மோடியை சுற்றி வளைத்த முதல்வர்கள்; என்ன பேசினார்கள்?

நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மோடியை சுற்றி நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

பாஜக., தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகிய பின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை முதல்முறையாக சந்தித்தார். மேலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பிணரயி விஜயன் உள்ளிட்டோரும் மோடியை சுற்றி நின்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தை நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பிய சந்திரபாபு நாயுடு, அதற்கு ஆதரவு தருமாறு மம்தா பானர்ஜி, பினரயி விஜயன், குமாரசாமி உள்ளிட்ட மற்ற மாநில முதலமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.