4 ஆண்டுகள்; 52 நாடுகள்; செலவு ரூ.355 கோடி! மோடிக்கு ஆன செலவு!

விடுப்பே எடுக்காமல் மக்கள் பணி செய்து வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது.

4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்றும், மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி என்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் –  ஆர்டிஐயில் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அலுவலகம், “4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இவரின் பயணத்துக்கு ரூ.335 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் 165 நாட்களை வெளிநாட்டு பயணத்தில் கழித்திருக்கிறார்” என கூறியுள்ளது.

விடுப்பே எடுக்காமல் மக்கள் பணி செய்து வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது.