திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது: ஹெச்.ராஜா ட்வீட்

சென்னை: திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

சென்னை: திமுக., ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை நேற்று திமுக., செயல்தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தார். அப்போது, ஸ்ரீரங்கம் கோயில் கீழ கோபுரம் அருகே அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் அளிக்கப் பட்டன. கோயில் அர்ச்சகர் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்ட போது நெற்றித் திலகத்தை அழித்துவிட்டார் ஸ்டாலின். தொடர்ந்து அவருக்கு கோயில் யானை மாலை அணிவித்தது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் பெயரில் சுக்ர தலமான திருவரங்கத்தில் சுக்ர ப்ரீதி யாகம் செய்யப் பட்டதாகவும், அந்த பிரசாதத்தைக் கொடுக்க வந்ததாகவும் தகவல் பரவியது. இருப்பினும் இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

ஸ்டாலினின் இந்தச் செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமூக இணையதளங்களில் ஸ்டாலினுக்கு எதிராகவும் அவருக்கு கோயில் மரியாதைகளை அளித்த பட்டர்களுக்கு எதிராகவும் சிலர் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இது குறித்து தனது கருத்து ஹெச்.ராஜா இவ்வாறு பதிந்துள்ளார்….

ஆத்திகராக இருந்தால் முழுமையாக இந்துக்களை மதிக்க வேண்டும். கோவிலில் யாகம் ஏற்பாடு செய்வது ஆனால் பொட்டு வைத்தால் அதை அழிப்பது என்பது இந்து நம்பிக்கையை அவமதிப்பதாகும். சிறுத்தையின் புள்ளிகளை ஒருபோதும் அழிக்க முடியாது. திமுக ஒருபோதும் இந்து உணர்வுகளை மதிக்காது.