தாத்ரா நாகர்ஹவேலியில் மருத்துவக் கல்லூரி: மோடிக்கு மக்கள் பாராட்டுக் கடிதம்!

தங்களது பகுதியில் கல்லூரி தொடங்கப்பட இருப்பதை அடுத்து அப்பகுதி இளைஞர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தபால் கார்டுகளின் மூலம் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளனர்.

தாத்ரா நாகர்ஹவேலியில் முதல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்காக பிரதமர் மோடிக்கு அப்பகுதி இளைஞர்கள் தபால் கார்டுகள் மூலம் தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

தாத்ரா நாகர்ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்லூரி கட்டடத்துக்காக ரூ.189 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2019-20 ஆம் ஆண்டு முதல் கல்லூரி இயங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தங்களது பகுதியில் கல்லூரி தொடங்கப்பட இருப்பதை அடுத்து அப்பகுதி இளைஞர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தபால் கார்டுகளின் மூலம் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளனர்.

இதை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இது ஊக்கமளிக்கும் வகையில் திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.