கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

இதன் படி, கூடங்குளம் அணு உலை கழிவுகளை சேமிக்க புதிய கட்டுமானம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மத்திய அரசுக்கான கால அவகாசத்தை 2022 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்.

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட உத்தரவிட முடியாது. கதிர்வீச்சு சாத்தியமுள்ள அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை உடனே கட்டுவது என்பது ஆபத்தில் முடியும் என்பதால் மத்திய அரசுக்கு 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் தேவைப்பட்டால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது.

இதன் படி, கூடங்குளம் அணு உலை கழிவுகளை சேமிக்க புதிய கட்டுமானம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மத்திய அரசுக்கான கால அவகாசத்தை 2022 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்.