயில் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலரைத் தொடர்பு கொண்டு மன்றாடிக் கேட்டும், அவர்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல், மெத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று உள்ளம் குமுறுகின்றனர் அந்த அன்பர்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் அந்த உத்ஸவத்தின் மீதத்தை நடத்தி, நம்மாழ்வாருக்கு மரியாதை தருவதை தொடர்ந்து நடத்தி முடித்துவிடலாம் என்று எண்ணிய தமிழ் வேத மரபைச் சேர்ந்த வைணவர்களின் கோரிக்கைக்கு வடமொழி வேத பிரிவைச் சேர்ந்த வடகலை வைணவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, இந்தப் பிரச்னை, அறநிலையத்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள், ஆர்.டி.ஓ., ஆட்சியர் என்று சென்றும் கூட எதுவும் நடக்கவில்லை.

தமிழுக்கும் தமிழ் மரபுக்கும் இந்தத் தமிழ் மண்ணில் நேரும் அவமானமாகவே இந்தச் செயல் கருதப் படுகிறது. பக்தனுக்காகத்தான் கடவுளே தவிர, ஒரு குறிப்பிட்ட சிலரின் கைப் பொம்மையாக கடவுள் இருப்பதில்லை. ஆனால், வடகலை பிரிவைச் சேர்ந்த ஒரு சிலரின் அராஜகத்தால், காஞ்சி கோயிலில் சர்ச்சைகள் மேலும் மேலும் தலை எடுக்கின்றன. வருங்காலங்களில் நம்மாழ்வார் உத்ஸவம் என்ற ஒன்றையே நிறுத்தி விடுவதற்கான சூழ்ச்சி வலைகளை வடகலை வைணவர்கள் பின்னுகிறார்கள் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் மறு பிரிவினர்.

நம்மாழ்வாரின் தமிழ் வேதங்களைக் கொண்டே, வேத விளக்கங்களைக் கொண்டே ராமானுஜர் என்ற மகான் பிரம்ம சூத்திரம் உள்ளிட்ட வடமொழி நூல்களுக்கு அழகிய தமிழில் விளக்கங்களை எழுதினார். நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!

47 COMMENTS

 1. வடகலையாருக்கு என்றுமே, உடையவர்காலத்துக்குமுன்பேகூட, விக்கிரஹம், அவதாரங்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், தமிழ் நூல்கள், கோவில்கள் முதலியவைகளில் பரிபூர்ண நம்பிக்கை கிடையாது; அவர்களுக்கு உருவம் அற்ற பரப்ரஹ்மம், யாகம், ஹோமம், அனுஷ்டானம் இவைகளில்தான் நாட்டம்! நாம் பகவான் தன்னுடைய சுய இச்சையினால் விக்கிரஹத்துக்குள்ளும், தமிழினுள்ளும், அவதாரங்களினுள்ளும், ஆச்சாரியார்களினுள்ளும், ….ஆவிர்பவித்து உள்ளான் என்று கொள்கிறோம்; அவர்கள் தங்களுடைய ஆச்சார அனுஷ்டானங்களாலேயே விக்கிரஹங்கள், கோவில்கள் எல்லாம் விளங்குகின்றன; அதனால் நம்மைவிட இன்னமும் பலமடங்குகள் பரிமணிக்கச் செய்யமுடியும் என்றும் அருதி இட்டுக் காட்டுகின்றார்கள்!! பகவான் ஏதோ காரணங்களுக்காக அவர்களில் அநேகம் பேர்களுக்கு நல்ல personality, நிறம், குரல், செல்வம், பதவிகள், இலக்கண இலக்கியங்களில் பாண்டித்யம், ஜனங்களை ஈர்க்கும் சக்தி முதலியவற்றை அனுகிரஹித்து இருக்கிறார்; அதனால் கோவில்களுக்கு முண்டியடித்துக் கொண்டு வந்து எல்லாவற்றையும் ‘ வடகலை ‘ ஆக்கிவிடத் துடிக்கிறார்கள்! அதற்காகவே வேதாந்தச்சாரியாரையும் இராமானுஜாச்சாரியாருக்கு இணையாகவும் மணவாளமாமுனிகள், பிள்ளைலோகாச்சாரியார் முதலியவர்களை இல்லாமலும் செய்கிறார்கள்!! நம் தென்கலையார்களுக்குள்ளும் அநேகம் ஏற்றத் தாழ்வுகள்; உலகரீதியான சௌக்கியங்கள், பதவிகள் வேண்டி ஏதோ சமாதானங்கள் சொல்லி சமரசம் சொல்லிக் கொள்கிறோம்! எப்படி இந்தியாவில் ஹிந்து என்பது தன் நிலையை விட்டு விலகி மற்றவர்களுடன் அனுசரித்துப்போகும் கட்டாயத்துக்கு நிர்பந்தப்படுகிறதோ அப்படித்தான் நம் தென்கலை ஸம்ப்ரதாயமும் மற்றவர்களாலும் நம்மாலும் நிர்பந்தப்படும் ! பழைய நிலையில் பக்குவப்பட்ட சிலருக்குத்தான் இந்த மாற்றங்களின் வலி!! மற்றவர்களுக்கு இது ஒரு பொருட்டே அல்ல!!

 2. Though the incident is unfortunate we should restrain from making comments which will agravate the situation .The words( arragant vadagalai) could have been avoided

 3. When there is short of time to receive full pasuram there is a permitted way of reciting pasuram (munnadi pinnadi)adivaravu .You can see this at the end of the pasuram in the book itself. Do not find fault with any vaishnavate whether thenkalai or vadkalai. Our aim should be to make the situation calm..Let us all pray that no more quarel among srivaishnavaite

 4. மனிதனாக பிறப்பதற்கு மாதவம் செய்திருக்கவேண்டும் .அதிலும் இப்பிறவியில் ஸ்ரீவைஷ்ணவனாக பிறந்திருப்பது பெரும் பாக்யம் .பெருமாளின் முன் நாம் எல்லோரும் சமம் . தாழ்ந்த குலத்தில் பிறந்த திருப்பானாழ்வரை கோவில் அர்ச்சகரின் தோள்களில் சுமந்து கொண்டு வர செய்து தர்சனம் கொடுத்த பெருமாளின் முன்னால் நமக்குள் வேற்றுமை பார்த்துக்கொண்டு தகாத வார்தைகளாலோ செய்கையாலோ அவமதித்தால் பெருமாள் நம்மை மன்னிக்கவே மாட்டார் .வைஷ்ணவத்தையும் சனாதன தர்மத்தையும் வளர்த்த நம்மஆழ்வார் எதிராஜர் தேசிகர் மணவாளமாமுனிகள் ஆசார்யர்கள் வழியில் வைஷ்ணவத்தையும் சனாதன தர்மத்தையும் வளர்க்க நாம் கூடியிருந்து குளிர்ந்து valarppom

 5. Nam yellorume perumalin adiyarkal Nam moothathaiyarkal yerpaduthia padi nerriyil vadakalai,thenkalai yenru yettu kolkirom .Nam yellorum sagothargal.perumale Nam yellorukkum that thanthaiyum avargal .Nam andal Nachiyar pasurappadi koodiirndu verrumai parkkamal perumalin utsavangalai kondaduvom.

 6. Whoever has wrong intention in disturbing this event committed a great sin. Nammazhwar is supreme next to god for Thenkalai vaishnavan, doesnt matter what caste he belongs to….human first god next. arrogant vadakalai…they convert all temples…..cheap and narrow mind..

 7. Moreover Vishaakam nakshatrm ended on Monday itse lf and no continuation on Tuesday. Information posted by editor was wrong
  Also, As per my information, Tenkalai swamis , don’t complete full 4000 paasuram during Sri Bhashyakaarar tirunakshatram, and only first and last verses for many paasurams

 8. Entire commotion started when one Tenkalai person intervened during holi Mariyadai to Swamy Nammazhwar and pushed Sri Sataari , Parivattam , prasadam etc. and created commotion deliberately
  Whenever commotion increased, archakas, to protect Sri Vardarajar, started covering the moorthy and kainkaryaparas had to quickly carry Lord outside
  Honestly Vadakalaaiyaars also are equally happy with Tamil Veda Paaraayanam and Nammazhwar mariyaadhai

 9. Really Namazvar means namatu azvar such an azvar who is revered as a jewel has been insulted surely in vaishnavam Bagavata kainkaryam is great than Bahavat kainkaryam any vedic vadagalai scholar will accept it. But in general since Desikar did most of his works in sanskrit they have a liking. But this4000 divyaprabantam by 12 alvars known as dravida vedam. Alvars rendered these4000 practically havingvthe darsan of God which ever temple they visited and dedicated the pasurams.No tengalai sect will talk ill of Desikar. As he had the darsans of Narashima of Ahobalam and hayagreevar gave darsan and visdom to him

 10. ஒரு விஷயம் இவர்கள் புரிச்சிகளை கடவுள் எல்லாருக்கும் ஒன்னு ….வரதர் ஒரு ராஜா அவர் எல்லாருக்கும் மரியாதை செய்பவர் … பலரின் மரியாதையை அவர் சாதி மத பாகுபாடு இன்றி பெறுபவர் …. எந்த செயல் அவரையும் நம்மழுவர் என்னும் மிக பெரிய வரதராஜ பெருமாளின் பக்தரை அவமானம் படுத்தும் வித மக அமைய்ந்து உள்ளது .

  பொதுவாகவே வரதர் கோவிலில் வரும் பக்தர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது ஒண்டு. எதை எல்லாரும் கண்டிக்க வென்னும் வரதர் புகழ் எப்போதும் ஒங்க வென்னும் ஆறநிலைய துறை நின்னைத்தால் வரதர் கோவிலை திருப்பதி அல்laவுக்கு கொண்டுசெல்ல முடியும். வராத வராத வராத

 11. Sir the issues happened at swamy namalwar sannidi. This sannidi belongs to thenkalai sect and perumal koil is under vadakalai sect. This situation could have been handled in better way such as win win situation.

 12. Earlier this was an thenkalai temple. Later date this is converted as வடகலை

  Moreover it is not so as you said, in many temples the thenkalai are archagars to vadakalai perumal and vice versa eg. Oppiliyappan koil and Mannargudi

 13. சரி உண்மையில் நடந்தது என்ன சொல்லுங்கள் சந்தோஷ் குமார் அவர்களே ?

 14. வடகலை will only come.. no doubt.. after all its kali yugam.. time for devils and rakshasas. so yes vadakalai will be there. the whole world can see wht you folks have been doing there in the temple thru these videos. so cut teh crap and dont say it is biased. videos cant lie. Luckily for the outside people like me, it is not vadakalai video!! Let the people behind this disaster be burnt alive on earth and burn in hell forvever. Let their future generation get destroyed and not be spared. Deva perumal ah iruttil konda sendra nabargal vazhvu irutta naasama pogattum. nammazhwar ku mariyadhai selutha vidathavargal nasama povargal.kudumbam azhiyattum. vayaru erinju solren koondoda kudumbathoda nasama povargal.

 15. எனக்கு தெரிந்து வரதராஜர்கோவில் உள்ளேயே பிராமணர்கள் கண்ட கண்ட பாக்கு போட்டு கோவில் உள்ளே துப்புவதும்.காதில் கேட்கமுடியாத கெட்ட கெட்ட வார்த்தை பேசுவதும் பல நேரங்களில் நானே பார்த்து உள்ளேன்.இவை எல்லாம் பார்த்தால் ஒரு சாமானியனான எனக்கு குழப்பங்களும் கோபமும் வருது.

 16. Hey idiots, Muslims and Christians are waiting for us to divide ourselves and convert us/eliminate Hinduism and here you guys are fighting between two small groups. Shame on everyone involved.

 17. இது வேண்டுமென்றே எழுதப் பட்டுள்ள செய்தி. அதிலும் தமிழ் மறை தமிழ் மறை என்று திரும்ப திரும்ப சொல்வது, வடகலை ஐயங்கார்கள் மட்டுமே உங்களுக்கு எதிரிகள் (ஸமுஸ்க்ருதம் ஓதுவதால்) என்று ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு சொல்வது பொல இல்லை?

 18. உங்கள் ஒருதலை பட்ச ஆதங்கம் புரிகிறது. மாற்றினாலும் மீண்டும் வடகலைதான் வரமுடியும். கனவு காண வேண்டாம்.

 19. இது அப்பட்டமாக ஒருதலைப் பட்சமாக எழுதப்பட்டுள்ள செய்தி. மிகவும் கண்டிக்கதக்கது. என்னடா கிடைக்கும் சண்டயை தொடங என்று காத்துக்கொண்டு இருக்கும் கூட்டதிற்க்கு ஆதரவாக எழுதப் பட்ட ஒன்று.

 20. Kaala kaalamaaha indha sandai kaanchiyil prasiddham.iru pirivu katruarindavargsl koodi nammalar mariyaadhai nadaipera muyarvjikkanum srirangathilum vadagalai ooduruvi thondharsvu tharugiraargsl aanaal ramanujar kattalayaal asambaavifhangal illai.

 21. I think they not hear Vedata guru upyasam .. He itself described that its easy way to reach swamy with great Tamil pasuram… But people like u. Using hes Veda kila sambratayam but not fellow r accpt what he said about Tamil pasuram very Sham. Asikam first normal bramins should not come near savai said only vaishva nd devotees of ramanuja nd vedata achariyan only should allow..

 22. நாலு சுவதுக்கு உள்ளயா…..உங்க அப்பன் வீட்டு சொத்தா அது….அப்போ அது மக்களுக்கான கோயில் இல்லையா…disrepute to our community….அப்படினு ஒன்னு இருக்க என்ன…அடிச்சிக்கிட்டு சாவுங்கடா…அப்பதான் காரி துப்ப முடியும்…

 23. To this effect today on the return trip Sesha vahanam the Kodai fell down leaving the Perumal with only one Kadai, half exposed to hot sun. This happened in front of Police Station at Vishnu Kanchipuram. Tamil nadu government should replace all the Vadkalai staff in the temple.

 24. Those who behaved in the most despicable manner in the temple will be punished by Lord Varadaraja Perumal Himself! The so-called Vaishnavas have brought disrepute to the community and made themselves the laughing stock in society!

 25. I did not mean the text portion of neration, but the objectionable element of dovetailed videos, which is of our in-house happening with in 4walls and brings disrepute to our community.

 26. ஆழ்வார் அவரையும் வாய்மொழியும் ஓதயார்
  போழ்திலை என்று விலக்குவார் — பாழ்நரகில்
  வீழ்வார்கள் அன்றி திருமாலும் தாழ்வவர்க்கு
  சூழ்தரச் செய்து துயக்கு.

 27. குழாயடி சண்டையை மிஞ்சிவிட்டது இவர்கள் இங்கு நடத்தியிருப்பது அமைதியாய் பெருமாள் சன்னதியில் நடக்கவேண்டிய உற்சவம் அடிதடியில் இறங்கியிருப்பது அசிங்கம்

 28. The law should not bend for one sect (though they are financial powerful).In the name of donor most of the temple has become vadakali, no donor has the right to change the exising system & procedure including namam (in SriRangam donor intervention is too much). If the dinor does not agree for the existing namam / pratices HR&C will take care.
  Very pathetic act. If they hide the truth and doing attracity they will be cursed by Sri Maha Desikan and Srimad Ramanujar and answerable to supereme power Lord Vishnu.

 29. எப்பவுமே கஞ்சி கோவில இதே பிரச்சனை , இவங்களுக்கு வானத்துல இருந்து குதிச்சாங்கன்னு நினைப்பு , இப்படிலாம் சண்டைபோட்டுட்டு பெருமாளுக்கு திருவாராதனம் பண்ண பெருமாள் ஏத்துப்பார்ன்னு நினைப்பா , மோக்ஷத்துக்கும் உங்களுக்கும் கோடி மைல் தூரம் இருக்கு

 30. வடகலையார் தமிழ்வேதத்தை அவமதிப்பது ஆழ்வாரின் சன்னதியில் தவறாகநடந்தது நடவடிக்கைதேவை வரதன் தமிழ்வேதத்தின்சொத்து மக்கள்வரதனின்சொத்து ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல்வாழி ஆழ்வார் எம்பெருமானர்ஜீயர்திருவடிகளேசரணம் இதுவே வைணவம். வைணவத்தைசிதைக்கும் எந்தசக்தியும்முறியடிக்கபடும் பாகவதர்களின் ஏழுச்சி பொங்கும் வடகலையார் திருந்தவேண்டும் இல்லை திருத்தப்படுவார்கள் எச்சரிக்கை அரசுநிர்வாகம் வேடிக்கைபார்க்கிறது கண்டிக்கதக்கது நடவடிக்கைஎடுத்ததுமக்களுக்கு தெரியவேண்டும் விளம்பரமாக நோட்டீஸ் போட்டுவினியோகிக்கவேண்டும் நோட்டீஸ்போர்டில் பதியவைக்கவும்.

 31. it is true all the temples belong to thenkalai only. they are only guardian \tosafeguard all the temp;les.
  every one know this. let they give the answer to god who change the thiruman

 32. ஒரிஜினல் அல்வார்த்திருநாகரி உள்ள திருமண் எங்க மாறுதோ, அங்க கலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...