உலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்

நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

யோகா, உலக மக்களை எல்லைகளை தாண்டி ஒருங்கிணைத்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆப்கன் அணி, இந்தியாவுடன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடியது. இது நமக்கு பெருமை அளிக்கிறது. அந்த அணியின் ரஷீத் கான் கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய சொத்தாக உள்ளார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடினார். வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், புகைப்படம் எடுக்க ஆப்கன் அணி வீரர்களையும் உடன் அழைத்து, சமூகம் ஒற்றுமையாக இருப்பதற்கான சிறப்பான வழியை காட்டியுள்ளனர். இளைஞர்களுக்கு முன் மாதிரியாக உள்ளனர்.

யோகா

யோகா, அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, மக்களை ஒற்றுமைபடுத்தியது. பணி நேரத்திலும், விமானப்படை, கடற்படை, ராணுவ வீரர்கள் யோகா செய்ததை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. நீர்மூழ்கி கப்பல், சியாச்சின், நடுவானில், பூமியிலிருந்து 15 ஆயிரம் கி.மீ., தூரத்திலும் பாதுகாப்பு படையினர் யோகா செய்தனர்.

டாக்டர்களுக்கு வாழ்த்து

சிக்கலான மருத்துவ சிகிச்சைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள் இந்திய டாக்டர்கள். அவர்களை நாம் நன்றி தெரிவிப்போம். டாக்டர்கள், நமக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நோயை குணப்படுத்துகின்றனர் . நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

100 வருடம்:

குருநானக் , மனித இனத்தை ஒரே இனமாக பார்க்க வேண்டும் என எண்ணியவர். 2019 ல் ஜாலியன் வாலா பாக் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து 100 வருடமாகிறது. இது அனைத்து மனித இனம் அவமானபட வேண்டிய விஷயம்.
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் முயற்சியே,, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி இந்தியாவிடம் இருப்பதை உறுதி செய்தது. 52 வயதில் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவ்வாறு பிரதமர் கூறினார்.